"கடைசியா ஒரு தடவை டெஸ்ட் பண்ணி பாத்துக்குவோம்" ஃப்ராங்க்ஸ் காரை விற்பனைக்குக் கொண்டு வரப்போகும் மாருதி!
மாருதி நிறுவனம் ஃப்ராங்க்ஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை கடந்த ஜனவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ள நிலையில் இந்த கார் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. அதைப்பற்றிக் காணலாம்.
மாருதி நிறுவனம் தனது பலேனோ என்ற பிரிமியம் ஹேட்ச் பேக் காரின் அடிப்படையில் கூபே ஸ்டைலில் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தப்போவதாகச் செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் ஃப்ராங்க்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது.

இந்த காரை அந்நிறுவனம் அடுத்த மாதம் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தினமும் 250-300 கார்களுக்கான புக்கிங் இந்த காருக்காக குவிகிறது. இந்நிலையில் இந்த கார் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியச் சாலைகளில் வெள்ளை நிறத்தில் புரோட்டோ டைப் டாப் வேரியன்ட் கார் ஒன்று டெஸ்டிங்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த 5 சீட்டர் கார் குறைந்த எடையில் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. பலேனோ காரின் பல அம்சங்கள் இந்த காரிலும் இருக்கிறது. அந்த காரில் பலேனோ காரில் உள்ள பல
இந்த காரின் வெளிப்புறத்தில் முகப்பு பக்க கிரில் குரோம் நிறத்தில் கிரிஸ்டல் பிளாக் வடிவில் எல்இடி ரன்னிங் லைட் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஃப்யூச்சரிசம் டிசைன் ஃபிலாஷஃபியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறத்திலும் எல்இடி லைட் கார் முழுவதும் இணைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மற்ற சில கவனிக்கத்தக்க அம்சம் என்றால் பிரிஸியன் கட் அலாய் வீல், முன்புறமும், பின்புறமம் உள்ள ஸ்கிட் பிளேட், கருப்பு கிளாடிங் கொண்ட சதுர வடிவ வீல் ஆர்ச்கள், க்ரோம்டு விண்டோ லைன், ஆகியன இந்த காரில் வெளிப்புறத்தில் எஸ்யூவி காருக்கான பல அம்சங்களைக் கொண்டு பலேனோ ஸ்டைலையும் மீறாமல் எஸ்யூவி கூபே வடிவில் இந்த காரை மாருதி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உட்புறத்தைப் பொருத்தவரை பல பிரிமியம் அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. கருப்பு மற்றும் பார்டியக்ஸ் என்ற கான்ட்ராஸ்ட் நிற கலர் தீமில் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஸ்மார்ட் பிளே ப்ரோ ப்ளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, எச்யூடி, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், 360 டிகிரி கேமரா சிஸ்டம், ஆகிய உள்ளன.
இது போக செல்போனை சார்ஜ் போட வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், ஆர்கமிஸ் சரவுண்ட் சிஸ்டம், 40+ கனெக்ட் பாதுகாப்பு அம்சங்கள், லோகேஷன் மற்றும் ட்ரிப்ஸ், வெஹிகில் இன்ஃபர்மேஷன் மற்றம் அலர்ட்கள் ஆகியன இருக்கின்றன. முக்கிய அம்சமாக 6 ஏர் பேக் மற்றும் 3 பாயிண்ட் இஎல்ஆர் சீட்பெல்ட்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.
இது போக காரில் பாதுகாப்பு அம்சங்களில் ஹில் ஹோல்டு அசிஸ்ட் உடன் கூடிய இஎஸ்பி, ரோல் ஓவர் மிட்டிகேஷன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஐஎஸ்ஓ பிக்ஸ் குழந்தைகளுக்கான சீட், ஆகிய இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. மாருதி கார்களில் சிறந்த பாதுகாப்பும் அம்சங்கள் நிறைந்த கார்களில் இதுவும் ஒன்று!
இந்த மாருதி ஃப்ராங்க்ஸ் கார் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதில் 1.2 லிட்டர் இன்ஜின் கே12என் டூயல் ஜெட் இன்ஜினாகும். 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் டூயல் விவிடி இன்ஜின் ஆகும்.
இந்த இரு இன்ஜின்களும் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சங்களைக் கொண்டிருக்கும்.. இந்த இன்ஜின் 6000 ஆர்பிஎம்மில் 90 பிஎஸ் பவரையும் 4400 ஆர்பிஎம்மபில் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். டர்போ பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 5500 ஆர்பிஎம்மில் 100 பிஎஸ் பவரையும், 4500 ஆர்பிஎம்மில் 148 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இதில் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏடிஎம்டி கியர் பாக்ஸ் உடனும், டர்போ பெட்ரோல் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோகியர் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. ஆட்டோ கியர் காரில் பெடல் ஸிஃப்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Source: Gaadiwaadi


Click it and Unblock the Notifications








