மஹிந்திரா ஷோரூம்கள்ல திருவிழா மாதிரி கூட்டம்! இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரை யாருதான் விடுவா! டாடாவுக்கு ஆப்பு!

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மிகவும் அதிகமாக இருப்பதால், மக்கள் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Car) மீது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்களின் சாய்ஸாகவும் எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன.

எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கி வருகின்றன. பல நிறுவனங்கள் களத்தில் இருந்தாலும், டாடாதான் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை கைக்குள் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) பெற்றுள்ளது. சரியான போட்டி மாடல் எதுவும் இல்லை என்பதும், இதன் ஆதிக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது.

மஹிந்திரா ஷோரூம்கள்ல திருவிழா மாதிரி கூட்டம்! இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரை யாருதான் விடுவா! டாடாவுக்கு ஆப்பு!

டாடாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வரும் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்!

ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, கூடிய விரைவிலேயே புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) என்ற எலெக்ட்ரிக் கார், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூடிய விரைவிலேயே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நடப்பு ஜனவரி மாதத்திலேயே எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் இந்த எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மஹிந்திரா ஷோரூம்கள்ல திருவிழா மாதிரி கூட்டம்! இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரை யாருதான் விடுவா! டாடாவுக்கு ஆப்பு!

டெஸ்ட் டிரைவ் தொடங்கியது!

இந்த சூழலில், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவிற்கு வழங்கும் பணிகளை மஹிந்திரா டீலர்ஷிப்கள் தற்போது தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விற்பனையில் உள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த காரான மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) காரின் அடிப்படையில்தான், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், 39.4 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 456 கிலோ மீட்டர்கள் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும் என்பது கூடுதல் சிறப்பு. டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

இவ்ளோ வசதிகள் குடுத்துருக்காங்களா!

Base, EP மற்றும் EL என மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 60 கனெக்டட் கார் வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டி ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஓடிஏ அப்டேட்களுக்கும் (OTA Updates) இந்த எலெக்ட்ரிக் கார் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இவை எல்லாம் தவிர, மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய வசதிகளும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது, எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் (Hyundai Kona Electric) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா ஷோரூம்களுக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்!

இதற்கிடையே மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் டெஸ்ட் டிரைவ் பணிகள் தற்போது தொடங்கியிருப்பது, வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எலெக்ட்ரிக் காரை பார்வையிடுவதற்காகவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் வாடிக்கையாளர்கள் பலர் மஹிந்திரா ஷோரூம்களுக்கு படையெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, January 16, 2023, 16:39 [IST]
English summary
Mahindra xuv400 electric car test drive details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+