28 வருட பழைய கார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க!! இறந்த தந்தைக்கு இதைவிட ஒரு மரியாதை செய்ய முடியாது!

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது மகன் தந்தை பயன்படுத்திய பழைய மாருதி எஸ்டீம் (Maruti Esteem) காரை ரீ-ஸ்டோர் செய்து அசத்தியுள்ளார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றையும், மாருதி எஸ்டீம் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

800 என்ற ஹேட்ச்பேக் காரின் மூலமாக கார்கள் விற்பனையில் பயணத்தை துவங்கிய மாருதி சுஸுகி நிறுவனம் அதன்பின் ஆம்னி, ஜிப்ஸி என பல்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை அறிமுகப்படுத்தியது. இதில் ஜிப்ஸி ஓர் 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட எஸ்யூவி ஆகும். அதேபோன்று, செடான் கார்கள் பிரிவிலும் மாருதி 1000 என்ற செடான் காரை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது.

maruti suzuki esteem car restored

பின்னர், 1994இல் மாருதி 1000 காருக்கு பதிலாக மாருதி சுஸுகி எஸ்டீம் என்ற செடான் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. 800, ஆம்னி, ஜிப்ஸி போன்ற கார்கள் மாருதி சுஸுகிக்கு மிகுந்த வெற்றிக்குரிய மாடலாக அமைந்தாலும், எஸ்டீம் காரை பெரும்பாலான மக்கள் கண்டுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் இருந்தே மாருதி சுஸுகிக்கு செடான் கார்கள் எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை.

இந்த வரிசையில் வந்த மாருதி எஸ்டீம் 2007 வரையில், கிட்டத்தட்ட 13 வருடங்கள் விற்பனையில் இருந்தாலும், இது ஓர் அரிதான கார் ஆகும். அதாவது, மாருதி எஸ்டீம் காரை இப்போது சாலையில் காண்பது மிகவும் அரிதாகும். இதனாலோ என்னவோ... கேரளாவில் ஓர் குடும்பம் கிட்டத்தட்ட கடந்த 28 வருடங்களாக தங்களின் மாருதி எஸ்டீம் காரை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.

maruti suzuki esteem car restored

அந்த குடும்பத்தில், தந்தையின் விருப்பத்தின் படி அவரது மகன் நீண்ட காலமாக குடும்பத்தில் ஓர் அங்கமாக விளங்கிவரும் அவர்களது மாருதி எஸ்டீம் காரை ரீ-ஸ்டோர் செய்து, காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, தற்போது எஸ்டீம் காரை ரீ-ஸ்டோர் செய்துள்ளவரின் தந்தை மற்றும் தாத்தா இருவரும் ஆட்டோமொபைல் பிரியர்கள்.

இவர்கள் இருவரும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் பணியாற்றி உள்ளனர். இவர்கள் வாங்கிய முதல் கார் மாருதி ஆம்னி ஆகும். அதன்பின், பிரீமியர் பத்மினி கார் ஒன்றையும் வாங்கியுள்ளனர். அதன் பின்னர், இந்த கதையின் கதாநாயகனான மாருதி எஸ்டீம் காரை 1995இல் வாங்கியுள்ளனர். அதன்பின், பழைய கார்களை விற்று, ஃபோக்ஸ்வேகன் போலோ என்ற மாடர்ன் காரை வாங்கினாலும், மாருதி எஸ்டீம் காரை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் பத்திரப்படுத்தி வந்துள்ளனர்.

maruti suzuki esteem car restored

மெட்டாலிக் மெரூன் நிறத்தில் இருக்கும் இந்த குறிப்பிட்ட எஸ்டீம் செடான் காரை ரீ-ஸ்டோர் செய்தவரின் தந்தை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் 2020இல் கொரோனா ஊரடங்கு சமயத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் மரணம் அடையவே, இந்த காரை பயன்படுத்த ஆள் இல்லை. அதுமட்டுமின்றி, காரில் அதிக பழுதுகள் ஏற்பட்டுள்ளன. காரும் சிறியதாக இருந்ததால், குடும்பமாக பயணிக்க முடியவில்லை.

இதனால், காரை விற்று புது காரை வாங்கும் முடிவிற்கு இந்த குடும்பம் வந்துள்ளது. அதன்பின்பு தான், யாரோ ஒருவரின் அறிவுறுத்தலில் எஸ்டீம் காரை ரீ-ஸ்டோர் செய்யும் யோசனை இந்த குடும்பத்தாருக்கு வந்துள்ளது. அதன்படி, கார் மொத்தமாக ரீ-ஸ்டோர் செய்யப்பட்டு உள்ளது. 28 வருடங்கள் பழமையான இந்த மாருதி எஸ்டீம் காரின் ஏசி முற்றிலுமாக வேலை செய்யாமல் இருந்தது.

maruti suzuki esteem car restored

அதனை சரி செய்தத்தோடு, வாங்கிய புதியதில் இருந்த தோற்றத்திற்கு காரை கொண்டுவர இவர்களுக்கு கிட்டத்தட்ட 1 வருடம் தேவைப்பட்டு உள்ளது. 2000ஆம் துவக்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட காராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இது 1995இல் உருவாக்கப்பட்ட கார் என்பதால், உதிரி பாகங்களை பெறுவது மிகவும் சவாலானதாக இருந்துள்ளது. காரை ரீ-ஸ்டோர் செய்த நபர் மாருதி சுஸுகியின் டீலர்ஷிப்களை கூட தொடர்புக் கொண்டு பேசி பாகங்களை பெற முயற்சித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான பழைய கார்களை ரீ-ஸ்டோர் செய்வதில் உள்ள ஒரே குறை என்னவென்றால், அவற்றிற்கான பாகங்களை பெறுவதுதான். அதிலிலும், மாருதி எஸ்டீம் போன்ற மிகவும் குறைவாக விற்பனையான காருக்கு இப்போது உதிரி பாகங்களை பெறுவது இன்னும் கஷ்டம். இருந்தாலும், எப்படியோ இதனை நிஜமாக்கி இருப்பது மட்டுமின்றி, தந்தையின் ஆசையையும் இந்த நபர் நிறைவேற்றி உள்ளார்.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Saturday, September 30, 2023, 23:47 [IST]
English summary
Maruti esteem car restored after 28 years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X