மஹிந்திரா கார் காஸ்ட்லியா இருக்குதுன்னு கவலைபட்டவங்களுக்கு எல்லாம் சந்தோஷமான செய்தி! கம்மி ரேட்ல வந்தாச்சு!
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் இரண்டு புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ 7.99 லட்சம் மற்றும் ரூ 9.29 லட்சம் என்ற விலையில் இந்த கார்கள் அறிமுகம் ஆகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எஸ்யூவி கார்களை விற்பனை செய்யும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் எக்ஸ்யூவி 300 கார் எஸ்யூவி கார் பிரியர்களுக்கு பிடித்தமான வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதில் புதிய மற்றும் குறைந்த விலை தேர்வுகளை வழங்குவதற்காக இரண்டு புதிய என்ட்ரி லெவல் வேரியன்ட்களை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டபிள்யூ 2 என்ற புதிய வேரியன்டையும் மற்றும் டபிள்யூ 4 வேரியன்டில் புதி இன்ஜின் ஆப்ஷன் என இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் ஆகி உள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் தற்போது அதிமுகமாகியுள்ள இரண்டு வேரியன்ட் உடன் சேர்த்து மொத்தம் ஐந்து விதமான வேரியன்டுகள் உள்ளன. டபிள்யூ 2,4,6,8 மற்றும் 8 ஆப்ஷனல் ஆகிய வேரியன்ட்கள் தற்போது விற்பனையாகி வருகிறது. இதனால் மஹிந்திரா ரசிகர்கள் தற்போது குஷியாகியுள்ளனர்.
இதில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள டபிள்யூ 4 வேரியன்டை பொறுத்தவரை மக்கள் அதிகம் விரும்பும் சன் ரூஃப் ஆப்ஷன் உடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உங்களுடன் விற்பனைக்கு வருகிறது. புதிய இன்ஜின் ஆப்ஷனாக இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 129 பிஎச்பி பவரையும் 230 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த எஸ்யூவி 300 கார் 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் இதற்கு முன்னர் டபிள்யூ6 வேரியன்டில் மட்டுமே இருந்தது. தற்போது இது 4 வேரியன்டிலும் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.110 பிஎஸ் பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியன்ட்களுக்கு முந்தைய பேஸ் வேரியன்டை விட குறைவான விலையில் என்ட்ரி லெவல் வேரியண்டாக அறிமுகம் ஆகியுள்ளது.
இதில் டபிள்யூ2 டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட் ரூபாய் 7.99 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூ 4 டர்போ டி-ஜிடிஐ பெட்ரோல் வேரியண்டை பொறுத்தவரை ரூபாய் 9.29 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. அது ரூபாய் 8.65 லட்சம் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.
தற்போது புதிதாக டபுள்யூ 2 நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் முந்தைய பேஸ் வேரியன்டை விட ரூபாய் 66 ஆயிரம் குறைவான விலையில் தற்போது உள்ள பேஸ்வேரியன்டான டபிள்யூ2 காரை வாங்கலாம். நீங்க காரை வாங்க ரெடியா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்கள் எல்லாம் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகளை கொடுப்பதன் மூலம் சிறப்பான விற்பனையை பெற முடியும் என்பதால் மஹிந்திரா நிறுவனம் இந்த புதிய என்ட்ரி லெவல் வேரியண்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








