TN நம்பர் பிளேட் உடன் சுற்றிய மர்ம கார் இதுவா! இவ்ளோ கம்மியான விலையில் விற்பனைக்கு வரப்போகுதா! சந்தோஷம்யா!

இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ரகத்தை சேர்ந்த கார்கள், மிகவும் குறைவான விலையில் (Price) கிடைப்பதுதான், வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்திய சந்தையின் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டை பொறுத்தவரையில், தற்போதைய நிலையில், டாடா பன்ச் (Tata Punch) கார்தான் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்ச் கார்களை விற்பனை செய்து வருகிறது.

Mahindra XUV100 Spotted Testing

இது உண்மையிலேயே பிரம்மிக்க வைக்கும் விற்பனை எண்ணிக்கை என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை பார்த்து, மற்ற முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இதில், ஹூண்டாய் (Hyundai) முக்கியமானது.

ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் (Hyundai Exter) என்ற பெயரில், புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரை, வரும் ஜூலை 10ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்பட பல்வேறு அமர்க்களமான வசதிகளுடன், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை, மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் கண்ணையும் உறுத்த தொடங்கியுள்ளது. ஆம், மஹிந்திரா நிறுவனமும் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில் புத்தம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மிகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த காரை கூடிய விரைவில் நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Mahindra XUV100 Spotted Testing

ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் தற்போது இந்த காரை சாலை சோதனையில் ஈடுபடுத்த தொடங்கி விட்டது. அப்படி சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி (Spy Pictures) ரக காரின் ஸ்பை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.

மோட்டார்பீம் தளம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அனேகமாக இந்த கார்தான், மஹிந்திரா நிறுவனத்தின் ஆரம்ப நிலை காராக, அதாவது மிகவும் விலை குறைவான காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி100 (Mahindra XUV100) என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனெனில் எக்ஸ்யூவி100 என்ற பெயரை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே எக்ஸ்யூவி300 (XUV300) மற்றும் எக்ஸ்யூவி700 (XUV700) ஆகிய எக்ஸ்யூவி லைன்-அப் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த எக்ஸ்யூவி லைன்-அப்பில் மிகவும் சிறிய காராக, இந்த புதிய மாடல் இருக்கலாம்.

அனேகமாக இந்த புதிய காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 82 பிஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த காரில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை (Features) மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 5 அல்லது 5.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு கிடைத்து கொண்டுள்ள வரவேற்பை பற்றி நாங்கள் ஆரம்பத்திலேயே கூறி விட்டோம். அப்படிப்பட்ட ஒரு செக்மெண்ட்டில் மஹிந்திரா நிறுவனம் மிகவும் குறைவான விலையில் களமிறக்கவுள்ள எக்ஸ்யூவி100 காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் மிகப்பெரிய டிமாண்ட் உருவாகும்பட்சத்தில், மஹிந்திரா நிறுவனம் எப்படி டெலிவரி (Delivery) செய்ய போகிறது? என்பதைதான் நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே எக்ஸ்யூவி700, ஸ்கார்பியோ-என் (Scorpio-N) போன்ற கார்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் விரைவாக டெலிவரி செய்ய முடியாத வகையில், இந்த கார்களுக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) மிகவும் அதிகமாக இருக்கிறது.

இருப்பினும் வாடிக்கையாளர்கள் பலர் டெலிவரிக்காக பொறுமையாக காத்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் எக்ஸ்யூவி100 கார் விற்பனைக்கு வந்தால், மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என நாங்கள் கருதுகிறோம். மற்ற கார்களுக்கு குவிந்துள்ள முன்பதிவுகளை (Bookings) ஓரளவிற்கு க்ளியர் செய்து விட்டு, எக்ஸ்யூவி100 காரை மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு (2024) களமிறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 23:53 [IST]
English summary
Mahindra xuv100 spotted testing expected price engine features all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+