மைலேஜ்ல மாருதிய அடிச்சுக்க முடியாது! ஃப்ராங்க்ஸ்-க்கு போட்டியா ஒரு கார் கூட இவ்வளவு மைலேஜ் கொடுக்குறது இல்ல!

மாருதி நிறுவனம் தனது ஃப்ரான்க்ஸ் காரை இன்று அதிகாரிப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கிறது என காணலாம்.

மாருதி ஃப்ரான்க்ஸ் கார் ஒரு காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த செக்மெண்டில் ஏற்கனவே மாருதி தனது பிரெஸ்ஸா காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஃப்ரான்க்ஸ் காரை பொருத்தவரை அதன் விலை மதிப்பில் மார்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. இதன் ஒப்பீட்டை காணலாம்.

Maruti Fronx Comparison

விலை: மாருதி ஃப்ரான்க்ஸ் கார் ரூ7.46 லட்சத்தில் துவங்கி ரூ13.13 லட்சம் வரை இதன் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரை பொருத்தவரை ரூ7.79 லட்சம் முதல் ரூ14.25 லட்சம் வரையில் விற்பனையாகி வருகிறது. கியா சோனட் காரை பொருத்தவரை ரூ7.79 லட்சம் முதல் ரூ14.89 லட்சம் வரையில் விற்பனையாகி வருகிறது. ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை ரூ7.72 லட்சம் முதல் ரூ13.18 லட்சம் வரையில் விற்பனையாகி வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரை பொருத்தவரை ரூ8.41 லட்சம் முதல் ரூ14.60 லட்சம் வரையில் விற்பனையாகிறது. நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை ரூ6 லட்சம் முதல் ரூ10.78 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

இன்ஜின்: மாருதி ஃப்ராங்க்ஸ் காரை பொருத்தவரை 1.2 லிட்டர் டூயல் ஜெட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. டாடா நெக்ஸான் காரில் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின்கள் உள்ளன. கியா சோனட் காரில் 1.2 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கிறது. ஹூண்டாய் வென்யூ காரை பொருத்தவரை 1.2 லிட்டர், 1.0 லிட்டர் டர்போ ஆகிய பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஆகிய பெட்ரோல் ஆப்ஷன் இன்ஜின்கள் உள்ளன. இதில் ஃப்ரான்க்ஸ் கார் மட்டும் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

பவர்: இந்த கார்களின் பெட்ரோல் மேனுவல் டாப் வேரியன்ட் இன்ஜின் பவர் குறித்து காணலாம். மாருதி ஃப்ரான்க்ஸ் கார் 99 பிஎச்பி பவரையும், டாடா நெக்ஸான், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ கார்கள் 118 பிஎச்பி பவரையும், மஹிந்திரா எக்ஸ்யூவி 109 பிஎச்பி பவரையும், நிஸான் மேக்னைட் 71 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்துகிறது.

டார்க்: மாருதி ஃப்ரான்க்ஸ் கார் 147.6 என்எம் டார்க் திறனையும், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனட் ஆகிய கார்கள் 172 என்எம் டார்க் திறனையும், டாடா நெக்ஸான் 170 என்எம் டார்க் திறனையும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 200 என்எம் டார்க் திறனையும், நிஸான் மேக்னைட் 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மைலேஜ்: மாருதி ஃப்ராங்க்ஸ் கார் 22.89 கி.மீ மைலேஜை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதே போல டாடா நெக்ஸான் கார் 17.5 கி.மீ மைலேஜை வழங்கும் எனவும், கியா சோனட் காரை பொருத்தவரை 19 கி.மீ மைலேஜை வழங்கும் எனவும், வென்யூ காரை பொருத்தவரை 18.1 கி.மீ மைலேஜை வழங்கும் எனவும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் 17 கி.மீ மைலஜை வழங்கும் எனவும், நிஸான் மேக்னைட் கார் 18.7 கி.மீ மைலேஜை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளவுகள்: நீளத்தை பொருத்தவரை நிஸான் மேக்னைட் மற்றும் டாடா நெக்ஸானை தவிர மற்ற அனைத்து கார்களும் 3995 மிமீ நீளம் கொண்டது. நிஸான் மேக்னைட் 3994 மிமீ நீளம் கொண்டது. டாடா நெக்ஸான் 3993 மிமீ நீளம் கொண்டது. அகலத்தை பொருத்தவரை ஃப்ரான்க்ஸ் கார் 1765 மிமீ அகலம், டாடா நெக்ஸான் 1811 மிமீ அகலம், கியா சோனட் கார் 1790 மிமீ அகலம், ஹூண்டாய் வென்யூ கார் 1770 மிமீ அகலம், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் 1821 மிமீ அகலம், நிஸான் மேக்னைட் கார் 1758 மிமீ அகலம் கொண்டது.

வீல் பேஸ்: வீல் பேஸை பொருத்தவரை மாருதி ஃப்ரான்க்ஸ் கார் 2520 மிமீ நீளம் கொண்டது. டாடா நெக்ஸான் கார் 1811 மிமீ நீளம் கொண்டது. கியா சோனட் கார் 2500 மிமீ நீளம் கொண்டது. ஹூண்டாய் வென்யூ 2500 மிமீ நீளமும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் 2600 மிமி நீளமும், நிஸான் மேக்னைட் 2500 மிமீ நீளமும் கொண்டது.

சஸ்பென்சன்: இந்த அனைத்து கார்களிலும் முன்பக்க வீலில் மெக்பெர்சன் ஸ்டூவர்ட் சஸ்பென்சன் தான் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஃப்ரான்க்ஸ், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ கார்களில் டார்ஸியன் பீம் சஸ்பென்சனும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் டாடா நெக்ஸான் காரில் ட்விஸ்ட் பீம் சஸ்பென்சனும், நிஸான் மேக்னைட் காரில் டெஸ்கோபிக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

பிரேக்குகள்: அனைத்து கார்களிலும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தை பொருத்தவரை மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் மட்டும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மற்ற கார்களில் டிரம் பிரேக் தான் வழங்கப்பட்டுள்ளது.

ஏர் பேக்குகள்: மாருதி ஃப்ராங்க்ஸ், கியா சோனட், ஹூண்டாய் வென்யூ ஆகிய கார்களில் 6 ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300, டாடா நெக்ஸான், மற்றும் நிஸான் மேக்னைட் காரில் 2 ஏர்பேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் மற்றும் பிரேக்கிங் தொழிற்நுட்பம்: இதில் அனைத்து கார்களிலும் ஏபிஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. ஃப்ரான்க்ஸ் தவிர மற்ற கார்களில் இபிடி தொழிற்நுட்பம் இருக்கிறது. டாடா நெக்ஸான், கியா சோனட் மற்றும் ஹூண்டாய் வென்யூ காரில் பிரேக் அசிஸ்ட் தொழிற்நுட்பம் இருக்கிறது. இஎஸ்பி எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஃப்ரான்க்ஸ், நெக்ஸான், சோனட் மற்றும் வென்யூ காரில் மட்டும் உள்ளது. டிராக்ஷன் கண்ட்ரோல் ஃப்ரான்க்ஸ், வென்யூ நெக்ஸான் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஒப்பீட்டின் மூலம் ஃப்ரான்க்ஸ் கார் மற்ற விஷயங்களில் போட்டியாளர்கள் காருக்கு நிகராக இருந்தாலும் மைலேஜ் விஷயத்தில் வெகு சிறப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் இதில் உள்ள மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பம் தான். இதனால் வருங்காலங்களில் மற்ற நிறுவனங்களும் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை தனது தயாரிப்பில் உட்புகுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 24, 2023, 15:47 [IST]
English summary
Maruti fronx comparison with nexon sonet venue xuv 300 nissan magnite
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+