ஒரே நேரத்தில் டெலிவரி கொடுக்கப்பட்ட 222 யூனிட் ஆல்டோ கே10 கார்கள்.. ஒரே ஊரு காரர்கள் செய்த சம்பவம்.. எந்த ஊரு?
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மலிவு விலை கார் மாடல்களில் ஆல்டோ கே10 (Alto K10)-ம் ஒன்றாகும். 2022 ஆகஸ்டு முதல் இந்த கார் நாட்டில் விற்பனையில் இருக்கின்றது.
விற்பனைக்கு வந்து ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் இந்த கார் மாடல் காலை எடுத்து வைத்திருக்கின்றது. இதற்குள்ளாகவே இந்த கார் மாடல் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகிவிட்டன. இந்த காரின் விலையும் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவும். மேலும், மைலேஜையும் இந்த கார் வாரி வழங்கும். இதனால்தான் எளிய மக்களின் பிரியமான கார் மாடலாக ஆல்டோ கே10 காட்சியளிக்கின்றது.

அதேவேளையில், விலை குறைவாக இருந்தாலும் இந்த காரில் சிறப்பு வசதிகளுக்கும் சற்றும் குறைச்சலின்றி இந்த கார் காணப்படுகின்றது. ஆகையால், எளிய மக்களின் ஆடம்பர வாகனமாகவும் அது காட்சியளிக்கின்றது. இத்தகைய காரையே ஒரே ஊரைச் சேர்ந்த பலர் வாங்கி சமீபத்தில் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள், அனைவருக்கும் ஷோரூம் நிர்வாகங்கள் சேர்ந்து அந்த காரை டெலிவரி கொடுத்திருக்கின்றனர். சுமார் 222 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அந்த காரை வாங்கி இருக்கின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மக்களே ஆல்டோ கே10 காரை அதிகளவில் வாங்கிக் குவித்து இருக்கின்றனர்.

ஒரே நேரத்தில் 222 யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்பட்டதால் இந்த நாளை விழாவைப் போல அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர். மேலும், இந்த கொண்டாட்டம் பன்முக டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஹைலேண்ட் ஆட்டோ, ஜம்காஷ் வெயிக்கிள் லீட்ஸ், காஷ்மீர் பிரைவேட் லிமிடெட் மற்றும் பீக்ஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகிய டீலர்கள் வாயிலாகவே இந்த கார் டெலிவரி வழங்கும் நிகழ்வு கொண்டாடப்பட்டு இருக்கின்றது.
மாருதி சுஸுகி நிறுவனம், ஆல்டோ கே10 காரை ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எஸ்டிடி (STD), எல்எக்ஸ்ஐ (LXI), விஎக்ஸ்ஐ (VXI), விஎக்ஸ்ஐ பிளஸ் (VXI Plus) மற்றும் விஎக்ஸ்ஐ ஏஎம்டி (VXI AMT) ஆகிய வேரியண்டுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
மேலும், இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படும். சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த கார் சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. மேனுவல் ஏசி, முன் பக்கத்தில் பவர் விண்டோ, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர் பேக், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இபிடி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.998 சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 65.71 பிஎச்பி வரை வெளியேற்றும்.
மேனுவல், ஏஜிஎஸ் ஆகிய இரு கியர்பாக்ஸ் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் எம்டி 24.39 கிமீ மைலேஜையும், பெட்ரோல் ஏஜிஎஸ் ஆப்ஷன் 24.90 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி அதிகபட்சமாக 33.85 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் ஆரம்ப விலையும் மிக மிக குறைவே ஆகும். ரூ. 3.99 லட்சமே அதன் விலை ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆல்டோ கே10 எளிய மக்களின் ஆடம்பர வாகனமாக காட்சியளிக்கின்றது. மைலேஜை வாரி வழங்குவது முதல் குறைவான பராமரிப்பு செலவை வழங்குவது வரை என அனைத்திலும் இந்த கார் மிக சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் ஆல்டோ பெயருக்கு நல்ல மதிப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








