மளமளவென குறைந்த மாருதி கார்களின் விலை! இந்த ஒரு மாசத்துக்கு இவ்வளவு தள்ளளுபடியா?

மாருதி நிறுவனம் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது ஆண்டு இறுதி மாதம் என்பதால் இருப்பதிலேயே அதிக அளவிலான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன்படி மாருதி நிறுவனத்தின் விற்பனையாகும் கார்களுக்கான தள்ளுபடி விபரங்களை நாம் இங்கே விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது கார்களை பிரிமியம் கார்கள் பிரீமியம் இல்லாத கார்கள் என இரண்டு செக் மெண்டாக பிரித்து பிரிமியம் இல்லாத கார்களை அரேனா என்ற ஷோரூம் வழியாக விற்பனை செய்து வருகிறது. தற்போது 2023-ம் ஆண்டு இறுதி மாதம் என்பதால் இந்த மாதம் அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்ய அதிக தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

maruti discount december 2023

இதன்படி மாருதி ஆல்டோ காருக்கு ரூபாய் 15,000 வரை எக்சேஞ்ச் செல்லுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி வெர்ஷனுக்கு பொருந்தும். மாருதி ஆல்டோ கே10 காருக்கு வாடிக்கையாளர் தள்ளுபடி 35,000 எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூபாய் 15,000 கார்ப்பரேட் தள்ளுபடி 4000 என மொத்தம் ரூபாய் 54,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஆல்டோ கே 10 காரின் சிஎன்ஜி வேரியன்டிற்கு ரூ.25,000 வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடியாகவும் ரூபாய் 15,000 எக்சேஞ்ச் போனஸாகவும் மொத்தம் ரூபாய் 40,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மாருதி எக்ஸ்பிரெஸ்ஸோ காருக்கு ரூபாய் 35 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

maruti discount december 2023

இது போக எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூபாய் 20,000 கார்ப்பரேட் தள்ளுபடி ரூபாய் 4000 என ஆக மொத்தம் ரூபாய் 59 ஆயிரம் இந்த காருக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎன்ஜி வெர்ஷனிற்கு தள்ளுபடிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்த காரை மட்டும் தற்போது விற்பனையாகும் அதே விலையில் தான் வாங்க முடியும்.

அடுத்ததாக மாருதி ஈகோ காரின் பயணிகள் வேரியன்டிற்கு வாடிக்கையாளர் தள்ளுபடி 15,000 எக்ஸ்சேஞ்ச் போனதாக ரூபாய் 10,000 கார்ப்பரேட் தள்ளுபடி 4000 என மொத்தம் 29,000 அந்த காருக்கான தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிஎன்ஜி வெர்ஷனிற்கு ரூபாய் 25000 மட்டுமே தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு கார்ப்பரேட் தள்ளுபடி மட்டும் கிடையாது.

maruti discount december 2023

மாருதி வேகன்ஆர் காரை பொறுத்தவரை வாடிக்கையாளர் தள்ளுபடியாக ரூ30,000 எக்சேஞ்ச் போனதாக ரூ20,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ4,000 என மொத்தம் ரூ54,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. செலிரியோ காரை பொருத்தவரை வாடிக்கையாளர் தள்ளுபடி ரூபாய் 35,000 எக்ஸ் சேஞ்ச் போனஸாக ரூபாய் 20,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 4000 என மொத்தம் ரூபாய் 59,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் சிஎன்ஜி வெர்ஷனுக்கு கார்ப்பரேட் தள்ளுபடி மட்டும் செல்லுபடி ஆகாது.

மாருதி சுஸூகி ஸ்விப்ட் காரை பொருத்தவரை வாடிக்கையாளர் தள்ளுபடி ரூ30,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ20,000 கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ4000 என மொத்தமாக ரூ54,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் ஸ்விஃப்ட் காருக்கான ஸ்பெஷல் எடிசன் கிட்டை ரூ3400க்கு விற்பனை செய்கிறது. இதில் காருக்கு ரூ25,000 வாடிக்கையாளர் தள்ளுபடி மட்டுமே பொருந்தும். டிசையர் காரை பொறுத்தவரை வாடிக்கையாளர் தள்ளுபடி ரூ25,000 போக எக்சேஞ்ச் போனஸூக்காக ரூ10,000 தள்ளுபடி ஆக வழங்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை நிலவரம் ஜனவரி மாதம் முதல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் தள்ளுபடிகளை அறிவித்து அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் நீங்கள் மாருதி நிறுவனத்தின் காரை வாங்க விரும்பினால் உடனடியாக மாருதி ஷோரூம் சென்று உங்களுக்கு விருப்பமான காரை புக் செய்யுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எப்பொழுதும் விலை ஏறும் முன் முடிந்த அளவுக்கு அதிகமான கார்களை விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அப்படியான ஒரு நடவடிக்கை தான் மாருதி நிறுவனம் தற்போது எடுத்துள்ளது. இந்த மாதம் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்தால் அடுத்த மாதம் விலை ஏறும்போது குறையும் விற்பனை சரிவை சமாளிக்க முடியும் என நிறுவனம் கணக்கிடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 6, 2023, 23:32 [IST]
English summary
Maruti arena year end discounts december 2023 alto to swift
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X