நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில வருடங்களில் அறிமுகப்படுத்தி, சந்தையில் மிகுந்த வெற்றியடைந்த கார்களுள் எக்ஸ்யூவி700 மாடல் ஒன்று. மஹிந்திராவின் புதிய லோகோ உடன் ADAS உள்பட பல்வேறு மாடர்ன் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் நம் நாட்டில் பலத்தரப்பட்ட மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியாவில் எக்ஸ்யூவி700 கார் 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்வாறான புதிய கார்கள் மூலமாக சமீப ஆண்டுகளில் இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கையை மஹிந்திரா நிறுவனம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை போன்று, அண்டை நாடான நேபாளத்திலும் கடந்த சில வருடங்களில் பல மஹிந்திரா வாகனங்கள் விற்பனைக்கு சென்றுள்ளன. நேபாளம் பல்வேறு மலைப்பிரதேச பகுதிகளை கொண்டுள்ளதால், அத்தகைய பகுதிகளுக்கு மஹிந்திராவின் எஸ்யூவி வாகனங்கள் எளிதாக பொருந்திவிடுகின்றன.

நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அறிமுகம்!!

அந்த வகையில் தற்போது எக்ஸ்யூவி700 மிட்-சைஸ் எஸ்யூவி காரை நேபாளத்தில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. நேபாளம் நாட்டில் மஹிந்திரா கார்களின் விற்பனை மற்றும் கார்களுக்கான சேவைகளை கவனித்து கொள்ளும் அக்னி குழுமம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எக்ஸ்யூவி700 காரின் நேபாள அறிமுகம் குறித்து பல்வேறு பதிவுகளையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளது.

எக்ஸ்யூவி700 அறிமுகத்தின் மூலமாக நேபாளத்தில் மஹிந்திரா விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த நாட்டில் ஸ்கார்பியோ கிளாசிக், எக்ஸ்யூவி300 மற்றும் பொலிரோ பவர் ப்ளஸ் (இந்தியாவில் பொலிரோ நியோ) கார்கள் மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. எக்ஸ்யூவி700 காரை தொடர்ந்து, இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ-என் காரை நேபாளத்தில் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவும் மஹிந்திரா திட்டமிட்டு வருகிறது.

நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அறிமுகம்!!

கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், பொலிரோ மேக்ஸி டிரக் பிளஸ், பொலிரோ பிக்அப், ஸ்கார்பியோ பிக்அப் மற்றும் பொலிரோ கேம்பர் உள்ளிட்ட வாகனங்களை மஹிந்திரா அந்த நாட்டில் விற்பனை செய்து வருகிறது. நேபாளத்தில் வெறும் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே எக்ஸ்யூவி700 கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நாட்டில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஏ.எக்ஸ்3, ஏ.எக்ஸ்5 மற்றும் ஏ.எக்ஸ்7 என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் ஏ.எக்ஸ்3 வேரியண்ட் 5 இருக்கைகளுடன் மேனுவல் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டின் விலை அங்கு 74 லட்சம் நேபாள ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.46 லட்சம் ஆகும். இதுதான் அங்கு எக்ஸ்யூவி700 காரின் குறைவான விலை ஆகும். அதுவே இந்தியாவில் இந்த மஹிந்திரா காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.45 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில், ஏ.எக்ஸ்5 வேரியண்ட் 5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைப்பது மட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும்.

நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் அறிமுகம்!!

ஏ.எக்ஸ்5 வேரியண்ட்டின் விலைகள் அந்த நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50.6 லட்சத்தில் இருந்து ரூ.55.6 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டாப்-வேரியண்ட்டான ஏ.எக்ஸ்7 மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்கும் என்றாலும், இந்த வேரியண்ட்டை நேபாள சந்தையில் 7 இருக்கைகளுடன் மட்டுமே வாங்க முடியும். இந்த வேரியண்ட்டின் விலை அங்கு மேனுவல் தேர்வில் ரூ.65.6 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் தேர்வில் சற்று அதிகமாக ரூ.68.7 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே, நேபாளத்தில் அதிகப்படியான இறக்குமதி வரிகளால் கார்களின் விலைகள் அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. ஏனெனில் கார்கள் இன்னமும் அந்த நாட்டில் அத்தியாவசியமற்ற லக்சரி அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதனாலேயே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இறக்குமதி வரி ஆனது மாடலையும், தயாரிக்கும் நிறுவனத்தையும் பொறுத்து சுமார் 250%-இல் இருந்து 350% வரையில் விதிக்கப்படுகிறது. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் அந்த நாட்டிற்கு சென்றால் அதன் விலை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 1, 2023, 14:39 [IST]
English summary
Mahindra xuv700 launched in nepal prices starting at 74 lakh npr
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+