மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் காரை இனி வாங்குபவர்களுக்கு செம்ம அதிர்ஷ்டம்!! புதுசா 8 வசதிகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் புதியதாக சில வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவை என்னென்ன? அவற்றின் பயன்கள் என்னென்ன என்பதையும், மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன. நம் இந்தியர்கள் பொதுவாகவே பண்டிகை காலத்தில் தான் புதிய வாகனங்களை வாங்க விரும்புவர். இதனை நன்கு தெரிந்து வைத்திருக்கும் கார் நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் குறைந்தது ஒரு புதிய காரையாவது இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன.

mahindra xuv400 electric suv updated

இந்த வகையில் மஹிந்திரா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400 மாடலை 8 புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இந்த 8 புதிய வசதிகளாவன, டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ-டிம்மிங் ரியர்வியூ மிரர், ஃபாக் விளக்குகள், பூட் லேம்ப் மற்றும் 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்.

இந்த அப்டேட்கள், எக்ஸ்யூவி400 காரின் விலைமிக்க உயர்நிலை வேரியண்ட்டான இ.எல் -இல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. புதிய தொழிற்நுட்ப அப்டேட்களினால் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரின் இஎல் வேரியண்ட்டின் விலையை ரூ.20,000 மஹிந்திரா அதிகரித்துள்ளது. இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இஎல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இனி ரூ.19.19 லட்சம் - ரூ.19.39 லட்சம் ஆகும்.

mahindra xuv400 electric suv updated

மஹிந்திரா எலக்ட்ரிக் சப்-காம்பெட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி400-இல் 34.5kWh மற்றும் அளவில்-பெரிய 39.4kWh பேட்டரிகள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் 34.5kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 375கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். அதுவே, பெரிய அளவிலான 39.4kWh பேட்டரி தொகுப்பின் மூலம் 456கிமீ தொலைவிற்கு சிங்கிள்-முழு சார்ஜில் பயணம் செய்ய முடியும்.

தற்போது 8 புதிய வசதிகளை பெற்றிருக்கும் எக்ஸ்யூவி400 இஎல் வேரியண்ட்டில் 39.4kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 147.5 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 0-100kmph வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

mahindra xuv400 electric suv updated

விரைவாக சார்ஜ் செய்யும் டிசி சார்ஜரை கொண்டு எக்ஸ்யூவி400 காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம். அதுவே, வீட்டில் பயன்படுத்தக்கூடிய 7.2 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜில் 6 மணிநேரங்களுக்கும் மேல் தேவைப்படும். எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.15.99 லட்சம் ஆகும்.

சந்தையில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த 2023 வருடத்திற்குள் குறைந்தது 20,000 எக்ஸ்யூவி400 கார்களை ஆவது வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய வேண்டும் என காரின் அறிமுகத்தின்போது மஹிந்திரா தெரிவித்தது. ஆனால் அதனை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான எக்ஸ்யூவி400 கார்களை மஹிந்திரா இந்த வருடத்தில் விற்பனை செய்யும் என நம்புகிறோம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எந்தவொரு காரிலும் கூடுதலாக வசதிகள் சேர்க்கப்பட்டாலே காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறலாம். ஆதலால், மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார்களின் விற்பனையும் வரும் மாதங்களில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 8 புதிய வசதிகள் மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 10, 2023, 7:30 [IST]
English summary
Mahindra xuv400 electric suv updated with new features
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X