டெல்லி காரங்க கிட்ட தான் இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார் எல்லாம் இருக்கும்... இந்தியாவில் பார்க்குறதே அபூர்வம்

இந்தியாவில் முதல்முறையாக மன்சோரி நிறுவனத்தால் மாடிஃபை செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் கார் டெல்லி என்சிஆர் பகுதியில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபல பிரிட்டிஷ் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸை பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக, நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கனவு காராக இருக்கும். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவது என்னமோ தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் தான்.

mansory rolls royce cullinan spotted in delhi ncr

ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல்களுள் ஒன்று கல்லீனன் ஆகும். லக்சரி எஸ்யூவி காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.6.95 கோடி என்ற அளவில் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் காரை இந்தியாவில் வைத்திருப்போர் மிகவும் குறைவே. அவ்வாறு வைத்திருக்கும் சிலரும் காரை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்தே பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாகவே, ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வாடிக்கையாளர்களால் கஸ்டமைஸ்ட் செய்தே பயன்படுத்துகின்றன. இதற்கேற்ப பல்வேறு வசதிகளை தங்களது டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது. அதேநேரம் சில பணக்காரர்கள் தங்களது ரோல்ஸ் ராய்ஸ் காரை 3ஆம் தரப்பு நிறுவனம் மூலமாக கஸ்டமைஸ்ட் செய்து கொள்கின்றனர். இந்த வகையில், மன்சோரி நிறுவனத்தால் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

குறிப்பாக, இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்ப்பதற்கு காரணம், மன்சோரி நிறுவனம் ஆகும். ஏனெனில் மன்சோரி அந்த அளவிற்கு லக்சரி கார் மாடிஃபிகேஷன் நிறுவனம். ஈரானிய பிரிட்டிஷ்காரரான கௌரோஷ் மன்சோரி என்பவரால் 1989இல் ஜெர்மனியில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தால் பல ரோல்ஸ்-ராய்ஸ், லம்போர்கினி, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் இதுவரையில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

mansory rolls royce cullinan spotted in delhi ncr

இந்த வரிசையில், மன்சோரி நிறுவனத்தால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் கார் தான் சமீபத்தில் டெல்லி என்சிஆர் பகுதியில் காட்சி தந்துள்ளது. இந்தியாவில் மன்சோரி நிறுவனத்தால் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று காட்சி தந்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். முத்தின் வெள்ளை நிறத்தில் உள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் காரில் மன்சோரி நிறுவனத்தின் கஸ்டம் பாகங்களை சுற்றிலும் காண முடிகிறது.

முன் மற்றும் பின்பக்கத்தில் பம்பர்களின் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. முன்பக்க க்ரில்லில் லைட் செட்-அப் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்பன் ஃபைபர் பேனல்களையும் கூடுதலாக காரின் வெளிப்பக்கத்தில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இவற்றுடன் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள், தாழ்வான சஸ்பென்ஷன் ம்ற்றும் பிரஷ்டு இரும்பு பொனெட்டையும் பெற்றுள்ள இந்த கல்லீனன் காரை கஸ்டமைஸ்ட் செய்வதற்கு கிட்டத்தட்ட சுமார் ரூ.80 இலட்சம் வரையில் செலவாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ரூ.80 இலட்சம் என்பது உண்மையில் அதிகமான தொகை ஆகும். இந்த பணத்தில் புதியதாக ஒரு மெர்சிடிஸ் அல்லது பிஎம்டபிள்யூ காரை வாங்கிவிடலாம். அப்படியென்றால், எந்த அளவிற்கு மன்சோரி கஸ்டமைஸ்ட் நிறுவனம் லக்சரி தரத்திலான சேவையை வழங்குகிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள். இதுபோன்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியாவில் பார்ப்பதே ஓர் அபூர்வமான விஷயம் ஆகும்.

Image Courtesy: Car Crazy India

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 17:18 [IST]
English summary
Mansory rolls royce cullinan luxury suv spotted in delhi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+