கார் ஓனருக்கு சந்தோஷம் தாங்கல!! மாருதி 800 காரை இப்போதும் வைத்துள்ளீர்களா? இது மாதிரி மாற்றிக்கோங்க!!

1986ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாருதி 800 கார் தற்கால மாடர்ன் கார்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் மாருதி 800 காரை பற்றியும், இந்த காரை இவ்வாறு மாற்றியுள்ள கஸ்டமைஸ் நிறுவனத்தை பற்றியும் முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

நம் இந்தியர்களுக்கும், மாருதி 800 காருக்கும் இடையே மிக நெருங்கிய பிணைப்பு உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தற்சமயம் மார்க்கெட்டில் விற்பனையில் இல்லாவிடினும், மாருதி சுஸுகி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக இருப்பதற்கு 800 ஹேட்ச்பேக் காரின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அந்த அளவிற்கு, நம் நாட்டு மக்கள் பலர் மாருதி 800 கார்களை வாங்கி குவித்தனர்.

maruti 800 restored to original condition

குறிப்பாக, முதல்முறையாக காரை வாங்குவோரின் தேர்வு மாருதி 800 காராக இருந்தது. சிலர் தங்களது மாருதி 800 காரை இப்போதும் வைத்துள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர், தனது 1986இல் தயாரிக்கப்பட்ட மாருதி 800 காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். இந்த மாருதி 800 கார் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

இந்த வீடியோ 'ஆன் ரோடு பாடிஷாப்' என்ற யுடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ஆன் ரோடு பாடிஷாப் கஸ்டமைஸ் நிறுவனம் வாகனங்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொடுப்பதிலும், இந்த மாருதி 800 காரை போன்று புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றி கொடுப்பதிலும் நிபுணத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. அத்துடன், வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை கூட இந்த நிறுவனம் சரி செய்து வழங்குகிறது.

maruti 800 restored to original condition

சரி, இந்த 1986 மாருதி 800 கார் விஷயத்திற்கு வருவோம். இந்த 1986 மாருதி 800 காரை அதன் உரிமையாளர் ஆரம்பத்தில் பிரவுன் நிறத்தில் வாங்கியுள்ளார். 37 வருடங்களாக அதே பிரவுன் நிறத்தில்தான் கார் இருந்துள்ளது. பெயிண்ட் அப்படி இருந்தாலும், காரின் சில பாகங்கள் துருப்பிடித்து இருந்துள்ளன. மாருதி 800 போன்ற பழமையான கார்களை ரீஸ்டோர் செய்வதில் உள்ள சிக்கல்களில் ஒன்று, துருப்பிடித்த பாகங்களை மாற்றுவதாகும்.

ஏனெனில், விற்பனை நிறுத்தப்பட்ட கார்களுக்கான பாகங்களை பெறுவது என்பது கடினமான காரியம் ஆகும். ஆன் ரோடு பாடிஷாப் நிறுவனம் எவ்வாறு இந்த மாருதி 800 காரின் துருப்பிடித்த பாகங்களை மாற்றியது என்பது தெரியவில்லை. மீண்டும் பயன்படுத்தலாம் என்ற நிலையில் இருக்கும் துருப்பிடித்த பாகங்களை நன்கு தேய்த்து, பாலிஷ் செய்து, மீண்டும் அதே காரில் பொருத்தி பயன்படுத்துவர். பயன்படுத்தவே முடியாது எனும்போது, அதே வடிவில் பாகங்களை கொண்ட வேறு காரில் இருந்து எடுத்து பொருத்துவர்.

maruti 800 restored to original condition

பழைய மாருதி 800 கார்களில் முன் & பின்பக்க பம்பர்கள் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக்கால் ஆனவைகளாக வழங்கப்பட்டன. இந்த குறிப்பிட்ட மாருதி 800 காரிலும் அவ்வாறுதான் பம்பர் இருந்தாலும், ஆனால் பம்பர்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளன. இதனால் இரு பம்பர்களும் மாற்றப்பட்டன. அதேபோல், காரின் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஃபாக் விளக்குகளும் மாற்றப்பட்டுள்ளன.

காரின் பழைய பிரவுன் நிறத்திற்கு பதிலாக, மாருதி 800 காருக்கே உண்டான அடையாளமான சிவப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. சக்கரங்கள் மாற்றப்படவில்லை, புதியதாக பெயிண்டை மட்டுமே பெற்றுள்ளன. டயர்கள் புதியவை. 1986இல் உருவாக்கப்பட்ட மாருதி 800 காரில் ஏசி, பவர் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த 800 காரில் அந்த வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

maruti 800 restored to original condition

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீட்டில் நாமாக பழைய காரை ரீஸ்டோர் செய்வது நிச்சயமாக முடியாத காரியம். இதற்கு முக்கிய காரணம், பழைய கார்களின் பாகங்களை மார்க்கெட்டில் தேடி பிடித்து பெறுவது என்பது மிகவும் சிரமம். அதற்கு நமக்கு ஆன் ரோடு பாடிஷாப் போன்ற கஸ்டமைஸ் நிறுவனத்தின் உதவி தேவை. இந்த குறிப்பிட்ட மாருதி 800 கார் பிரவுன் நிறத்தை காட்டிலும் சிவப்பு நிறத்தில் சூப்பராக உள்ளதை கூறியே ஆக வேண்டும். இந்த காரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 21, 2023, 15:34 [IST]
English summary
Maruti 800 hatchback neatly restored to its original condition
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X