பென்ஸ் கார் வாங்கறவங்களே இப்ப மஹிந்திரா பக்கம் திரும்பீட்டாங்க! சண்முகம் வண்டிய நேரா ஷோரூமுக்கு விடு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) நமக்கு கிடைத்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி!

மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,555 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 6,063 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2,492 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Mahindra XUV700

இது 41.10 சதவீத வளர்ச்சி ஆகும். நடப்பு 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 8,555 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களில், 6,350 கார்கள் டீசல் (Diesel) இன்ஜின் பொருத்தப்பட்டவை ஆகும். எஞ்சிய 2,205 கார்கள் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டவை.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டீசல் இன்ஜின் மாடல்களுக்கே வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பை வழங்கி வருகின்றனர் என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை (Price) 14.03 லட்ச ரூபாயாக உள்ளது.

Mahindra XUV700 Front Profile

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.57 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த காரின் டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் இன்ஜினும், பெட்ரோல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சாதாரண வாடிக்கையாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் கூட பிரபலமாக உள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) கூட சமீபத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கியிருந்தார்.

ஆனால் அவர் வாங்கியது புத்தம் புதிய கார் அல்ல. அவர் வாங்கியது செகண்ட் ஹேண்ட் கார் (Second Hand Car) ஆகும். எதனால் செகண்ட் ஹேண்ட் காரை ஆஷிஷ் வித்யார்த்தி வாங்கினார்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகமாக இருக்கிறது என்பதால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

காத்திருப்பு காலம் என்பது முன்பதிவு மற்றும் டெலிவரி ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளதால், ஆஷிஷ் வித்யார்த்தி செகண்ட் ஹேண்டில் வாங்கியிருக்கலாம். ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கான காத்திருப்பு காலம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆஷிஷ் வித்யார்த்தி தவிர பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரே (Bollywood Actor Ranvir Shorey) உள்ளிட்டோரும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வைத்துள்ளனர். அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன வசதிகள் வழங்கப்படுவதால், திரையுலக நட்சத்திரங்களும் கூட, மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மீது ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு இந்த காரை வாங்குவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 18:42 [IST]
English summary
Mahindra xuv700 registers over 41 per cent growth in september 2023 all details here
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+