"6 மாசம்தான் ஆச்சு அதுக்குள்ள தீயில கருகி நாசமா போச்சு".. புலம்பும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 உரிமையாளர்..

மஹிந்திரா நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700 SUV). இந்த காரே சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போதே திடீரென தீ விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் குல்தீப் சிங். இந்தியர்கள் தொடங்கி வெளிநாட்டினர் வரை பலர் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை ஆஹா, ஓஹோவென புகழ்ந்துக் கொண்டிருக்கின்றநிலையில், இந்த நபர் மட்டும் அந்த கார் மீது கடும் அதிருப்தியைக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்.

Mahindra xuv700 incident vehicle catches fire

எக்ஸ்யூவி 700 கார் பயன்பாட்டாளரான குல்தீப் சிங், "மஹிந்திரா, உங்களின் பிரீமியம் தயாரிப்பால் எனது குடும்பத்தின் உயிருக்கே ஆபத்து ஏற்பட இருந்தது. இதற்கு நன்றி. ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கார் தீ விபத்தில் சிக்கியது. காரின் வெப்பம் அதிகரிப்பதற்கு முன்னரே புகை வெளியேறி அந்த கார் தீ விபத்திற்கு ஆளாகியது" இவ்வாறே தன்னுடைய கடுமையான அதிருப்தியை சமூக வலை தளம் வாயிலாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

சமீபத்தில் குல்தீப் சிங் தன்னுடைய குடும்பத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் பயணித்திருக்கின்றார். அப்போது திடீரென காரில் புகை கிளம்பி தீ விபத்து ஏற்பட்டிருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக தானும் வெளியேறி, தன்னுடைய குடும்பத்தையும் அவர் வெளியேற்றிருக்கின்றார். வாங்கி சில மாதங்களே ஆகின்றகாரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் மூழ்கியது.

Mahindra statement

குறிப்பாக குல்தீப் அடைந்த அதிர்ச்சியை அளவால் குறிப்பிட முடியாது. இதன் வெளிப்பாடாகவே அவரின் டுவிட்டர் பதிவு அமைந்திருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரின் எஞ்ஜின் பகுதி மட்டும் தீயில் கருகி நாசமாகியது. கார் முழுவதும் தீ பரவுவதற்கு முன்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குல்தீப் சிங் தன்னுடைய டுவீட்டை ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா ரைஸ் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களையும் டேக் செய்து பதிவிட்டார். இந்த ஒற்றை பதிவு மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற எக்ஸ்யூவி 700-க்கு இழுக்கைச் சேர்க்கும் வகையில் அமைந்தது.

மேலும் நிறுவனத்தின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படும் வகையில் அமைந்தது. மஹிந்திராவின் புகழ்பெற்ற தயாரிப்பாக எக்ஸ்யூவி 700 காட்சியளிக்கின்றது. இந்த நிலையே பலரை தேடி வந்து இந்த காரை வாங்கச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே குறிப்பிட்ட எக்ஸ்யூவி 700 திடீர் தீ விபத்தில் சிக்கியிருக்கின்றது.

இந்த தீ விபத்தால் ஏற்பட்டிருக்கும் கலங்கத்தைப் போக்குவதற்கான முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் உடனடியாக களமிறங்கியது. மேலும், தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அது ஓர் குழுவையும் அமைத்தது. இந்த குழுவே தன்னுடைய முதல் கட்ட ஆய்வின் வாயிலாக கிடைத்த தகவலை வெளியிட்டிருக்கின்றது.

அந்த தகவலையே அதிகாரப்பூர்வ அறிக்கையாக மஹிந்திரா நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கம் வாயிலாக தற்போது வெளியிட்டு உள்ளது. காரில் மேற்கொண்ட ஆஃப்டர் மார்க்கெட்டிங் எலெக்ட்ரிக்கல் வேலையே தீ விபத்திற்கான காரணம் என்பது முதல் கட்ட ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருப்பதாக அது கூறி இருக்கின்றது.

தீ விபத்தில் சிக்கிய எக்ஸ்யூவி 700 காரில் சில ஒரிஜினல் ஒயர் பாகங்களில் டேம்பர் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இதுவே, தீ விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் என நிறுவனம் நிறுவனம் சந்தேகிக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வாகன தீ விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இந்த செயலே இருந்தது.

இதன் காரணத்தினாலேயே மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய தயாரிப்பு தீ விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுதான் என கை காட்டி இருக்கின்றது. மேலும், வாடிக்கையாளர்களை ஆஃப்டர் மார்க்கெட்டிங் எலெக்ட்ரிக் பொருட்களை வாகனங்களில் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் நிறுவனம் அறிவுறுத்தி இருக்கின்றது.

மேலும், நாங்கள் எங்கள் வாகனங்களை அதிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கின்றோம். வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வமற்ற நபர்கள் வாயிலாக வாகனங்களை மாடிஃபை செய்வதை தவிர்த்துவிடுவது நல்லது என்றும் அது கூறி இருக்கின்றது. இருப்பினும், ஆறு மாதமே ஆகிய கார் தீ விபத்தில் சிக்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஃப்டர் மார்க்கெட் பொருட்கள் பாதுகாப்பற்றவை. இதன் காரணத்தினாலேயே சந்தைக்கு பிறகான அங்கீகாரமற்ற எலெக்ட்ரிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. அவை எளிதில் வெப்பமடையலாம். விலை மலிவானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் ஆபத்து அதிகமாகத் தென்படுகின்றது. எனவேதான் சந்தைக்கு பிறகான பொருட்களுக்கு 'நோ' என கூறப்படுகின்றது.

Article Published On: Monday, May 22, 2023, 20:43 [IST]
English summary
Mahindra xuv 700 suv catches fire while driving
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+