இந்திய மக்களின் செல்ல பிள்ளையாக மாறிய மஹிந்திரா கார்! ரேட்டை பத்திலாம் கொஞ்சம் கூட யோசிக்காம வாங்கறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மிகவும் பிரம்மாண்டமான மைல்கல் (Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது.
இந்திய சந்தையில் 1 லட்சத்திற்கும் அதிகமான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் டெலிவரி என்பதுதான் அந்த பிரம்மாண்டமான மைல்கல். வெறும் 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களை சென்றடைந்திருப்பது உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 சற்று விலை (Price) உயர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலையே 14.01 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.18 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இவ்வளவு விலை உயர்ந்த கார் வெறும் 2 ஆண்டுகளுக்கு உள்ளாக இத்தனை வீடுகளில் ஒரு உறுப்பினராக மாறியிருப்பது மிகப்பெரிய விஷயம்தான். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் முதன் முதலில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இந்த 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில், ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் கூட இருக்கிறது.
வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் பெற்றுள்ளது. இதுதவிர இந்த காரின் டேஷ்போர்டில், 10.25 இன்ச் அளவில் 2 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கானது.
மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி700 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அனேகமாக வரும் 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக, மஹிந்திரா எக்ஸ்யூவி700 இவி (Mahindra XUV700 EV) எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற சற்று விலை உயர்ந்த கார் ஒன்றை, மிக குறுகிய காலத்தில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரம்மாண்டமான சாதனையை படைத்ததற்காக மஹிந்திரா நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications








