இவ்ளோ ஆபத்தான வகையில் அரசு பேருந்தை ஓவர் டேக் செய்தது இந்த நடிகரோட காரா! நல்ல வேளையா யாருக்கும் எதுவும் ஆகல!
மலையாளம், தமிழ் என இரு மொழி திரையுலகமும் அறிந்த ஓர் நடிகராக மம்மூட்டி இருக்கின்றார். இவருடைய நடிப்பில் தமிழில் வெளியாகிய 'தளபதி' திரைப்படம், தமிழ் திரை ரசிகர்களின் பிரியமான படங்களில் ஒன்றாகும். ரஜினி மற்றும் மும்முட்டி காம்பினேஷனில் தமிழ் திரையுலகை ஒரு கை பார்த்த படமே இதுவாகும்.
சிறந்த நட்புக்கு முன்னுதாரணமாக வெளியாகிய ஓர் படம் என்பதால் இப்போதும் பலரால் இந்த படம் போற்றப்பட்டு வருகின்றது. இதுபோன்று பல முன்னணி படங்களில் நடித்தவருக்கு சொந்தமான காரே, மிக மோசமான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகதற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான கார் ஒன்று சாலையில் வேகமாக பயணிக்கும் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றன.

மிக முக்கியமாக அந்த கார் மிகவும் ஆபத்தான முறையில் ஓவர் டேக் செய்திருப்பது பார்ப்போரை பதைபதைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. மற்ற நடிகர்களை போலவே நடிகர் மம்முட்டியும் மிகப் பெரிய வாகன காதலராக இருக்கின்றார். இவர் மட்டுமில்லைங்க, இவரின் மகனான துல்கர் சல்மானும் தீவிர வாகன காதலராக இருக்கின்றார்.
ஆகையால், இவர்களிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. விலை உயர்ந்த சொகுசு கார்கள் தொடங்கி அரிய வகை சூப்பர் கார்களும் அவர்களிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மம்மூட்டி இடத்தில் இருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரே தற்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு இருக்கின்றது.

காருக்குள் முன்னாள் கேஎஸ்ஆர்டிசி அரசு போக்குவரத்து சென்றிருந்த நிலையில், அதையே அதிக வேகத்தில் மம்மூட்டியின் சொகுசு கார் முந்திச் சென்றிருக்கின்றது. அது ஓர் மிகக் குறுகிய பாதையாகும். ஓர் வாகனம் செல்லவும், மற்றொரு வாகனம் வரவும் மட்டுமே அந்த பாதையில் முடியும்.
இத்தகைய மிகவும் குறுகலான பாதையிலேயே ஆபத்தான முறையில் மம்மூட்டியின் கார் ஓவர் டேக் செய்யப்பட்டு இருக்கின்றது. நல்ல வேளையாக அந்த நேரத்தில் எதிரில் எந்தவொரு வாகனமும் வராததன் காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. சொல்லப்போனால், மம்மூட்டியின் கார் அரசு பேருந்தை ஓவர்டேக் செய்யும் சில நொடிகளுக்கு முன்னர் வரை அந்த பாதையில் மாருதி வேகன்ஆர் கார் வந்துக் கொண்டிருந்தது.
ஆனால், அது வேறு பாதையை நோக்கி திரும்பிவிட்டது. அந்த கார் மட்டும் நேராகவே வந்திருக்கும் எனில் கட்டாயம் அசம்பாவிதம் அப்போது அரங்கேறி இருக்கும். லேண்ட் ரோவர் டிஃபெண்டர் வந்த வேகத்திற்கு வேகன்ஆர் கார் உடன் மோதி இருக்கும் எனில் வேகன்ஆர் உரு தெரியாமல் உருக்குலைந்திருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது.
இத்தகைய ஆபத்தான ஓவர்டேக்கிங்கையே பிரபல மலையாள நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான கார் தற்போது செய்திருக்கின்றது. ஓவர்டேக் செய்யாமல் பயணிப்பது என்பது இந்தியாவில் சாத்தியமற்றது ஆகும். இருப்பினும், ஆபத்தில்லா வகையில் மட்டுமே ஓவர்டேக் செய்ய வேண்டும். குறிப்பாக, வளைவுகளில் முந்துவது கூடவே கூடாது.
இருப்பினும், ஒரு சிலர் வளைவுகளில் இருக்கும் ஆபத்தை உணராமல் ஓவர்டேக் செய்துக் கொண்டு இருக்கின்றனர். நடிகர் மம்மூட்டி கார் பயணித்த பாதையும் வளைவு, நெளிவுகள் கொண்டதாகவே தெரிகின்றது. இத்தகைய பாதையிலேயே அவரின் கார் அதிவேகத்தில் பயணித்து தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கின்றது.
இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. சம்பவத்தின்போது நடிகர் அந்த காரில் பயணித்தாரா என்பது தெரியவில்லை. அதேவேளையில், மம்மூட்டியின் காரை தொடர்ந்து இன்னும் சில வாகனங்களும் அதேபாணியில் ஆபத்தான ஓவர் டேக் செய்திருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு கேரளா எம்விடி பிரிவு காவல்துறை நடிகரின் கார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என யூகிக்க முடிகின்றது. கடந்த காலங்களில் இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனங்களின் வைரல் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் குறிப்பிட்ட அந்த வாகனத்தின்மீதும், அதன் உரிமையாளரின்மீதும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ, நடிகர் மம்மூட்டி கார் மீதும் போலீஸ் நடவடிக்கை பாய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. பெரும் அபராதத் தொகை அல்லது கார் பறிமுதல் இதில் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் பாயலாம். அதேவேளையில், இந்த நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்றும் கூறிவிட முடியாது.


Click it and Unblock the Notifications








