5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காருடன் மோதினா என்னவாகும்?.. ஒரிஜினல் சம்பவத்தின் வீடியோ!
இந்தியாவின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300). இந்த காரும் இந்தியாவின் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காரும் மலைப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300). இதேபோல் நாட்டின் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களில் ஒன்றே ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo). இந்த இரு கார்களும்தான் தற்போது நேருக்கு மோதிக் கொண்டு விபத்தைச் சந்தித்து இருக்கின்றன.

இரு கார்களும் மலைப் பாதை ஒன்றில் எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவம் எதிர்பாராத விதமாக அரங்கேறி இருக்கின்றது. இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் அவை இரண்டிலும் சேதம் பலமாக ஏற்பட்டு இருக்கின்றது.
எதிரில் வரும் வாகனம் கண்ணுக்கு தெரியாத அளவு வளைவாக பாதை இருந்ததே இந்த விபத்திற்கு முதல் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரை ஓட்டி வந்த டிரைவரின் கண் மூடித்தனமான டிரைவிங் ஸ்கில்லும் இந்த விபத்திற்கு மற்றுமொரு முக்கிய காரணமாக இருக்கின்றது.
அந்த டிரைவர் வளைவில் முன் கூட்டியே வலது பக்கம் திரும்பிவிட்டார். மலையில், குறிப்பாக, வளைவான மலை பாதையில் பயணிக்கும்போது திருப்பங்களில் சில யுக்திகளை கையாள வேண்டும். வலது பக்கம் திரும்ப வேண்டும் எனில் முதலில் சாலையின் இடது பக்கத்திற்கு மிக நெருக்கமாக சென்று விட வேண்டும். பின்னர் மெதுவாக வலது பக்கம் திரும்ப வேண்டும்.
அதுவே ஏற்றம் அல்லது தாய்வான மலை பாதை என்றால் வேகத்தைக் கட்டுக்குள் வைத்து திரும்ப வேண்டும். இத்தகைய யுக்திகளை அந்த டிரைவர் கையாண்டதாக தெரியவில்லை. இவ்வாறு செய்யும்போதே எதிரில் வரும் வாகனங்களுக்கும் போதுமான இடைவெளி கிடைக்கும். ஆகையால், அவற்றால் எந்த தடையும் இன்றி முன்னேறி செல்ல முடியும்.
இந்த விஷயத்திலேயே எக்ஸ்யூவி 300 ஓட்டுநர் தவறு இழைத்திருக்கின்றார். இதன் விளைவாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோக்ஸ்வேகன் போலோ இரண்டும் நேருக்கு நேர் மோத நேரிட்டிருக்கின்றது. இந்த விபத்தில் இரண்டு கார்களுக்கும் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து இருக்கின்றன. இரண்டும் பாதுகாப்பில் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.
ஆகையால், காரில் வந்தவர்கள் அனைவரும் பத்திரமாக இருந்திருக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் நேரவில்லை. அனைவரும் சிறு சிறு காயங்களுடன் பத்திரமாக காரை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இரண்டும் அதீத பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் என்பதால் பயணிகள் பத்திரமாக இருந்திருக்கின்றனர்.
இந்த விபத்தில் சிவப்பு நிற ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் முன்பக்கத்தின் ஒரு பக்கம் பயங்கரமாக நொறுங்கி இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஹெட்லைட், பான்னெட், க்ரில் உள்ளிட்டவை நொறுங்கிவிட்டன. இதேமாதிரியான ஓர் சேதத்தையே மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரும் சந்தித்து இருக்கின்றது.
மலைப் பாதை பயணம்: மலைப் பாதையில் பயணிக்கும்போது உற்சாகமான பயண அனுபவம் கிடைக்கும். ஆனால், அது அதிக ஆபத்தான பயணம் அது ஆகும். சிறிய தவறும் மிகப் பெரிய இழப்புகளுக்கு காரணமாகி விடும். எனவேதான் மலைப் பாதையில் பயணிக்கும்போது நல்ல அனுபவம் உள்ள ஓட்டுநர்கள் வாகனங்களை கையாள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
புதிய டிரைவர்களாக இருப்பின் உற்சாக மிகுதியில் விபத்தை ஏற்பட வைத்துவிடுர். மலைப் பகுதியில் அரங்கேறிய பெரும்பாலான விபத்துகள் புதிய வாகன ஓட்டுநர்களால் ஆனவையே. குறிப்பாக மலைப் பாதையில் பயணிக்கும் லேன் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, போதிய அளவு இடைவெளி மற்ற வாகனங்களும் பயணிக்கும் வண்ணம் விட்டு செல்ல வேண்டும்.
பெரும்பாலான மலை பாதைகளில் சாலைகள் பிரிக்கப்பட்டு இருக்காது. இதற்கு எப்படி வேண்டுமானாலும் வாகனங்கள் போகலாம் என்று அர்த்தம் இல்லை. தேவைக்கேற்ப வாகனங்கள் வளைந்து, நெளிந்து தடையின்றி செல்ல வேண்டும் என்பதற்காகவே சாலைகள் பிரிக்கப்படுவதில்லை. ஆனால், இதை பலர் அட்வான்டேஜாக எடுத்துக் கொள்கின்றனர்.
இதன் விளைவாக மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டிரைவரைபோல் விபத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இதேபோல், முந்திச் செல்வதும் துளியளவும் கூடவே கூடாது. குறிப்பாக, பிளைண்ட் ஸ்பாட், கொண்ட ஊசி வளைவுகளில் பயணிக்கும் பலமடங்கு கவனத்துடன் பயணிக்க வேண்டும். அப்போது மட்டுமல்ல மலைப் பாதை பயணம் முடியும் வரை அதிக கவனத்துடன் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பாதுகாப்பான பயணத்தை பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலைப் பாதையோ, நகர்புற சாலையோ வாகனத்தை ஓட்டும்போது கட்டாயம் கவனம் தேவை. இது இருந்தால் மட்டுமே பத்திரமாக வீடு போயி சேர முடியும் என்பதை போன்ற சூழலே இப்போது நிலவுகின்றது. குறிப்பாக, குறைவான வேகத்தில் பயணிப்பதையும், அரசு வழிகாட்டி இருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளான சீட் பெல்ட் அணிதல், தலைக் கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றி பயணிப்பதையும் உறுதிச் செய்துக்கொள்ளுங்கள். இதன்வாயிலாக கணிசமான அளவு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








