10 லட்சம் பிரெஸ்ஸா கார்களை தயாரித்த மாருதி! இது வேற லெவல் சாதனைப்பா!

மாருதி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரை 10 லட்சம் கார்கள் தயாரித்து புதிய சாதனையை படித்துள்ளது. இந்த சாதனை நிறுவனத்திற்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்துள்ளது. மாருதி நிறுவனத்தின் பல சாதனைகளில் இதுவும் ஒரு சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையை அந்நிறுவனம் 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதத்தில் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் கார்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் கார்களாக இருக்கின்றன. மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மாருதி கார்களை வாங்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு போட்டி இருக்கும். இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் எஸ்யூவி காராக பிரெஸ்ஸா அறிமுகமானது முதல் தற்போது வரை சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

maruti brezza 1 million milestone

மாருதி நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் முதன்முதலாக விட்டாரா பிரெஸ்ஸா என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் சரியாக அறிமுகமாகி ஓராண்டுக்கு பிறகு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் சாதனை படைத்தது. அப்பொழுது அந்த கார் நீண்ட ஆண்டுகளுக்கு சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இந்த சப் காம்பேக்ட் கார் மொத்தம் 5 லட்சம் என்ற உற்பத்தி இலக்கு மைல் கல்லை எட்டியது. வெறும் 46 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5லட்சம் அதாவது 10 லட்சமாவது இலக்கை தற்போது எட்டியுள்ளது. இதற்கு 47 மாதங்கள் எடுத்துக் கொண்டது. ஆக மொத்தம் 94 மாதங்களில் இந்நிறுவனம் 10 லட்சம் என்ற மைல் கல்லை தற்போது எட்டிப் பிடித்துள்ளது.

maruti brezza 1 million milestone

கடந்த நவம்பர் மாதம் விற்பனை விபரம் வெளியாகும் போது மாருதி நிறுவனம் மொத்தமாக 9,96,608 பிரெஸ்ஸா காரர்களை தயாரித்திருந்தது. தற்போது கூடுதலாக 3392 கார்களை தயாரித்து 10 லட்சம் என்ற இலக்கை எட்டி பிடித்துள்ளது. தற்போது சராசரியாக ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மார்க்கெட்டில் இந்த பிரெஸ்ஸா காருக்கு போட்டியாக டாடா நெக்ஸான், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதில் டாடா நெக்ஸான் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக இருக்கிறது. மற்ற கார்களின் விற்பனை எல்லாம் குறைவாக தான் உள்ளது.நெக்ஸான், பிரெஸ்ஸா ஆகிய கார்கள் தான் இந்த செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகும் காரர்களாக உள்ளன.

maruti brezza 1 million milestone

மாருதி நிறுவனம் முதன்முறையாக தனது விட்டாரா பிரெஸ்ஸா காரை அறிமுகப்படுத்தும்போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்ட காராக அறிமுகப்படுத்தியது. அப்பொழுது 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இருந்தது. அதன் பின்னர் 2020-ம் ஆண்டு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே இந்த கார் விற்பனையாகி வருகிறது.

மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட பிரெஸ்ஸா காரை காட்சிப்படுத்தியிருந்தது. இது கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது முதல் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இதனால் தற்போது செக்மெண்டிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் காராக இந்த கார் தான் இருக்கிறது.

இதற்கு முந்தைய நிதியாண்டுகளில் இந்த செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார்தான் இருந்தது. தற்போது அந்த காரின் விற்பனையை முந்தி இந்த கார் அதிகமான விற்பனையாகவே வரும் காராக மாறி உள்ளது . சிஎன்ஜியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் இதுவரை அந்த கார் தயாரிப்புக்கு உள்ளாகவில்லை. இந்த வெர்ஷனும் வந்தால் இதன் விற்பனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் மக்கள் விரும்பும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. தொடர்ந்து மாருதி நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்து கொண்டே வருகிறது. இதனால் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 18:46 [IST]
English summary
Maruti brezza 1 million sales milestone since launch achievement celebration
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X