விலை இவ்ளோதானா! டாடா சாம்ராஜ்யத்தை அடியோடு சரிக்க போகும் புதிய எலெக்ட்ரிக் கார்! புக்கிங் பண்ண முட்டி மோதறாங்க
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்ற பெருமையை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) தன்வசம் வைத்துள்ளது. இதற்கு நேரடி போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் கார் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் கடந்த ஜனவரி 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 10 நாட்கள் கழித்து, அதாவது கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. இந்த சூழலில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்!
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் மிகவும் குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான எண்ணிக்கையில் முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்த 15 ஆயிரம் பேருக்கும் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து முடிப்பதற்கு சுமார் 7 மாதங்கள் ஆகும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எப்ப சார் டெலிவரி பண்ணுவீங்க?
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரானது, EL மற்றும் EC என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், EL வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் EC வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் ஆரம்பிக்கப்படும். நடப்பு 2023ம் ஆண்டிலேயே 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்து விட வேண்டும் என மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அசால்டா லாங் ட்ரிப் அடிக்கலாம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 34.5 kWh பேட்டரி தொகுப்பு ஒன்றாகும். இதன் ரேஞ்ச் (Range) 375 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 39.4 kWh பேட்டரி ஆப்ஷனும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 456 கிலோ மீட்டர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில் தொலை தூர பயணங்களையும் கூட மிக எளிதாக மேற்கொள்ள முடியும்.
ஹூண்டாய், எம்ஜி நிறுவனங்களுக்கும் செக்!
இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி மட்டுமல்லாது, எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் ஹூண்டாய் கோனா (Hyundai Kona) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், மஹிந்திரா எக்ஸ்யூவி400 விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள மிக பிரம்மாண்டமான வரவேற்பிற்கு அதன் குறைவான விலை (Price) மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அதான் முன்பதிவு குவியிதா!
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 15.99 லட்ச ரூபாய் மட்டும்தான். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான எலெக்ட்ரிக் கார் என கருதுவதால்தான், பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் வருகையால், டாடா நெக்ஸான் இவி-யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
பிள்ளையார் சுழி!
மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே ஷோரூம்களுக்கு வர தொடங்கி விட்டது. அத்துடன் அதன் டெலிவரி பணிகளும் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளன. எனவே கூடிய விரைவில் இந்திய சாலைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் கம்பீரமாக வலம் வருவதை நாம் பார்க்கலாம். வரும் காலங்களில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து இன்னும் ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அதற்கு எக்ஸ்யூவி400 பிள்ளையார் சுழி போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








