எல்லாரும் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருந்த மாருதி காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டிசைன்தான் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஆக கருதப்படுகிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 100 பிஎஸ் மற்றும் 148 என்எம் ஆக உள்ளது.

மறுபக்கம் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த 2 இன்ஜின்களுடனும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்து ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் முதல் 22.89 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜை போல், வசதிகள் நிரம்பிய காராகவும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் திகழ்கிறது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில், 6 ஏர்பேக்குகள், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வசதியும், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், சிக்மா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஜெட்டா மற்றும் ஆல்பா என மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். நீங்கள் தேர்வு செய்யும் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகள் மாறுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 7.46 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வரும் மாதங்களில் விலை உயர்த்தப்படலாம்.
இந்த சூழலில், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார்களை நாம் சாலையில் அதிகளவு காண முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற போட்டி மாடல்களுக்கு, மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் மட்டுமல்லாது, மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) காருடனும், ஃப்ரான்க்ஸ் போட்டியிடும். மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக ஜிம்னி (Maruti Jimny) காரை வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








