இதுலதான் கார் ஓட்டவே கத்துகிட்டோம்! கனத்த இதயத்துடன் பிரியாவிடை பெற்றது Maruti Alto 800! ரசிகர்கள் கண்ணீர்

இந்தியாவில் 2000மாவது ஆண்டில் ஏழைகளின் கார் வாங்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கியது மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கார் தான். குறைந்த பட்ஜெட்டில் இந்த கார் அறிமுகமான நிலையில் முதன் முறையாக கார் வாங்கும் பலர் இந்த காரை தான் தேர்வு செய்தார்கள்.

இந்த கார் பலரது வாழ்க்கையில் அவர்களது சமூக அந்தஸ்தையே மாற்றியது. இந்த கார் மார்கெட்டில் "குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி"-யை பெற்றது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் 23 ஆண்டுகளாக இந்த கார் விற்பனையிலிருந்த நிலையில் மாருதி நிறுவனம் இந்த மாருதி ஆல்டோ 800 காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

Maruti Alto 800 Discontinued

தற்போது மத்திய அரசு பிஎஸ்6 மாசு கட்டுப்பாட்டின் 2வது ஸ்டேஜை இன்று (ஏப்1ம்தேதி) முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த கட்டுப்பாட்டின் படி இன்ஜின்களில் ரியல் டைம் டிரைவிங் எமிஷன் அம்சத்தைப் பொருத்த வேண்டும். மாருதி நிறுவனத்தின் ஆல்டோ 800 காரின் இன்ஜினில் அதைப் பொருத்த அதிகம் செலவாகும் என்பதால் அந்த காரின் உற்பத்தியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படிப் பொருத்தினால் காரின் விலை அதிகமாகும். அந்த விலைக்கு மார்கெட்டில் வேறு கார்கள் இருப்பதால் இந்த காரின் விற்பனை படுத்துவிடும் என்பதால் இந்த காரையே ஒட்டு மொத்தமாக நிறுத்திவிட முாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 23 ஆண்டுக்கால ஆல்டோ 800 சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருகிறது.

இந்த ஆல்டோ 800 கார் தற்போது ரூ3.54 லட்சம் முதல் ரூ5.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்போது இந்த கார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆல்டோ கே10 கார் தான் மாருதி நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காராக மாறியிருக்கிறது. இந்த கார் ரூ3.99 லட்சம் முதல் ரூ5.94 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

மாருதி ஆல்டோ 800 காரை பொருத்தவரை 796 சிசி இன்ஜினை கொண்டது. இது 48 பிஎஸ் பவரையும் 69 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது. இது 41 பிஎஸ் பவரையும், 60 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாருதி ஆல்டோ 800 கார் கடந்த 2000வது ஆண்டில் விற்பனைக்கு அறிமுகமாகியிருந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு வரை 18 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தது. அதன்பிறகு ஆல்டோ கே10 கார் 2010ம் ஆண்டு மார்கெட்டிற்கு வந்தது.

2010க்கு பிறகு இதுவரை 17 லட்சம் ஆல்டோ 800 காரும் 9.5 லட்சம் ஆல்டோ கே10 காரும் விற்பனையாகியுள்ளது. இதுவரை மொத்தம் ஆல்டோ பிராண்டில் மட்டும் மொத்தம் 44.5 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆல்டோ 800 கார் 2016ம் நிதியாண்டில் 15 சதவீத மார்கெட் பங்கை வைத்திருந்தது. தற்போது 7 சதவீத பங்கை வைத்திருக்கிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி கூறும்போது : "இந்த செக்மெண்டில் கார்களை தயாரிக்கும் செலவு அதிகமாகிறது. அதே நேரத்தில், இந்த செக்மெண்டில் உள்ள வாடிக்கையாளர்களின் வருமானம் ஏறவில்லை. இதனால் இந்த செக்மெண்டில் கார்களை வாங்கும் திறன் கொண்ட மக்கள் குறைந்துவிட்டனர். இதனால் மார்கெட்டில் ஒட்டு மொத்த விற்பனையில் மந்தம் ஏற்பட்டது.

இந்த செக்மென்டில் விலையை நிர்ணயம் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறது. ஆல்டோ 800காரை விரும்பும் மக்கள் பலர் அதைக் கொஞ்சம் விலை அதிகமாக உள்ள ஆல்டோ கே10 காருக்கு மாறி வருகின்றனர். இதனால் ஆல்டோ 800 விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது.

இதனால் அரசு சொன்னபடி ஆல்டோ 800 காரின் இன்ஜினை மாற்றுவது என்பது பொருளாதார ரீதியாக உகந்ததாக இல்லை. " எனக் கூறினார். இதன் காரணமாக ஆல்டோ 800 காரை மாருதி நிறுவனம் நிறத்திவிட்டது. இனி ஆல்டோ கே10 தான் மாருதி நிறுவனத்தின் என்டரி லெவல் காராக இருக்கும்.

ஆல்டோ 800 கார் என்னதான் நிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சில கார்கள் இன்னும் விற்பனை செய்யப்படாமல் இருக்கிறது. இதை விற்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஒரு வேலை தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்தாலும் வரலாம்.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: இந்தியாவில் உள்ள பலரது சொந்த கார் கனவை மட்டுமல்லாமல் கார் ஓட்ட வேண்டும் என்ற கனவையும் நினைவாக்கியது ஆல்டோ 800 கார் தான். இந்த கார் இந்த கார் நிறுத்தப்படுவது பலருக்குச் சோகமான விஷயம் தான். இந்த வேளையில் இந்த ஆல்டோ 800 காருக்கு பிரியாவிடை கொடுப்பதை விட வேறு வழியில்லை!

Article Published On: Saturday, April 1, 2023, 12:40 [IST]
English summary
Maruti alto 800 discontinued production halts full detailed report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+