இந்தியாவில் தொடங்கியது மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி டெலிவரி பணிகள்! அதுக்குள்ள 400யூனிட் டெலிவரி பண்ணிட்டாங்களா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கின்றது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த காரை மஹிந்திரா நிறுவனம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது.

எக்ஸ்யூவி 400 இவி-யை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ட்ரீட் வழங்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்த நிலையிலேயே எக்ஸ்யூவி 400 இவி-யை புக் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட் வழங்கும் விதமாக, அக்காரின் டெலிவரி பணிகளை மஹிந்திரா தொடங்கி இருக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி

இதனை நிறுவனமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. 400-க்கும் அதிகமான எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக மஹிந்திரா செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. உகாதி பண்டிகையை முன்னிட்டே எக்ஸ்யூவி 400 இவி டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி இரு விதமான வேரியண்டுகளில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இசி மற்றும் இஎல் ஆகியவையே அவை ஆகும். இதில் அதிகம் ரேஞ்ஜ் தரும் தேர்வாக இஎல் இருக்கின்றது. இந்த வேரியண்டை புக் செய்து காத்திருந்தவர்களுக்கே தற்போது டெலிவரி வழங்கப்பட்டு உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி

அடுத்து வரும் நாட்களில் இசி தேர்வின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அக்டோபர் மாதத்தில் இதன் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த தேர்வில் 34.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 375 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதை விட அதிக தூரம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இஎல் தேர்வு உதவியாக இருக்கும். இந்த தேர்வில் 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பேட்டரி பேக்கில் மட்டுமே இந்த இரு தேர்வுகளும் வித்தியாசத்துடன் காணப்படும். ஆம், மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். இரண்டிலும் 148 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே எக்ஸ்யூவி 400 இவியில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றது. 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சன்-ரூஃப், கார் இணைப்பு தொழில்நுட்பம் போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் மிக ஏராளமாக கொடுக்கப்பட்டு உள்ளன.

மிக முக்கியமாக 6 ஏர்பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்றவையும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர மூன்று விதமான ரைடிங் மோட்களும் வழங்கப்பட்டு உள்ளன. அவை, ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் ஆகும். நிற தேர்வுகளாக எக்ஸ்யூவி 400 இவியில் நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அவை, இன்ஃபினிட்டி ப்ளூ, ஆர்க்டிக் ப்ளூ, கேலக்ஸி கிரே மற்றும் எவரெஸ்ட் ஒயிட் ஆகியவையே ஆகும். இதேபோல் காரை சார்ஜ் செய்துகொள்ளவும் பல ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கின்றன. எக்ஸ்யூவி 400 இவி-யை 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர், 7.2 kW மற்றும் 3.3 kW ஆகிய சார்ஜிங் மையங்களில் வைத்தும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 50 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதேவேளையில், 7.2 kW சார்ஜரை பயன்படுத்தும்போது பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜேற்ற 6.30 மணி நேரம் வரை ஆகும். இதைவிட அதிக நேரமாக சுமார் 13 மணி நேரத்தை முழுமையாக சார்ஜாக 3.3 kW சார்ஜர் எடுத்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 17:48 [IST]
English summary
Mahindra xuv400 ev deliveries started in india
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+