மார்ச் 31க்குள்ள மாருதி கார் வாங்குனா இவ்வளவு தள்ளுபடி கிடைக்குமா? பணத்தை எடுத்துட்டு ஷோரூம்க்கு ஓடுங்க

மாருதி நிறுவனம் தற்போது மார்ச் மாதத்திற்கான தனது தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் விற்பனையை அதிகப்படுத்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடிகளை அறிவிக்கும். அப்படியாக இந்த மார்ச் மாதம் மாருதி கார்களுக்கான தள்ளுபடி விபரங்கள் வெளியாகியுள்ளது. அதைக் காணலாம் வாருங்கள்.

மாருதி ஆல்டோ கே10 - Maruti Alto K10

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே 10 காருக்கு நுகர்வோர் சலுகையாக ரூ30 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ15 ஆயிரம், கார்பரேட் தள்ளுபடியாக ரூ4 ஆயிரம் ஆகிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் மார்ச் மாதம் வரை மட்டுமே இருக்கும்.

மார்ச் 31க்குள்ள மாருதி கார் வாங்குனா இவ்வளவு தள்ளுபடி கிடைக்குமா? பணத்தை எடுத்துட்டு ஷோரூம்க்கு ஓடுங்க

மாருதி ஆல்டோ 800 - Maruti Alto 800

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ 800 காருக்கு ரூ20 ஆயிரம் வரை நுகர்வோர் சலுகையும், எக்ஸ்சேஞ்ச் போஸாக ரூ15 ஆயிரம், கார்பரேட் தள்ளுபடியாக ரூ 3,100 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி உரிய ஆவணங்களின் அடிப்படையில் எக்ஸ்
ஷோரூம் விலையில் தள்ளுபடி செய்யப்படும்.

செலிரியோ - Maruti Celerio

மாருதி நிறுவனம் தனது செலிரியோ காருக்கு ரூ25 ஆயிரம் வரை நுகர்வோர் சலுகையாக வழங்கியுள்ளது. இது போக ரூ15 ஆயிரம் எக்ஸ் சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ4 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடியாக அறிவித்துள்ளது.

Maruti Suzuki Cash Discount Exchange Bonus Corporate Discount
Alto K10 Up to ₹30,000 ₹15,000 ₹4,000
Alto Up to ₹20,000 ₹15,000 ₹3,100
Celerio Up to ₹25,000 ₹15,000 ₹4,000
S-Presso Up to ₹30,000 ₹15,000 ₹4,000
Wagonr Up to ₹40,000 ₹15,000 ₹4,000
Swift Up to ₹30,000 ₹15,000 ₹4,100
Dzire - ₹10,000 -
Brezza - - -
Eeco ₹15,000 ₹10,000 ₹4,000

எஸ்-பிரஸ்ஸோ - S-Presso

இந்த காருக்கு மாருதி நிறுவனம் ரூ30 ஆயிரம் வரை நுகர்வோர் சலுகையை வழங்கியுள்ளது. மேலும் ரூ15 ஆயிரத்தை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ4 ஆயிரத்தை கார்பரேட் தள்ளுபடியாகவும் அறிவித்துள்ளது.

வேகன்ஆர்- Maruti WagonR

மாருதி நிறுவனம் தனது வேகன்ஆர் காருக்கு இருப்பதிலேயே அதிகமான நுகர்வோர் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரூ40 ஆயிரம் நுகர்வோர் சலுகை வழங்கப்பட்டுள்ளது.எக்ஸ் சேஞ்ச் போனஸாக ரூ15 ஆயிரமும், கார்பரேட் தள்ளுபடியாக ரூ4 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் - Swift

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு ரசிகர்கள் அதிகம் இந்த மார்ச் மாதம் இந்த காரை வாங்குபவர்களுக்கு நுகர்வோர் சலுகையாக ரூ30 ஆயிரமும், எக்ஸ் சேஞ்ச் போனஸாக ரூ15 ஆயிரமும், கார்பரேட் தள்ளுபடியாக ரூ4100ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசையர் - Dzire

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் செடான் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார். இந்த காருக்கு எக்ஸ் சேஞ்ச் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கார்பரேட் தள்ளுபடி மற்றும் நுகர்வோர் சலுகை ஆகிய தள்ளுபடிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஈக்கோ - Eeco

ஈக்கோ மாருதி நிறுவனம் வெளியிடும் ஒரே வேன் ஆகும். இதற்கான தள்ளுபடியையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ15 ஆயிரம் வரை நுகர்வோர் தள்ளுபடி, ரூ10 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ4 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி ஆகிய தள்ளுபடிகளை இந்த காருக்காக அறிவித்துள்ளது.

மாருதி நிறுவனம் இந்த தள்ளுபடிகளைத் தனது அரேனா ஷோரூம் கார்களுக்காக மட்டுமே அறிவித்துள்ளது. நெக்ஸா என்ற பிரிமியம் கார்களுக்கு தள்ளுபடி இது கிடையாது. அரேனாவிலேயே விற்பனையாகும் பிரெஸ்ஸா காருக்கு எந்த விதமான தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. பிரெஸ்ஸாக கார் கடந்த மாதம் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக இருந்துள்ளது.

மாருதி நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க அவ்வப்போது இவ்வாறான தள்ளுபடிகளை அறிவிப்பது வழக்கம். அப்படியாகவே புதிதாக இப்படியொரு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2023, 12:40 [IST]
English summary
Maruti announces arena discounts for march 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+