மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிட்ட இத்தனை கார்கள் இருக்கா?.. மனுஷன் இதுலையும் எளிமையானவர்னு நிரூபிச்சிட்டாரு!

பிற நடிகர்களைப் போலவே நடிகர் விஜய் சேதுபதியும் மிகப் பெரிய வாகன பிரியராக இருக்கின்றார். பட்ஜெட் விலை கார் மற்றும் லக்சூரி கார் என அனைத்து ரக வாகனங்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், அவரிடத்தில் என்னென்ன கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தமிழ் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். மிகவும் குறைவான சம்பளத்திற்கு பணியாற்றும் மிக சிறந்த நடிகராக இவர் திரை உலகில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். தற்போது, தன்னுடைய கால் தடத்தை அவர் பாலிவுட் உலகிலும் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் ஃபர்ஸி எனும் வெப் சீரிஸ் பணியாற்றி வருகின்றார். அமேசான் பிரைம் வீடியோவில் இந்த வெப் சீரிஸ் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

விஜய் சேதுபதி

இந்த நிலையிலேயே நடிகர் விஜய் சேதுபதியிடம் எத்தனை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன?, என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிற நடிகர்களை போலவே விஜய் சேதுபதியும் ஓர் வாகன ஆர்வலராக இருக்கின்றார். இதனால்தான் அவரிடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. எகனாமி கிளாஸ் மற்றும் சொகுசு கார்கள் என இரண்டும் சரிசம அளவில் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10)

விஜய் சேதுபதி வசம் பயன்பாட்டில் இருக்கும் மிகவும் எளிமையான கார் மாடலாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இருக்கின்றது. இதுவே அவர் மிகுந்த எளிமையானவர் என்பதை நமக்குக் காட்டும் வகையில் இருக்கின்றது. இதன் மதிப்பு ரூ.5 - ரூ.8 லட்சம் வரை இருக்கும்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி வாங்கிய முதல் கார் மாடல் இதுவே ஆகும். சிவப்பு நிற ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை அவர் பயன்படுத்தி வருகின்றார். பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக காராக இது இருக்கின்றது. செலவு செய்யப்பட்ட பணத்திற்கு உகந்த தயாரிப்பு இது ஆகும்.

பழைய மெர்சிடிஸ் பென்ஸ் 230 (Mercedes Benz 230)

விஜய் சேதுபதி இடத்தில் இருக்கும் அரிய வகை கார் இது ஆகும். இந்த காரை தன்னுடைய டேஸ்டிற்கு ஏற்ப லேசாக மாடிஃபை செய்து பயன்படுத்தி உள்ளார். பழைய மெர்சிடிஸ் பென்ஸ் 230 ஓர் செடான் ரக வாகனம் ஆகும். இந்த கார் பற்றிய துள்ளியமான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல், காரின் துள்ளியமான படங்களும் வெளியாகவில்லை. அவர் காரை புதுப்பிக்கும்போது எடுத்துக் கொண்ட படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன.

விஜய் சேதுபதி

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் (Mercedes Benz G-Wagon)

உலகளவில் சொகுசு வாகன பிரியர்களின் விருப்பமான வாகனமாக பென்ஸ் ஜி-வேகன் இருக்கின்றது. இந்த கார் நம்ம ஹீரோ விஜய் சேதுபதி இடத்திலும் பயன்பாட்டில் இருக்கின்றது. எமரால்டு கிரீன் கலர் கொண்ட ஜி-வேகனையே பயன்படுத்துகின்றார். இந்த காரில் உள்ள பென்ஸின் லோகோ நீக்கப்பட்டு 'வி' சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் எனும் பெயரை குறிக்கும் விதமாக அது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மணிக்கு 200கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட சொகுசு எஸ்யூவி ஆகும்.

விஜய் சேதுபதி

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series)

விஜய் சேதுபதி இடத்தில் இருக்கும் மிக-மிக விலையுயர்ந்த சொகுசு கார்களில் பிஎம்டபிள்யூ 7சீரிஸ்-ம் ஒன்று. நீளமான உருவம் கொண்ட செடான் இதுவாகும். இந்தியாவில் இரு விதமான வேரியண்டுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ.1.42 கோடி ஆகும். உயர் நிலை வேரியண்ட் ரூ.1.76 கோடிக்கு விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகளே. இரண்டில் எந்த வேரியண்டை விஜய் சேதுபதி பயன்படுக்கின்றார் என்கிற விபரம் துள்ளியமாக தெரியவில்லை.

விஜய் சேதுபதி

மினி கூப்பர் (Mini Cooper)

திரை நட்சத்திரங்கள் மற்றும் இளம் தொழிலதிபர்களுக்கு அதிகம் பிடித்த பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த காராக மினி கூப்பர் இருக்கின்றது. இதனை நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் பயன்படுத்தி வருகின்றார். மினி கூப்பர் காரின் விலை இந்தியாவில் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு இந்த காரையே விஜய் சேதுபதி பயன்படுத்தி வருகின்றார்.

விஜய் சேதுபதி

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)

அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்தமான எஸ்யூவி காராக ஃபார்ச்சூனர். இந்த காரால் எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளித்துவிட முடியும். இந்த திறனுக்காகவே பலரும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லுதல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த காரையே விஜய் சேதுபதி பயன்படுத்தி வருகின்றார். இந்தியாவில் இந்த கார் ரூ.44.63 லட்சம் வரையில் விற்கப்படுகின்றது. பிரமீயம் மற்றும் சொகுசு என பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட வாகனம் இது ஆகும்.

விஜய் சேதுபதி

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crytsa)

விஜய் சேதுபதியிடம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. விமான நிலையங்களில் பலமுறை விஜய் சேதுபதியை இந்த காருடன் வைத்து அவருடைய ரசிகர்கள் பார்த்ததாக தெரிவிக்கின்றனர். ரூ. 20 லட்சம் தொடங்கி ரூ. 24 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அரசியல்வாதிகள், அரசின் முக்கிய பொருப்பில் இருப்பவர்கள் என பலர் இந்த காரையே பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2023, 20:09 [IST]
English summary
Makkal selvan vijay setupathi and his car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X