சென்னையில் சுற்றி திரிந்த மஹிந்திராவின் புது எலக்ட்ரிக் கார்!! யாரும் கவனிக்கல... ஸ்பை படங்கள் வெளியீடு!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் மாடல் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்தித்தளம் வாயிலாக இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று, மஹிந்திரா ஆகும். இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் மஹிந்திரா, வரும் காலங்களில் சந்தையில் அறிமுகப்படுத்த பல்வேறு எலக்ட்ரிக் கார் மாடல்களை யோசனையில் வைத்துள்ளது. எக்ஸ்யூவி.இ மற்றும் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் மஹிந்திரா யோசனையில் உள்ளன.

mahindra xuv700 electric car spied

மஹிந்திரா சமீப காலமாக எஸ்யூவி ரக கார்களில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறது. அவ்வாறு, இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் எஸ்யூவி உடலமைப்பில் கொண்டுவரப் படுகின்றன. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் கான்செப்ட்டை கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுதந்திர தினத்தின்போது முதன்முறையாக மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தியது.

கான்செப்ட் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளது. நம் தமிழகத்தில், சென்னைக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

mahindra xuv700 electric car spied

ஏனெனில், இந்த சோதனை காரின் முன்பக்க கிரில் பகுதி முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான ஓர் காரை சாலையில் கண்டால், எவரொருவரும் இது எலக்ட்ரிக் கார் என்பதை கண்டுப்பிடித்துவிடுவர். ஆனால், இந்த சோதனை காரில் தயாரிக்கும் நிறுவனத்தின் லோகோ எதுவும் வெளிப்படையாக காட்டப்படவில்லை. இருப்பினும், காரின் தோற்றத்தை வைத்து, இது மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் என்பதை நம்மால் அடையாளம் காண முடிகிறது.

முன்பக்கத்தில், காரின் முழு அகலத்திற்கும் எல்இடி லைட் பார் கொடுக்கப்பட்டுள்ளதை தெளிவாக காணலாம். ஏனெனில், அந்த பகுதியை மறைக்கவில்லை. இந்த எல்இடி லைட் பார் அப்படியே, இரு முனைகளிலும் உள்ள எல்இடி டிஆர்எல்-கள் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், 'கடா மீசை' போன்றதான டிசைன் இந்த காரின் முன்பக்கத்திற்கு கிடைத்துள்ளது.

mahindra xuv700 electric car spied

2022 ஆகஸ்ட் 15இல் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி.இ8 கான்செப்ட் மாதிரியில் இவ்வாறான எல்இடி ஹெட்லைட் செட்-அப்பை பார்த்திருப்பீர்கள். ஹெட்லைட் சிஸ்டத்தில் அமைந்துள்ள எல்இடி ஃபாக் விளக்குகள் கார்னரிங் செயல்பாட்டு உடன் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். முன்பக்க பம்பரின் டிசைன் புதுமையானதாக உள்ளது. பம்பருக்கு மத்தியில் இரு ஏர் இண்டேக்குகள் இருப்பதை ஸ்பை படங்களில் காண முடிகிறது.

இந்த சோதனை காரின் பின்பக்கம் கிட்டத்தட்ட வழக்கமான எக்ஸ்யூவி700 கார் போன்றே உள்ளது. இருப்பினும், இறுதியாக விற்பனைக்கு வரும் எக்ஸ்யூவி700 காரின் டெயில்லைட்களை புதுமையானதாக எதிர்பார்க்கிறோம். இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு உள்ளே ட்ரிபிள்-டிஸ்பிளே செட்-அப்பை மஹிந்திரா வழங்கியுள்ளது. ஸ்டேரிங் சக்கரம் புதுசாக இருந்தாலும், கியர் செலக்டர் உள்ளிட்டவை அடங்கிய செண்டர் கன்சோல் பகுதி ஆனது எக்ஸ்யூவி700 காரில் வழக்கமாக பார்ப்பதை போலவே உள்ளது.

mahindra xuv700 electric car spied

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்யூவி700 எலக்ட்ரிக் கார் என தற்போதைக்கு கூறினாலும், இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் எந்த பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை. இது எலக்ட்ரிக் காராக இருப்பினும், மணிக்கு 200kmph வேகத்தில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முழுமையான விபரங்கள் தெரியவரும்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2023, 0:00 [IST]
English summary
Mahindra xuv700 electric car spied in chennai check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X