மஹிந்திராவால நாட்டுக்கு இவ்ளோ பெரிய கௌரவமா! உலகை ஆள போகும் இந்திய தயாரிப்பு! எமன் கண்ணுலயே விரல விட்டு ஆட்டும்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், பாதுகாப்பு (Safety) மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் (Global NCAP Crash Test) மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் வெற்றிக்கொடி நாட்டிய நிலையில், பல்வேறு உலக நாடுகளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

Mahindra XUV700

தென் ஆப்ரிக்க சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது நியூசிலாந்து (New Zealand) சந்தையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவை போல் அல்லாமல், நியூசிலாந்து சந்தையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கிடைக்கும்.

அது 2.0 லிட்டர், T-GDi டர்போ பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஹெச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் சக்தியானது, முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

Mahindra XUV700 Front Design

இந்திய சந்தைக்கான மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் பெட்ரோல் இன்ஜினுடன், டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து சந்தைக்கு ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தாலும், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரில் ஏராளமான வசதிகளை வாரி வழங்கியுள்ளது.

இதில், அடாஸ் தொழில்நுட்பம் (ADAS - Advanced Driver Assistance Systems) முக்கியமானது. இதுதவிர 7 ஏர்பேக்குகள், பனரோமிக் சன்ரூஃப், இரண்டு 10.25 இன்ச் திரைகள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 வெற்றிகரமான தயாரிப்பாக உருவெடுத்திருப்பதற்கு அதன் சவாலான விலை (Price) நிர்ணயம் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 13.95 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 25.48 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான ஒரு காராக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா சந்தைகளை தொடர்ந்து, நியூசிலாந்து சந்தையிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் வெற்றி கொடி நாட்டும் என அதன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான எக்ஸ்யூவி700 வரிசையாக உலகின் பல்வேறு நாடுகளில் காலடி தடம் பதித்து வருவது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். வரும் காலங்களில் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 1, 2023, 13:05 [IST]
English summary
Mahindra xuv700 new zealand launch all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+