குளியல் அறையில் இருக்கிறதா நினைச்சுட்டாரு போல.. பாத்ரூம் செய்ய வேண்டியத நடு ரோட்டுல செய்த நபரால் சலசலப்பு!
இந்தியர்கள் மத்தியில் சன்ரூஃப் (Sunroof) வச்ச கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதனால்தான் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் விலை குறைவான கார் மாடல்களில்கூட இந்த அம்சத்தை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. ஒரு காலத்தில் விலை உயர்ந்த பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டது.
ஆனால், இப்போதோ ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் என பலர் தங்களின் விலை குறைவான கார்களில் வழங்கத் தொடங்கிவிட்டனர். அந்தவகையில், ஹூண்டாய் அதன் புதிய வெர்னா கார் மாடலிலும் சன்ரூஃப் வசதியை வழங்குகின்றது. இது ஓர் செடான் ரக காராகும். இந்திய சந்தையில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த காரின் குறிப்பிட்ட வேரியண்டுகளில் இந்தியர்களைக் கவரும் விதமாக சன்ரூஃப் வசதியை ஹூண்டாய் வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த அம்சமானது கார் பயணத்தின்போதே வான்வெளியை ரசித்த வண்ணம் பயணிக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றது. இதுதவிர, காற்றோட்டத்தையும் இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.
வீடுகளில் காணப்படும் முற்றத்தைப் போன்று பல வழிகளில் பலனளிக்கக் கூடியதே இந்த சன்ரூஃப் ஆகும். ஆனால், இந்த அம்சத்தை உரிய வகையில் பயன்படுத்த கார் உரிமையாளர்கள் தவறிவிடுகின்றனர். குறிப்பாக, சன்ரூஃப் வழியாக வெளியே எட்டி பார்ப்பது, அதன் மீது அமர்ந்துக் கொண்டு பயணிப்பது என இவ்வாறான பல்வேறு விதிமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவும் ஒரு வழியில் போக்குவரத்து விதிமீறலே ஆகும். இத்தகைய செயலை செய்த ஓர் நபர்மீதே தற்போது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இளைஞர் ஒருவர் சன்ரூஃப் வழியாகக் வெளியே எட்டி பார்த்த வண்ணம் தன்னுடைய தன்னுடைய கட்டுமஸ்தான ஜிம் பாடியை காண்பித்திருக்கின்றார்.
இந்த செயலை மிகவும் பெருமையானதாக எண்ணிக் கொண்டு அவர் அவரது சமூக வலைதள பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்திருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் அதிகப்பேரால் பகிரப்பட்ட நிலையில், போலீஸாரின் கண்களிலும் பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அவருக்கு காவல்துறையினர் அபராதத்தை விதித்து இருக்கின்றனர்.
இளைஞரின் செயலைக் கண்டிக்கும் விதமாகவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. கார் நகர்ந்துக் கொண்டிருக்கும்போது தேவையில்லாமல் ஜன்னல் வழியாக எட்டிக் கூட பார்க்கக் கூடாது என்றே விதிகள் கூறுகின்றன. ஆனால், இந்த இளைஞரோ சன்ரூஃப் வாயிலாக முழுமையாக வெளியே வந்து தன்னுடைய சிக்ஸ் பேக் பாடியைக் காண்பித்து இருக்கின்றனர்.
இந்த சிக்ஸ் பேக்ஸைக் காண்பித்ததற்கே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த இளைஞர் இந்த விதிமீறலில் மட்டுமே ஈடுபடவில்லை. இதுதவிர மற்றொரு விதிமீறலையும் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அவருடைய காரில் தெளிவான பதிவெண் இடம் பெறவில்லை. மாறாக, அவரின் வழக்கு மொழியே அந்த பதிவெண்ணில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதுவும் போக்குவரத்து விதிகளின் தண்டனைக்குரிய செயல் ஆகும். இதுமாதிரியான செயல்களைத் தொடர்ந்தே காசியாபாத் காவல்துறை அந்த நபரின் காரையும் தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர். சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பது மிகவும் ஆபத்தானது. நாம் சன்ரூஃப் வழியாக வெளியுலகை ரசித்துக் கொண்டிருக்கையில் திடீரென பிரேக் பிடிக்க நேரிட்டால் நாம் தூக்கி வீச நேரிடலாம்.
அல்லது, சன்ரூஃபின் முனைகளில் மோதி காயமடைய நேரிடலாம். இதுபோன்ற ஆபத்தான சூழல் இருக்கின்றன காரணத்தினாலேயே சன்ரூஃப் வழியாக வெளியே எட்டி பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. வாகனங்களில் போகும்போது சாலையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும், குறிப்பாக, வாகனங்களை ஓட்டிக் கொண்டிருக்கையில் கவனத்தை சாலையில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த சூழலிலும் விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே இத்ததைகைய அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது. ஆனால், இதை பெரும்பாலான இளைஞர்கள் பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போதைய வெர்னா கார் சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








