சோப்பு டப்பாகூட இப்படி சேல்ஸ்ஆகுமா தெரியல... மாருதி பிரெஸ்ஸா சேல்ஸானது பார்த்து உலகமே மிரண்டு நிக்குது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா (Brezza) இருக்கின்றது. இந்த கார் மாடலை கடந்த காலத்தில் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) எனும் பெயரில் மாருதி சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த காரை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது மாருதி. இதுவே அந்த கார் விற்பனைக்கு வந்தது முதல் முறையாகும். இந்த நிலையிலேயே பிரெஸ்ஸா எனும் புதிய அவதாரத்தில் இந்த கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

இது விற்பனைக்கு வந்த எட்டு மாதங்களிலேயே ஒன்பது லட்சம் யூனிட் விற்பனை என்கிற இமாலய சாதனையை அந்த கார் படைத்தது. இதுபோல விற்பனையில் பற்பல புதிய சாதனைகளை இந்த கார் படைத்திருக்கின்றது. ஆகையால், சாதனைப் படைப்பதிலேயே சாதனைப் படைத்த மாருதி சுஸுகி காராக அது காட்சியளிக்கின்றது.
இந்த நிலையிலேயே பிரெஸ்ஸா மற்றுமொரு மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தற்போது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விட்டாரா பிரெஸ்ஸாவாக விற்பனைக்குக் கிடைத்தது தொடங்கி இப்போது பிரெஸ்ஸாவாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது வரை என இந்த கார் இரண்டுமாக சேர்ந்து இதுவரை 10 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஒரு மில்லியன் (One Million) யூனிட்டுகள் இந்த கார் மாடல் விற்பனையாகி இருக்கின்றது. விட்டாரா பிரெஸ்ஸா (பிரெஸ்ஸா) விற்பனைக்கு வந்து 94 மாதங்கள் ஆகின்றன. ஆண்டு கணக்கில் பார்த்தேமேயானால் 7 ஆண்டுகள் 8 மாதங்கள் இந்த கார் விற்பனைக்கு வந்து ஆகின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் 1 மில்லியன் யூனிட் விற்பனை எண்ணிக்கையை எட்டி சாதனைப் படைத்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் தொடங்கி நவம்பர் வரையில் மட்டுமே இந்த கார் 1 லட்சத்து 11 ஆயிரத்து 371 யூனிட்டுகள் வரை விற்பனையாகியது குறிப்பிடத்தகுந்தது.

இதை வைத்து பார்க்கையில் மாதம் ஒன்றிற்கே இந்த கார் 13 ஆயிரத்து 921 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன என்பதும் தெரிய வந்திருக்கின்றன. இந்த விற்பனை இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. இப்போதும் இதே வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த கார் தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு விதமான ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் சிஎன்ஜி ஆப்ஷன் நடப்பாண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மார்ச் மாதத்திலேயே அரங்கேறியது. நாட்டின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார் மாடலாக பிரெஸ்ஸா காட்சியளிக்கின்றது.

ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அது 25.51 கிமீட்டர் வரை மைலேஜை வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. மேலும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ரூ. 8.29 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு கிடைக்கின்றது. சிஎன்ஜி ஆப்ஷன் ரூ. 9.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
இவை வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. இந்த காரில் அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிறப்பம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றுடன், ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் ஆகிய வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்ததுபோன்ற இன்னும் பல அம்சங்களை பிரெஸ்ஸா கார் தாங்கி இருக்கின்றது. இதுபோன்ற காரணங்களினாலேயே இந்த கார் இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே தற்போது 10 லட்சம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை அந்த கார் எட்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









