உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கிய மினி கூப்பர் காரின் விலை இவ்வளவு காஸ்ட்லியா? இந்த காருல அப்படி என்ன இருக்குது?

மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளார். திரைப்படம் வெற்றி பெற்றதற்காக இந்த பரிசை அவர் ரெட் ஜெயின்ட் நிறுவனம் மூலம் வழங்கியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடி வரும் நிலையில், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும், கதாநாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

mari selvaraj mini cooper gift

இந்தத் திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசியான திரைப்படம் என அவர் அறிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு வேறு திரைப்படங்களில் நடிக்காமல் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தயாரிப்பாளர் என்ற முறையில் ரெட் ஜெயின்ட் நிறுவனம் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கியுள்ளது. ரெட் ஜெயின்ட் நிறுவனத்தின் செண்பக மூர்த்தி இந்த பரிசை மாரி செல்வராஜிற்கு வழங்கினார்.

mari selvaraj mini cooper gift

இது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர்"ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களைக் கதையுடனும் களத்துடனும் தொடர்பு படுத்தி கருத்துக்களைப் பகிர்கிறார்கள்.
உலகத் தமிழர்களிடையே விவாதத்திற்குரிய கருப்பொருளாக மாறி இருக்கிறது.

அம்பேத்கர், பெரியார் அண்ணா கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை சமூக நீதி சிந்தனைகளை இளம் தலைமுறையிடம் விதைத்துள்ளது. வணிக நீதியாக மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயின்ட் நிறுவனம் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரை வழங்கி மகிழ்ந்தது.உலகம் முழுவதும் பறக்க மாமன்னனுக்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி."இவ்வாறு பதிவு செய்திருந்தார்.

mari selvaraj mini cooper gift

இயக்குனர் மாரி செல்வராஜிற்கு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அளித்த இந்த மினி கூப்பர் கார் காஸ்ட்லியான கார்களில் ஒன்றாகும். இந்தியச் சாலைகளில் மிக அரிதாக காணப்படும் கார்களில் இதுவும் ஒன்று. மினி கூப்பர் காரை பொறுத்தவரை ஒரே ஒரு வேரியன்டில் தான் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் 1998 சிசி 4 சிலிண்டர் இன்லைன் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் 189 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் டூயல் கிளட்ச் 7 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஸ்போர்ட்ஸ் மோட் ஆப்ஷனும் இருக்கிறது. இந்த காரில் பிரேக்கை பொறுத்தவரை முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. வீல்களும் அலாய் வீல்களாக வழங்கப்பட்டுள்ளன.

3850 மிமீ நீளமும், 1727 மிமீ அகலமும், 1414 மிமீ , 2495 மிமீ வீல் பேஸூம் இந்த காரில் இருக்கிறது. மொத்தம் 211 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ் வசதி இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய சீட்டிங் வசதி கொண்ட இந்த காரில் மொத்த மூன்று டோர்கள் மட்டுமே இருக்கிறது என்பது முக்கியமான தகவல்.

இந்தக் காரில் மொத்தம் 44 லிட்டர் அளவிலான பெட்ரோல் டேங்க் இருக்கிறது. இது முழு கொள்ளளவில் பெட்ரோல் நிரப்பினால் 748 கி.மீ வரை பயணிக்கும். அப்படி என்றால் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் திறன் கொண்ட காராக இது இருக்கிறது.

இந்த கார் இந்தியாவில் ரூ.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. ஆன்-ரோடு விலையைப் பொறுத்த வரை ரூபாய் 45 லட்சம் வரை செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த ஹேட்ச்பேக் ரக கார்களிலேயேஅதிக விலை கொண்ட காராக இது இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கூப்பர் காரை பொருத்தவரை சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுக்கக் கூடிய ஒரு காராக பார்க்கப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜிற்கு இந்த காரை பரிசளிப்பதன் மூலம் தமிழகத்தில் எளிய மக்களுக்கான சமூக அந்தஸ்தை வழங்கும் ஒரு விஷயமாக பார்க்கிறது. இந்த திரைப்படத்தின் மையக்கருவும் இப்படியாகத்தான் இருக்கிறது

More from DriveSpark

Article Published On: Monday, July 3, 2023, 10:38 [IST]
English summary
Mari selvaraj gifted mini cooper by udhayanidhi stalin after maamannan hit worth 40 lakh
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X