மேனுவல் பார்க்கிங் பிரேக் Vs எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் எது பெஸ்ட் தெரியுமா?

இன்று கார்களில் ஹேண்ட் பிரேக் எனப்படும் எமர்ஜென்ஸி பிரேக் இருக்கிறது. இது மேனுவல் கிரேக் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் என இரண்டு விதமாக இருக்கும். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? என்ன தொழிற்நுட்பத்தால் இவை இரண்டும் வேறுபடுகின்றன. எது கார்களுக்கு சிறந்தது என விரிவாகக் காணலாம்.

எமர்ஜென்ஸி/பார்க்கிங் பிரேக்: கார்களில் டிரம் பிரேக் தொழிற்நுட்பத்தில் தான் இந்த பார்க்கிங் பிரேக்கும் வேலைசெய்கிறது. டிரைவர் சீட் அருகே உள்ள லிவரை இழுத்தால் டிரம் பிரேக் போல பிரேக் ஷூக்களை பிஸ்டன் தள்ளி பிரேக் நிலையில் நிறுத்தும். இது அவசரக் காலத்திலும், பார்க்கிங் செய்யும் போது மட்டுமே பயன்படுத்தப்படும்.

Manual vs Electric Parking Brake

மேனுவல் பார்க்கிங் பிரேக்: இந்த பார்க்கிங் பிரேக்கை கையாள டிரைவர் சீட்டிற்கு அருகே ஒரு லிவர் இருக்கும் அதைப் பிடித்து இழுத்தால் இந்த பிரேக் பிடிக்கும். இது முற்றிலும் மெக்கானிக்கல் சிஸ்டம் தான். மேனுவலாக இயங்கும் தொழிற்நுட்பம். இப்படியான பிரேக்குகளை நீங்கள் குறைந்த விலை கார்களில் அதிகம் காண முடியும்.

இந்த மேனுவல் பார்க்கிங் பிரேக் பயன்படுத்துவதால் அவசரக் காலங்களில் பயன்படுத்துவது எளிது, இது மெக்கானிக்கல் முறையில் இயங்குவதால் பலர் இதை விரும்புவார்கள். பயன்படுத்துவதும் எளிது, அதே நேரம் இது ரிப்பேர் ஆனாலும் சரி செய்வது எளிது. வாகனத்தில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தி பிரேக்கை பிடிக்க முடியும்.

Manual vs Electric Parking Brake

இந்த ஹேண்ட் பிரேக்கை அவசரக் காலங்களில் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் வாகனம் வேகமாகச் செல்லும் போது பின் வீல் லாக் ஆகி வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் பராமரிப்பிலும் சிக்கல் இருக்கிறது. பெரும்பாலும் ஸ்டீல் கேபிள் தான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நாளாக நாளாகப் பழுதாகிவிடும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இந்த பிரேக்கை சர்வீஸ் செய்ய வேண்டும்.

எலெக்ரானிக் பார்க்கிங் பிரேக்: இது மேனுவல் பார்க்கிங் பிரேக்கில் உள்ள அதே தொழிற்நுட்பத்தைதான் பயன்படுத்துகிறது. ஆனால் இது எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மோட்டார் ஏபிஎஸ் உடன் இணைக்கப்பட்டிக்கும். இதனால் இந்த பிரேக் ஆக்டிவேட் செய்யப்படவுடன் பிரேக் ஏபிஎஸ் முறையில் பிடிக்கப்படும்.

Manual vs Electric Parking Brake

இந்த எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்தினால் வாகனம் விபத்தில் சிக்குவது தவிர்க்கப்படும். இதனால் பராமரிப்பு செலவும் குறைவு, இந்த பிரேக்கில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் ஸ்டீல் கேபிள் இருக்காது. அதனால் அதற்குப் பராமரிப்பு என்பது தேவையில்லை. அது ரிப்பர் ஆகும் போது மட்டும் சரி செய்து கொண்டால் போதுமானது.

இந்த பிரேக் வாகனத்தின் இசியூ உடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். இதனால் இந்த பிரேக் ஆக்டிவேட் ஆகியிருக்கும் போது வாகனம் நகர்ந்தால் இதை உடனடியாக சென்ஸ் செய்து வாகனத்தின் பிரேக்கை அப்ளை செய்துவிடும். இதனால் வாகனம் துளி கூட நகராமல் நிற்கும். மேனுவல் பிரேக்கில் இந்த வசதி கிடையாது.

ஆனால் இந்த எலெக்ட்ரானிக் பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் பெரிய பிரச்சனையே இதன் ஸ்விட்ச் தான். மேனுவல் பிரேக்கிங்கில் லிவர் பெரியதாக இருப்பதால் அதை கண்ட்ரோல் செய்வது எளிது, ஆனால் இதில் சுவிட்ச் இருப்பதால் அவசரக் காலத்தில் இதைக் கையாள்வது சிறப்பாக இருக்கும். இத்தனை நாட்கள் மேனுவல் பிரேக் சிஸ்டத்தை பயன்படுத்திவிட்டு தற்போது இதைப் பயன்படுத்தப் பழக நாளாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் தான் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பாதுகாப்பான பிரேக்கிங் சிஸ்டமாக இருக்கிறது. அதே நேரம் பாரமரிப்பும் குறைவு தான். அதே போல கேபினிலும் இதற்காக இடம் ஒதுக்க வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் தான் அனைத்து கார்களிலும் இருக்கும்.

Article Published On: Friday, May 5, 2023, 13:00 [IST]
English summary
Manual vs electric parking brake which one should you choose
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X