Wrong Parking செய்யப்பட்ட வேகன்ஆர் காரை கைகளால் நகர்த்திய நபர்.. அசால்டா பண்ணிட்டாரு! வைரலாகும் வீடியோ!

பார்க்கிங் எப்படி செய்யக் கூடாதோ, அந்தவகையில், பார்க்கிங் செய்யப்பட்ட காரை இளைஞர் ஒருவர் எந்த கருவியின் உதவியும் இன்றி தனி மனிதனாக நகர்த்தி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய கார் செல்வதற்கு இடையூறாக அந்த கார் (மாருதி சுஸுகி வேகன்ஆர்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், இவ்வாறு, அந்த தலைப்பாகை அணிந்திருந்த நபர் செய்திருக்கின்றார்.

இந்தியாவில் சொந்தமாக வாகனங்களை வைத்திருப்பவர்கள் அனைவரும் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக பார்க்கிங் இருக்கின்றது. எனவேதான், இதனை அரசும் மிக பெரிய பிரச்னையாக பார்க்கின்றது. மேலும், ஒழங்கற்ற பார்க்கிங்கிற்கு எதிராக போக்குவரத்துத்துறை போர்க் கொடியை தூக்கும் வகையில் மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

Man moves wrongly parked wagonr with hands

குறிப்பாக, முறையற்றநிலையில் பார்க் செய்யப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல் மற்றும் கடுமையான அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அது எடுத்து வருகின்றது. இருப்பினும், நம்மில் பலர் வாகனங்களைப் பார்க் செய்வதில் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதே இல்லை. தேவைப்படும் நேரத்தில், பார்த்த இடத்தில் அப்படியே கார், பைக் எதுவாக இருந்தாலும் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றோம்.

இதனால் மற்ற வாகனங்களின் போக்குவரத்து என்ன ஆகும் என்பதை நாம் துளியளவும் கவலைப்படுவதே இல்லை. இவ்வாறு கண்டமேனிக்கு பார்க் செய்யும் நபர்களால், சில நேரங்களில் பெருத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுண்டு. அவ்வாறே போக்குவரத்திற்கு இடையூறாக மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதனையே டாடா ஹாரியர் காரில் வந்த நபர் அசால்டாக கைகளால் நகர்த்திவிட்டு சென்றிருக்கின்றார். இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. எந்தவொரு காரையும் கைகளால் நகர்த்துவது என்பது இயலாத ஒன்று. இருப்பினும், வேகன்ஆர் காரை அந்த நபர் அசால்டாக தள்ள வைத்திருக்கின்றார்.

இதற்கு அதன் சிறிய உருவம் காரணமாக இருக்கும் என நீங்கள் கருதலாம். ஆனால், வேகன்ஆர் சிறிய உருவம் கொண்ட காராக இருந்தாலும், அதை கருவிகள் இன்றி நகர்த்துவது முடியாத ஒன்றே. இருப்பினும், அந்த நபர் காரை இரண்டே தள்ளில் நகர்த்தி இருக்கின்றார். இதற்கு அவர் கையாண்ட சில நுணுக்கங்களே காரணமாக இருக்கின்றது.

ஆமாங்க, அந்த நுணுக்கங்களைக் கையாண்டதனாலேயே அவரால் வேகன்ஆர் காரை சுலபமாக சாலை ஓரத்திற்கு நகர்த்த முடிந்திருக்கின்றது. முதுகை வேகன்ஆர் காரின் மீது சாய்த்தும், பின் பக்க வீல் இருக்கும் இடத்தை அப்படியே கைகளால் தூக்கி பிடித்தும் அவர் நகர்த்தி இருக்கின்றார். இதனாலேயே இரண்டு தள்ளில் அவரால் அந்த காரை அவர் ஒதுக்கவிட முடிந்திருக்கின்றது.

இதன் பின்னரே அந்த பாதை பிற வாகனங்கள் பயணிக்க ஏதுவானதாக மாறி இருக்கின்றது. வேகன்ஆர் காரை போல, இன்னும் பலர் தங்களது பிரமாண்ட தோற்றம் கொண்ட கார்களைகூட அசால்டாக நடு ரோட்டில் செல்வதை நம்மால் காண முடிகின்றது. எத்தனையே பார்க்கிங் பகுதிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அதை பயன்படுத்தாமல் சாலையை அடைத்தவாறு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதை சிலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

சில நேரங்களில் இந்த தவறை அரசு வாகனங்களும் செய்வதுண்டு, குறிப்பாக, காவல்துறை வாகனங்கள் இதுபோன்ற அலட்சியங்களில் ஈடுபடுவதை நம்மால் பெருநகரங்களில் காண முடியும். ஆகையால், விதிமீறி வாகனங்களை நிறுத்தும் வாகனங்கள்மீது இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஏற்கனவே விதிகள் மிகக் கடுமையாக இருக்கின்றன. இருப்பினும், யாரும் அந்த விதிகளை முறையாக பின்பற்றுவதே இல்லை. ஆகையால், வாகன நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதைப் போல, முறையற்ற பார்க்கிங்கால் ஏற்படும் டிராஃபிக் ஜாம்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலை எப்படி கையாள வேண்டும் என்கிற பாடத்தை வழங்கும் விதமாகவே இந்த வேகன்ஆர் சம்பவம் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 11, 2023, 20:09 [IST]
English summary
Man moves wrongly parked maruti wagonr with hand
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+