மலாய்காவை அப்படியே தள்ளி வச்சுட்டு அவர் வந்த காரை ரசித்த ரசிகர்கள்.. அக்கா-தங்கை 2 பேருமே வாங்கிட்டாங்களா!!

பாலிவுட் திரை உலகின் நன்கு அறியப்படும் முகங்களில் மலாய்கா அரோராவும் ஒருவர் ஆவார். இவரை போலவே இவரது சகோதரியும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கின்றார். இந்த ஸ்டார் சகோதரிகளே ஒரே மாதிரியான விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஓர் நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக் கொண்டபோதே இந்த தகவல் தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக அவர்கள் வாங்கியிருக்கும் காரும், அந்த காரின் விலையும் ஒட்டுமொத்த திரையுலகினரையுமே ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. ஏற்கனவே மலாய்காவிடமும் சரி, அவருடைய சகோதரி அம்ரிதா அரோராவிடமும் அதிக எண்ணிக்கையில் விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

Malaika Arora Range Rover SUV

இருப்பினும், இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு புதிதாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் எஸ்யூவி காரை வாங்கி இருக்கின்றனர். இந்த காரின் ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்படத்தகுந்தது. இத்தகைய பலமடங்கு விலை உயர்ந்த காரையே தற்போது இரு சகோதரிகளும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

லேண்ட் ரோவர் நிறுவனம் மிக மிக சமீபத்திலேயே ரேஞ்ஜ் ரோவரின் புதிய தலைமுறை வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த நிலையிலேயே அக்கா-தங்கை இருவரும் அக்காரைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இதுவே பலரின் ஆச்சரியத்திற்கு முழு காரணமாக அமைந்து இருக்கின்றது.

Malaika Arora Range Rover SUV

இவர்களைப் போலவே இன்னும் பல திரை நட்சத்திரங்கள் இந்த புதிய தலைமுறை ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களையும், சொகுசு வசதிகளையும் கொண்ட காரே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆகும்.

மேலும், இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த அந்தஸ்துகளே அக்காரை பலர் வாங்கிக் குவிக்க காரணமாக இருக்கின்றது. இந்த காரில் பயணிக்கும்போது வெளிப்புறத்தில் கேட்கும் சத்தங்கள் ஒரு துளிகூட உட்பக்கத்தில் கேட்காது என்பது கூடுதல் சிறப்பாகும். குறிப்பாக, டயரின் உராய்வு, எஞ்ஜின் சத்தங்கள்கூட காருக்குள் கேட்காது.

Malaika Arora Range Rover SUV

இதுமட்டுமின்றி, துளியளவும் அதிர்வுகள் மற்றும் அலுங்கல், குலுங்கல்களும் இந்த வாகனத்தில் தெரியாது. இத்தகைய சிறப்பான வசதிமிக்க சொகுசு காரே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஆகும். இதுபோன்று அதீத சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விலை பலமடங்கு அதிகமாக இருக்கின்றது.

பிரீமியம் அம்சங்களாக இந்த காரில் 35 மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், 13.1 அங்குல ஃப்ளோட்டிங் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் திரை, மல்டி ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், 4 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், பின் பக்க இருக்கையாளர்களுக்கான பெரிய பொழுதுபோக்கு திரை என எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல், இந்த காரில் இடம் பெற்றிருக்கும் எஞ்ஜினும் நம்மை பிரம்மில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இரு விதமான மோட்டார் தேர்வுகளை இந்த காரில் லேண்ட் ரோவர் வழங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களையுமே இதில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

4.4 லிட்டர் பெட்ரோல் தேர்விலும், 3.0 லிட்டர் டீசல் மோட்டார் தேர்வுகளே ரேஞ்ஜ் ரோவரில் வழங்கப்படுகின்றன. இந்த இரு மோட்டார்களும் பவர்ஃபுல் எஞ்ஜின்கள் ஆகும். பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 523 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோல், இதன் டீசல் வெர்ஷன் 346 பிஎஸ் முதல் 700 என்எம் டார்க் வரையில் வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் நட்சத்திர சகோதரிகளின் சொந்த வாகனம்தான் இது என்பதற்கான எந்தவொரு சான்றும் வெளியாகவில்லை. அதேவேளையில் இவர்கள் இருவரும் மிகப் பெரிய ரேஞ்ஜ் ரோவர் கார் பிரியர்களாக இருக்கின்றனர். இதை வைத்தே அந்த கார் அவர்களுடையதாக மட்டுமே இருக்க முடியும் என உறுதியாக முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 8:40 [IST]
English summary
Malaika arora spotted with range rover suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X