டாடா நெக்ஸான் இவியின் கதையை முடிக்க ஷோரூமுக்கே வர தொடங்கிருச்சு! மக்கள் கூட்டம் கூட்டமா படையெடுக்க போறாங்க!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாரும் எதிர்பார்த்திராத விலையையும் இந்த காருக்கு மஹிந்திரா நிர்ணயம் செய்தது.

ரூ. 15.99 லட்சம் அதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். தொடர்ந்து புக்கிங்குகள் இந்த காருக்கு ஏற்கப்பட்டு வருகின்றன. ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் வாடிக்கையாளர்கள் முன்பதிவை செய்துகொள்ளலாம் மஹிந்திரா அறிவித்துள்ளது. இந்த நிலையிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 400 அதன் டீலர்ஷிப்புகளை வந்தடையத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக படங்களும் இணையத்தில் வெளியாக தொடங்கி இருக்கின்றன.

எக்ஸ்யூவி 400

அதாவது, எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களில் கம்பீரமாக நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. வெகு விரைவில் இந்த காரின் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றது. அடுத்த மாதம் இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே ஷோரூம்களுக்கு எக்ஸ்யூவி 400 மின்சார காரை அனுப்பி வைக்கும் பணியில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. மேலே நாம் பார்த்த விலை வெறும் அறிமுக விலை மட்டுமே ஆகும்.

இந்த விலையில் குறிப்பிட்ட நபர்களால் மட்டுமே எக்ஸ்யூவி 400 இ-காரை வாங்கிக்க முடியும். ஒவ்வொரு வேரியண்டிலும் முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே ரூ. 15.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்க முடியும். 5001ஆவது யூனிட்டை வாங்குபவர்கள் சற்று அதிக விலையைக் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இந்த விலை பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்யூவி 400

இசி (EC) மற்றும் இஎல் (EL) என 2 விதமான வேரியண்ட்களில் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், இசி வேரியண்ட்டில் 34.5 kWh பேட்டரி பேக்கையும், இஎல் வேரியண்ட்டில் 39.4 kWh பேட்டரி பேக்கையும் மஹிந்திரா வழங்குகின்றது. ஆகையால், இரண்டின் ரேஞ்ஜ் திறனும் மாறுபடுகின்றது. இசி வேரியண்டில் ஓர் ஃபுல் சார்ஜில் 375 கிமீ தூரமும், இஎல் வேரியண்டில் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் விஷயத்தில் மாறுபட்டு காணப்படும் இந்த இரு வேரியண்டுகளும், மின் மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. ஆமாங்க, இரண்டிலும் 148 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. முதலில் மஹிந்திரா நிறுவனம் டாப் வேரியண்டான இஎல்-லையே டெலிவரி வழங்க இருக்கின்றது. இந்த பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்யூவி 400

Source: Carwale

இதைத்தொடர்ந்தே இசி வேரியண்டின் டெலிவரி பணிகள் ஆரம்பிக்கும். ஆனால், இதன் கால-நேரம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அடுத்து வரும் ஏதேனும் ஓர் பண்டிகை நாட்களில் இசி தேர்வின் டெலிவரி பணிகள் ஆரம்பிக்கலாம் என கூறப்படுகின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகளில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இன்ஃபினிட்டி ப்ளூ (Infinity Blue), ஆர்க்டிக் ப்ளூ (Arctic Blue), கேலக்ஸி கிரே (Galaxy Grey) மற்றும் எவரெஸ்ட் ஒயிட் (Everest White) ஆகியவையே அவை ஆகும்.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை சார்ஜ் செய்துகொள்ள மூன்று விதமான ஆப்ஷன்களை வழங்கி இருக்கின்றது. இதுதவிர மூன்று விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டு உள்ளன. அவை, ஃபன் (Fun), ஃபாஸ்ட் (Fast) மற்றும் ஃபியர்லெஸ் (Fearless) ஆகும். 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர், 7.2 kW சார்ஜர் மற்றும் 3.3 kW சார்ஜர்களைக் கொண்டு எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதில் முதல் ஒன்றைக் கொண்டு எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதேவேளையில், 7.2 kW சார்ஜரை பயன்படுத்தும் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜேற்ற 6.30 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இதைவிட அதிக நேரமாக சுமார் 13 மணி நேரத்தை முழுமையாக சார்ஜாக 3.3 kW சார்ஜர் எடுத்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்-ரூஃப், கார் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதிகள் சிலவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், பாதுகாப்பு வசதிகளும் மிக தாராளமாக கொடுக்கப்பட்டு உள்ளன. மிக முக்கியமாக 6 ஏர்பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவையும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 10, 2023, 10:59 [IST]
English summary
Mahindra xuv 400 e car reaches dealers showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+