டாடா நெக்ஸான் இவி மார்க்கெட் சரிய போகுது!! மஹிந்திராவின் புது எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் கார்!

அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலக்ட்ரிக் கார் ஒன்று பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அதன் சப்-காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி400-ஐ அப்டேட் செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் கார் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையில் காரின் தோற்றம் முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது.

mahindra xuv400 spied with adas

இருப்பினும் இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவில், சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்யூவி400 காரின் ஹெட்லைட்களை மறைப்புகளையும் தாண்டி காண முடிகிறது. அத்துடன், காரின் மேற்கூரையில் அடாஸ் (ADAS) சென்சார்கள் இருப்பதையும் காணலாம். மேலும், மறைப்புகளினால் கார் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருப்பினும், காரின் உடலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை காண முடிகிறது.

இதன்படி பார்க்கும்போது, தற்போதைய எக்ஸ்யூவி400 மாடலை போலவே விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எக்ஸ்யூவி400 காரும் உள்ளதை காணலாம். இந்த சோதனை எக்ஸ்யூவி400 காரை சற்று உற்று கவனித்தால், கதவுகளில் சதுர வடிவில் மேடு போன்றதான வடிவம் இருப்பதை காணலாம். எங்களுக்கு தெரிந்தவரையில் இது வேறு ஏதேனும் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

mahindra xuv400 spied with adas

அதாவது, விற்பனைக்கு வரும் எக்ஸ்யூவி400 காரில் இத்தகைய மேடுகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அத்துடன், இந்த ஸ்பை படங்களின் மூலம் புதிய எக்ஸ்யூவி400 காருக்கு புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளதை அறிய முடிகிறது. இதனாலேயே, இந்த சோதனை காரின் சக்கரங்கள் கூட மறைக்கப்பட்டு உள்ளன.

இருப்பினும், மறைப்புகளை தாண்டி இந்த காரில் தடிமனான 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளதை காண முடிகிறது. ஆனால், சக்கரங்களின் அளவுகளில் (16-இன்ச்) மாற்றமில்லை. புதிய எக்ஸ்யூவி400 காரில் தற்போதைய மாடலை காட்டிலும் தடிமனான கிளாடிங்குகள் உள்ளதையும் காண முடிகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில்தான் கொண்டுவரப்பட்டு உள்ளன.

mahindra xuv400 spied with adas

குறிப்பாக, ஹெட்லைட் பிராண்ட்-நியூ டிசைனில் உள்ளது. புதிய தலைக்கீழான L-வடிவ எல்இடி டிஆர்எல் மற்றும் அதற்கு கீழே புரோஜெக்டர் ஹெட்லேம்ப் பல்ப் உள்ளிட்டவை ஹெட்லைட் செட்-அப்பில் உள்ளன. மேலும், ஹெட்லைட்களுக்கு மத்தியில் காப்பர் நிறத்திலான பகுதியையும் காண முடிகிறது. அத்துடன், இந்த கார் புதிய டிசைனில் முன்பக்க பம்பரை கொண்டிருப்பதை மறைப்புகளை தாண்டி பார்க்க முடிகிறது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்கள், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார் அடாஸை பெற்றுவரவுள்ளதையும் உறுதிப்படுத்தி உள்ளன. இந்த படங்களில், காரின் மேற்கூரையின் முன்பக்கத்தில் வேறொரு நிறத்தில் டேப் ஒட்டப்பட்டு இருப்பதை காணலாம். இது பெரும்பாலும், அடாஸுக்கான சென்சாராக இருக்க வாய்ப்புள்ளது. மற்றப்படி, புதிய எக்ஸ்யூவி400 காரின் உட்பக்கத்தை காட்டும் ஸ்பை படங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் இவி போன்ற பிரபலமான எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக விளங்கும் எக்ஸ்யூவி400 இவி காரை தொழிற்நுட்ப விஷயத்தில் மேம்படுத்தப்பட்டதாக கொண்டுவர மஹிந்திரா விரும்புவது தெளிவாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாகவே, அடாஸ் வசதிகள் எக்ஸ்யூவி400-இல் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல், இந்த எலக்ட்ரிக் காரின் தோற்றத்தையும் மஹிந்திரா மெருக்கேற்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 30, 2023, 11:37 [IST]
English summary
Mahindra xuv400 spied along with adas sensor check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X