மாருதி கார்களின் விற்பனை கிடுகிடுனு உயரபோகுது! இந்தியர்களை சுண்டியிழுக்கும் அம்சங்களை புதுசா சேர்த்திருக்காங்க
மாருதி சுஸுகி அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களில் இந்தியர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய தொழில்நுட்ப வசதிகளைப் புதிதாக சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார் மாடல்களில் இந்தியர்களைச் சுண்டியிழுக்கும் அம்சங்களைப் புதிதாக சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் (Turn By Turn Navigation), ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ (wireless Android Auto and Apple CarPlay) எனும் மிக சூப்பரான அம்சங்களையே மாருதி சுஸுகி புதிதாக சேர்த்து உள்ளது.

இந்த அம்சங்களைதான் கொடுத்திருக்காங்க
இந்த கவர்ச்சிகரமான சிறப்பு அம்சங்களை அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான பலேனோ, எக்ஸ்எல் 6 மற்றும் எர்டிகா ஆகியவற்றிலேயே மாருதி சுஸுகி சேர்த்து இருக்கின்றது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் சிறப்பு வசதிகளில் ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ அம்சமும் ஒன்றாக இருக்கிறது. இந்த வசதி உடன் சேர்த்தே நிறுவனம் பயணத்தின்போது திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கக் கூடிய வசதியையும் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
எல்லாருமே ஆச்சர்யப்படுறாங்க
நிறுவனத்தின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளது. குறிப்பாக மாருதி கார் பிரியர்களை இச்-செயல் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஸ்மார்ட் ப்ளே ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ரக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் வாயிலாகவே இந்த அம்சத்தை மாருதி சுஸுகி பலேனோ, எக்ஸ்எல் 6 மற்றும் எர்டிகா கார்களில் வழங்கி இருக்கின்றது. திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதியானது ஸ்பீடோ எம்ஐடி-யில் வழங்கப்பட்டு உள்ளது.

ஆஹா இந்த அம்சங்களைக் கொடுத்திருக்காங்களா!!
எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 கார் மாடல்களில் கூடுதல் சிறப்பு வசதிகளாக சூப்பரான சரவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மாருதி சஸுகியின் திருப்பத்திற்கு திருப்பம் வழிகாட்டும் நேவிகேஷன், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளை ஏற்கனவே பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார் மாடல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எல்லாரையும் இதை பெற்றுக் கொள்ள முடியும்
இதனை ஓடிஏ (over-the-air) வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. லேட்டஸ்ட் மாடல்களை வைத்திருக்கும் நபர்களால் மட்டுமே இதனை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, மிகவும் சைலண்டாக மாருதி சுஸுகி நிறுவனம் இஎஸ்பி (electronic stability program) அம்சத்தையும் குறிப்பிட்ட சில மாடல்களில் வழங்கி இருக்கின்றது. பயணிகளின் பாதுகாப்பு தரத்தை இரட்டிப்பாக்கும் விதமாக இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், ஹில் அசிஸ்ட் அம்சமும் வழங்கப்படுகின்றது. பலேனோ காரில் இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படும். இந்த அம்சம் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார் மாடல்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படும். இந்த அம்சங்கள் சேர்ப்பால் விலை அதிகரிப்பு செய்யப்பட்டிருக்குமோ என எண்ணிக் கொள்ள வேண்டாம். அந்த கார்களின் விலையில் எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி செய்யவில்லை.

விலையை ஏத்திட்டாங்களா?
பலேனோ ரூ. 6.49 லட்சம் தொடங்கி ரூ. 9.83 லட்சம் வரையிலும், எக்ஸ்எல் 6 ரூ. 11.41 லட்சம் தொடங்கி ரூ. 14.55 லட்சம் வரையிலும், எர்டிகா ரூ. 8.49 லட்சம் தொடங்கி ரூ. 12.93 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த கார் மாடல்களுக்கு ஏற்கனவ இந்திய சந்தையில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை இரட்டிப்பாக்கும் வகையிலேயே சிறப்பு வசதிகளை கூடுதலாக மாருதி சுஸுகி சேர்த்து இருக்கின்றது. ஆகையால், இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு அடுத்து வரும் நாட்களில் இன்னும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, அதன் போட்டியாளர்களுக்கு கூடுதல் டஃப்னஸ்ஸை அவை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









