Mahindra XUV 700 காரில் 195 kmph வேகத்தில் சீறிப் பாய்ந்த இளைஞர்! வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் அதிவேகமாக கார் ஓட்டுவது என்பது சட்டவிரோதமான ஒரு விஷயம் தான். ஆனால் பலர் சட்ட விதிமுறை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதி வேகமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இப்படியாகச் சமீபத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை ஒருவர் அதிவேகமாக ஓட்டி வீடியோ எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் நெடுஞ்சாலைகளில் ஓட்டும் போது ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

Mahindra XUV 700 195kmph speed

அதி அதிர்வுகள் இருக்காது, அடாஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இப்படியாகப் பல வசதிகள் இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குகின்றனர். இந்த காருக்கு மார்கெட்டில் மிகப்பெரிய டிமாண்டும் இருக்கிறது. புதிதாக இந்த காரை வாங்க வேண்டும் என்றால் நீண்ட காத்திருப்பு காலமும் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிக்கில் ரானா என்ற யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியானது. அதில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் சுமார் 195 கி.மீ வேகத்தில் கேரளாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பது பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் இந்த எக்ஸ்யூவி 700 கார் தெடாரந்து 192-195 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

இந்த வீடியோவை காரை ஓட்டிக்கொண்டிருந்தவரே தனது வலது கையால் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு இடது கையால் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக தற்போது பரவி வருகிறது. சமூகவலைத்தளங்களில் இதைப் பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சாலை விதி முறை மீறலுக்கு ஒரு சான்றாக மாறியுள்ளது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகமே 120 கி.மீ வேகம் தான். ஆனால் இந்த வீடியோவில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் 195 கி.மீ வேகம் வரை சென்றுள்ளது. இது முற்றிலும் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த வீடியோவில் உள்ள நபர் அதிவேகமாக கார் ஓட்டியது போலீசாருக்கு தெரியுமா இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதா என்ற விபரங்கள் தெரியவில்லை.

ஆனால் இப்படி அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது அவரது உயிருக்கு மட்டுமல்ல சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

குறிப்பாகத் தவறான லேன்களில் செல்வது, சிக்னல் செய்யாமல் யூ டர்ன் செய்வது, போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது எல்லாம் சாதாரணமாக நடக்கிறது. காரில் இப்படி வேகமாகச் செல்லும் போது என்னதான் பாதுகாப்பான காராக இருந்தாலும் சாலையில் மற்ற வாகன ஓட்டி இதில் ஏதாவது ஒன்றைச் செய்தாலும் விபத்து நிச்சயம்.

இது மட்டுமல்ல தேசிய நெடுஞ்சாலைகளில் நாய், ஆடு, உள்ளிட்ட விலங்குகளும் அவ்வப்போது குறுக்கே செல்வது என்பத இயல்பாக நடக்கிறது. அது குறுக்கே வந்தாலும் கார் அதன் மீது மோத வாய்ப்பு இருக்கிறது. இதனால் எந்த வாகனத்தை ஓட்டினாலும் மித வேகத்தில் கவனமாக ஓட்ட வேண்டியது கட்டாயம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 9:20 [IST]
English summary
Mahindra xuv 700 video 195kph kerala highway
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+