மத்த எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் சமாதி கட்ட ரெடியா இருங்க... மஹிந்திராவின் தரமான மின்சார கார் வெளியீடு!

ஹைதராபாத்தில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இந்தியாவின் முதல் 'ஃபார்முலா இ' பந்தயம் (Formula E Race) நடைபெற இருக்கின்றது. நாளைய தினம் (பிப்ரவரி 11) நடைபெற இருக்கும் பந்தயத்தில் இந்திய நிறுவனமான மஹிந்திரா கலந்துக் கொள்ள இருக்கின்றது.

இந்த பந்தயத்தில் கலந்துக் கொள்ளும் முதல் இந்திய நிறுவனம் இதுவே ஆகும். மஹிந்திரா 2011 ஆம் ஆண்டில் இருந்தே வாகன பந்தயங்களில் கலந்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே நாட்டில் நடைபெற இருக்கும் முதல் மின் வாகன பந்தயத்திலும் தனது பங்களிப்பை மஹிந்திரா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எக்ஸ்யூவி 400

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை முன்னிட்டு அந்நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபார்முலா எடிசன் எனும் பெயரில் உருவாக்கி, வெளியீடு செய்திருக்கின்றது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் காரே எக்ஸ்யூவி 400. இதன் ஃபார்முலா எடிசனையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்து இருக்கின்றது. எக்ஸ்யூவி 400 ஃபார்முலா எடிசன் (XUV400 Formula Edition) எனும் பெயரிலேயே அது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கமான எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிக அழகுமிக்க எலெக்ட்ரிக் காராக இது அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்காக பிரத்யேக நிறம் மற்றும் அலங்கார ஸ்டிக்கர்கள் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஓர் ஃபார்முலா பந்தய வாகனம் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்குமோ அந்தமாதிரியான ஓர் தோற்றத்திற்கே எக்ஸ்யூவி 400 தற்போது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

எக்ஸ்யூவி 400

இந்த மாற்றத்தை வேறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, வழக்கமான எக்ஸ்யூவி 400 என்ன மாதிரியான பேட்டரி தேர்விலும், மின் மோட்டாரைக் கொண்டதாக காட்சியளிக்கின்றதோ, அதுபோலவே இந்த சிறப்பு பதிப்பும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஒட்டுமொத்தமாக இரண்டு வேரிண்டுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். அவை, இசி (EC) மற்றும் இஎல் (EL) ஆகும்.

வெவ்வேறு விதமான பேட்டரி பேக் தேர்வைக் கொண்டதாக இவை காட்சியளிக்கின்றன. எக்ஸ்யூவி 400 இசியை 34.5 kWh பேட்டரி பேக் தேர்விலும், எக்ஸ்யூவி 400 இஎல் தேர்வை 39.4 kWh பேட்டரி பேக் தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. இசி ரேஞ்ஜ் திறன் 375 கிமீ ஆகும். அதாவது முழு சார்ஜில் 375 கிமீ தூரம் வரை எக்ஸ்யூவி 400 இசி வேரியண்ட் பயணிக்கும்.

எக்ஸ்யூவி 400

அதேவேளையில், இஎல் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அதிக ரேஞ்ஜையும், அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்டது என்பதால் இதன் விலையும் சற்று அதிகமானதாக இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 18.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களால் மட்டுமே எக்ஸ்யூவி 400 இஎல் தேர்வை வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.

இசி தேர்விற்கு ரூ. 15.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த விலையும் முதல் ஐயாயிரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு பின்னர், அதாவது, 5001 ஆவது யூனிட்டை வாங்கும் நபருக்கு சற்று அதிக விலையில் எலெக்ட்ரிக் கார் விற்கப்பட இருக்கின்றது. பேட்டரி பேக் விஷயத்தில் மாறுபட்டுக் காணப்படும் இரு தேர்வுகளும் மின் மோட்டார் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன.

எக்ஸ்யூவி 400

இரு தேர்வுகளிலும் 150 எச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மின் மோட்டார் வெறும் 8.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டதும்கூட. இந்த எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி-க்கு போட்டியாகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நெக்ஸான் இவி ரூ. 14.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 17.50 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த குறைவான விலைக் கொண்ட காருக்கே போட்டியாக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் பக்கம் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக விரைவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் எக்ஸ்யூவி 400 இவி ஃபார்முலா எடிசன் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில் கூடிய விரைவில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 10, 2023, 14:20 [IST]
English summary
Mahindra xuv400 formula edition
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X