மஹிந்திராவின் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! எழுதி வெச்சுக்கங்க! டாடா சாம்ராஜ்யம் அடியோட சரிய போகுது!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மீதான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதற்கு மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.
தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதன் விலை (Price) சற்று அதிகம். மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 15.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.39 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இது சற்று அதிகமான விலை என்பதால், இதை காட்டிலும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி (Mahindra XUV300 EV) என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது.
இந்த புதிய எலெக்ட்ரிக் காரில் 35 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் விலை மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி எலெக்ட்ரிக் காரை விட சுமார் 2 லட்ச ரூபாய் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சுமார் 13.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். அனேகமாக வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. அதாவது இன்னும் சுமார் 6 மாதங்களில் நாம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
விலை குறைவாக இருக்கும் என்பதால், மஹிந்திரா எக்ஸ்யூவி300 இவி எலெக்ட்ரிக் கார், விற்பனையில் தூள் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய சந்தையில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய மக்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு தயாராகவே இருக்கின்றனர். ஆனால் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதுவே எலெக்ட்ரிக் கார்களை மக்கள் வாங்குவதை தவிர்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.
எனவே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்தான் இந்திய சந்தையின் தற்போதைய தேவையாக இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் மட்டுமல்லாது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் கூட விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








