மஹிந்திராவில் இப்படியொரு எலக்ட்ரிக் வாகனமா!! மொத்த இந்திய சந்தையும் எதிர்பார்த்து இருந்தது இதைதான்!
மஹிந்திரா விஷன் தார்.இ (Mahindra Vision Thar.e) எலக்ட்ரிக் 5-கதவு கான்செப்ட் தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கான்செப்ட்டில் இருந்து எதிர்காலத்தில் தார் வாகனத்தின் எலக்ட்ரிக் வெர்சன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கான்செப்ட் மாதிரியை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று மஹிந்திரா நிறுவனமும் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க திட்டமிட்டு வருகிறது. மஹிந்திரா பிராண்டில் இருந்து தற்போதைக்கு எக்ஸ்யூவி400 என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனையில் உள்ளது. இது எக்ஸ்யூவி300 காம்பெக்ட் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனாக விளங்குகிறது. இதேபோன்று, வருங்காலங்களில் எக்ஸ்யூவி700, எக்ஸ்யூவி500 என மற்ற எக்ஸ்யூவி கார்களிலும் எலக்ட்ரிக் வெர்சன்களை கொண்டுவர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

இவ்வளவு ஏன், புதியதாக எக்ஸ்யூவி900இ என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கூட மஹிந்திராவின் யோசனையில் உள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்றுதான் அடுத்ததாக வெளியீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தார்.இ என்ற தார் வாகனத்தின் எலக்ட்ரிக் கான்செப்ட்டை மஹிந்திரா நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் வெளியீடு செய்துள்ளது. மஹிந்திராவின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம், தார் ஆகும்.
மஹிந்திரா விஷன் தார்.இ கான்செப்ட் மாதிரி தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் ஃப்யுச்சர்ஸ்கேப் என்ற நிகழ்ச்சியில் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட இங்க்லோ-பி1 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் விஷன் தார்.இ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பிளாட்ஃபாரம் தாரை எலக்ட்ரிக் தோற்றத்திற்கு மாற்றியுள்ளது.
தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த கான்செப்ட்டின் மூலம் உருவாக்கப்படும் தார்.இ வாகனத்தின் வீல்பேஸ் 2,775மிமீ - 2,965மிமீ-க்கு இடையில் இருக்கலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. அதாவது, தற்போதைய தார் வாகனத்தை விட தார்.இ எலக்ட்ரிக் வாகனத்தில் உட்பக்க கேபின் அளவில் பெரியதாக இருக்கும். அதேபோல், தார்.இ வாகனத்தில் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் அதிகமாக இருக்கும் என்பதை விஷன் தார்.இ கான்செப்ட்டை பார்க்கும்போது தெரிகிறது.

மஹிந்திராவின் எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களை போன்று, தார்.இ எலக்ட்ரிக் வாகனத்திலும் 80kWh LFP வேதியியல் பிளேட் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படலாம். தற்போதைய தார் வாகனத்தை போன்று, தார்.இ வாகனமும் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் 4-சக்கர-டிரைவ் என இரு விதமான வெர்சன்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரியர்-வீல்-டிரைவ் வெர்சனில் அதிகப்பட்சமாக 228 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய வலேயோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படலாம்.
அல்லது, அதிகப்பட்சமாக 282 பிஎச்பி மற்றும் 535 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஃபோக்ஸ்வேகனின் எலக்ட்ரிக் ஸ்பின்னர் தார்.இ ரியர்-வீல்-டிரைவ் வாகனத்தில் வழங்கப்படலாம். மறுப்பக்கம், தார்.இ 4-சக்கர-டிரைவ் வாகனத்தில் மேற்கூறப்பட்ட இரு எலக்ட்ரிக் மோட்டார்களில் ஏதேனும் ஒன்றுடன் கூடுதலாக, அதிகப்பட்சமாக 107 பிஎச்பி மற்றும் 135 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்படும் என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் வாகனத்தின் அடையாளமே அதன் முரட்டுத்தனமான தோற்றம் ஆகும். அது அப்படியே தார்.இ கான்செப்ட்டில் மாடர்ன் டச்சில் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது, தார் வாகனத்திற்கே உண்டான ரக்டு தோற்றம் தார்.இ எலக்ட்ரிக் வாகனத்திலும் இருக்கும், ஆனால் சற்று பரிணாம வளர்ச்சியை அடைந்ததாக இருக்கும். மற்றப்படி, தார்.இ எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனம் இந்திய சந்தையில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற விபரங்களை மஹிந்திரா வெளியிடவில்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை போன்று தற்போதைய எஸ்யூவி கார்களே எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகப்படுத்தப்படும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் சூழலில், தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தின் எலக்ட்ரிக் வெர்சனை மஹிந்திரா வெளியீடு செய்துள்ளது. தார் வாகனத்திற்கே உண்டான பெட்டக வடிவில், ஆற்றல்மிக்க என்ஜின் உடன் உருவாக்கப்பட்டு உள்ளதால், தார் வாகனத்தை எலக்ட்ரிக் உலகிற்குள் கொண்டு செல்வதற்கு தார்.இ ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








