அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 1 லட்சம் கார்கள் விற்பனை! எக்ஸ்யூவி 700 படைத்த புதிய மைல் கல்!

எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காரை 7 லட்சம் கார்களை விற்பனை செய்து மஹிந்திரா நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி கார்கள் விற்பனையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் விற்பனை வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு மார்கெட்டில் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இந்த காருக்காக புக்கிங் செய்து2 ஆண்டுகள் கூட காத்திருக்கும் நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

Mahindra XUV 700 1 Lakh Sales

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி இந்த எக்ஸ்யூவி 700 காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகி 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை அதற்குள் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அறிமுகமாகி 624 நாட்களுக்குள் இந்த சாதனையை அந்நிறுவனம் செய்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை புனேவில் உள்ள தனது ஆலையில் தயாரித்த விற்பனை செய்து வருகிறது. இது ஒரு 3 வரிசை சீட்டர் கொண்ட எஸ்யூவி காராகும். மார்கெட்டில் உள்ள டாடா சஃபாரி காருக்கு போட்டியாக இந்த கார் குளம் இறங்கியது. இந்த கார் இந்தியாவில் உள்ள பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பதற்கு குலோபல் என்கேப் சான்று சாட்சியாக உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரை எக்ஸ்யூவி 500 காருக்கு அடுத்த வெர்ஷன் காராக அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகும் போது ரூ11.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. தற்போது பல்வேறு விலையேற்றத்திற்குப் பிறகு ரூ14.01 லட்சம் என்ற விலையிலிருந்து ரூ26.18 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் டாப் வேரியன்ட் கார் ஆல் வீல் டிரைவ் காராக இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை எம் ஸ்டாலியன் பெட்ரோல் மற்றும் எம் ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் இன்ஜினை பொருத்தவரை 200 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் இன்ஜினை பொருத்தவரை 2 டியூனிங்கில் வருகிறது. ஒன்று 155 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மற்றொன்று 185 எச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த காரில் ஆல்வில் டிரைவ் சிஸ்டம் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த கார் 0-60 கி.மீ வேகத்தை வெறும் 5 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது, இந்த காரில் ஸிப், ஸேப் மற்றும் ஜூம் ஆகிய டிரைவிங் மோட்கள் உள்ளன.

இந்த எக்ஸ்யூவி 700 காரில் அடாஸ், 360 டிகிரி கேமரா, டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் டிரைவ் சீட், 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜிங், பானரோமிக் சன் ரூஃப், இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் டிஜிட்டல் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் மவுசு இருக்கிறது. ஏராளமான மக்கள் இந்த காரை புக் செய்து விட்டு இதன் டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். இந்த கார் இவ்வளவு விற்பனையை பெற்றத்தில் ஆச்சரியமில்லை, அடுத்த 1 லட்சம் விற்பனையை இதை விட சீக்கிரம் பெற்றுவிடும் என்பதிலும் சந்தேகம் இல்லை!

More from DriveSpark

Article Published On: Thursday, May 4, 2023, 16:00 [IST]
English summary
Mahindra xuv 700 recorded 1 lakh sales in 2 years
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+