ரூ1 லட்சம் தள்ளுபடி விலையில் மாருதி கார்கள்! தீபாவளிக்கு ஆஃபரை அள்ளி வீசிட்டாங்க!
மாருதி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம்களில் (Maruti Nexa Showroom) விற்பனையாகும் வாகனங்களுக்கு தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதன்படி நெக்ஸா டீலர்ஷிப்களில் விற்பனையாகும் பலேனோ, இக்னீஷ், ஜிம்னி மற்றும் சியாஸ் ஆகிய கார்களுக்கு இந்த தள்ளுபடி விவரங்களை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
மாருதி சுஸூகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) : மாருதி நிறுவனம் சமீபத்தில்தான் தனது ஜிம்னி காரை அறிமுகப்படுத்தியிருந்தது. இது பெட்ரோலுக்கு உடன் கூடிய ஆஃப் ரோடு (Off-Road SUV) அம்சங்கள் நிறைந்த காராக விற்பனையாகி வருகிறது. தற்போது இதில் ஸெட்டா வேரியன்டிற்கு ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூபாய் 50,000 நேரடியாக விற்பனை விலையில் தள்ளுபடியும் கூடுதலாக 50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆல்பா வேரியன்டிற்கு ரூபாய் 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.ஸெட்டா வேரியன்டில் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆகிய 2 வேரியன்டும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தள்ளுபடிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலேனோ (Baleno): மாருதி சுஸூகி நிறுவனம் தனது பலேனோ என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் (Permium Hatchback) காருக்கும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி இந்த காருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூபாய் 20,000 நேரடியாக கேஷ் தள்ளுபடியாகவும்,

ரூபாய் 10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் கூடுதல் பத்தாயிரம் குறிப்பிட்ட ரக கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் அதற்கான போனஸாகவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி வெர்ஷன் காருக்கு கேஷ் தள்ளுபடியாக ரூ10,000, எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ25,000 வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாருதி இக்னீஷ் (Maruti Ignis): மாருதி நிறுவனம் தனது இக்னீஸ் காருக்கு ரூபாய் 70,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 35,000 கேஷ் தள்ளுபடியாகவும், ரூபாய் 15000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 10,000, குறிப்பிட்ட கார்களை எக்சேஞ்ச் செய்தால் அதற்காக கூடுதல் ரூபாய் 10,000 எக்சேஞ்ச் போனதும் வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் ரூபாய் 70,000 வரை தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.

மாருதி சுஸூகி சியாஸ் (Maruti Ciaz): மாருதி நிறுவனம் தனது சியாஸ் காருக்கு ரூபாய் 38,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதில் ரூபாய் 10,000 நேரடியாக காரின் விலையில் தள்ளுபடி எனவும், ரூபாய் 25000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் ₹3000 கார்பரேட் தள்ளுபடியாகவும் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மாருதி நிறுவனம் தனது நெக்ஸா பிராண்டில் இதுபோக சில கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவிக்காமல் உள்ளது. அந்த கார்கள் எல்லாம் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாக வரும் கார்களாக உள்ளன. ஃபிராங்க்ஸ்,இன்விக்டோ, எக்ஸ்எல் 6 மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களுக்கு மாருதி நிறுவனம் இதுவரை தள்ளுபடிகளை அறிவிக்கவில்லை.

மேலும் மேலே குறிப்பிட்டுள்ள தள்ளுபடி எல்லாம் மாடல் மற்றும் வேரியண்ட்களின் இருப்பை பொருத்தே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அருகில் உள்ள டீலரிடம் அவர்களிடம் உள்ள இருப்பு குறித்து தகவல்களை பெற்றவுடன் உங்கள் முடிவை எடுக்கவும். இருப்பு இல்லாத வாகனங்களுக்கு தள்ளுபடிகள் எதுவும் கிடைக்காது.
மாருதி நிறுவனம் இந்த தள்ளுபடி தீபாவளிக்காக இந்தியா முழுவதும் உள்ள மாருதி நெக்ஸா டீலர் ஷிப்புகளில் அறிவித்துள்ளது. அதன்படி யார் வேண்டுமானாலும் இந்த தள்ளுபடிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்து தள்ளுபடியின் கீழ் கார் வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இந்த தீபாவளியை நீங்கள் மாருதி நிறுவனத்தின் காருடன் கொண்டாட திட்டமிட்டால் இப்பொழுதே உடனடியாக அருகில் உள்ள ஷோரூமுக்கு சென்று புக்கிங் செய்யுங்கள்.
இது தள்ளுபடிகள் எல்லாம் மாருதி நிறுவனம் நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது. நீங்கள் இந்த தள்ளுபடி குறித்த விரிவான விபரங்கள் மற்றும் உங்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை நீங்கள் அருகில் உள்ள மாருதி நெக்ஸா ஷோரூமுக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். தற்போது பல்வேறு நிறுவனங்கள் தீபாவளி தள்ளுபடிகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி நேரத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை அதிகரிக்க பல்வேறு தள்ளுபடிகளை அறிவிப்பார்கள் அதன்படி தான் மாருதி நிறுவனம் தனது நெக்ஸா ஷோரூம் மூலம் விற்பனையாகும் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இது தள்ளுபடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









