ஃப்ரான்க்ஸ் கார நெனச்சு இந்தியர்கள் கொண்டாட கூடிய தருணம் இது... ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்க்கப்போகுது

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரை வெளிநாடுகள் சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை வந்து சேர இருக்கின்றது. இதுகுறித்தகூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதுமுக வருகையாக பலேனோ கார் மாடலின் கூபே வெர்ஷனாக கருதப்படும் ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) இருக்கின்றது. இந்த காரை சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 வாயிலாகவே இந்தியாவிற்கு முதல் முறையாக மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்த கையோடு விற்பனைக்கான பணிகளையும் அது தொடங்கியது. இதன் அடிப்படையில் தற்போது புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இந்த காரை விற்பனைக்கான அறிமுகத்தையும் அதிகாரப்பூர்வ மாருதி சுஸுகி செய்ய இருக்கின்றது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

பெருமைப்படுத்தும் தகவல்

இந்த நிலையிலேயே நம் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் ஓர் தகவல் வெளியாகி இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட ஃப்ரான்க்ஸ் கார் மாடலை உலக நாடுகளுக்கு சிலவற்றிற்கும் ஏற்றுமதி செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவலே நம்மை மகிழ்ச்சி அடையச் செய்து உள்ளது. கடந்த காலங்களில் இந்திய தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத சூழலே தென்பட்டது.

ஆனால், இப்போது அந்த நிலை முற்றிலும் மாறி இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. பல்வேறு நாடுகளுக்கு இப்போது இங்கிருந்தே வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றின் வரிசையில் விரைவில் ஃப்ரான்க்ஸும் இணைய இருக்கின்றது. இது மாருதி சுஸுகிக்கும், இந்தியர்களுக்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் சர்வதேச சந்தையில் இந்தியாவின் இந்த தயாரிப்பு பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

புக்கிங் குவியுது

தற்போது இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக புக்கிங் பணிகள் தொடங்கப்பட்ட ஐந்தே நாட்களில் 1,500க்கும் அதிகமான புக்கிங்குகளை அது அள்ளிக் குவித்துக் கொண்டது.இன்னும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரின் விலையை அறிவிக்கவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த அளவு பிரமாண்ட எண்ணிக்கையிலான புக்கிங்குகளை ஃப்ரான்க்ஸ் குவித்திருக்கின்றது. இதேமாதிரியான சூப்பர் வரவேற்பை பிற நாடுகளிலும் இந்த கார் மாடல் பெறும் என மாருதி சுஸுகி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து ஏற்றுமதி செய்யுறாங்க

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் முதலில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு இங்கிருந்து ஃப்ரான்க்ஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா காரை சமீபத்திலேயே லத்தின் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக ஃப்ரான்க்ஸ் காரையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் களமிறங்கி உள்ளது.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

இந்த காரையும் ஏற்றுமதி செய்ய போறாங்களாம்

இந்த காரைத் தொடர்ந்து தனது மற்றொரு புதுமுக வருகையான ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியையும் அது உலக நாடுகளுக்கு மாருதி ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரை தழுவி ஃப்ரான்க்ஸை உருவாக்கி இருந்தாலும், கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் கட்டுமஸ்தான தோற்றம் ஆகியவற்றில் இந்த காரை புதிய தயாரிப்பாக உருவாக்கி இருக்கின்றது. இதற்காக புதிய வேவ் ரக க்ரில் மற்றும் சூப்பரான எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன.

நியூ ஏஜ் ஏரோடைனமிக் தோற்றம்

இத்துடன், மிகவும் கவர்ச்சிகரமான ரூஃபும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூபே கார்களில் காணப்படுவதைப் போல் இதன் பின் பகுதி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சியான தோற்றத்திற்காகவே பலர் தற்போது நல்ல வரவேற்பை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நியூ ஏஜ் ஏரோடைனமிக் டிசைன் காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தையும் வழங்குகின்றது. இந்த கார் மாடலில் என்ன மாதிரியான எஞ்ஜின் இடம் பெற இருக்கின்றது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

வேற லெவல் அம்சங்களை தாங்கியிருக்கு

இதுகுறித்த தகவல் வெகு விரைவிலேயே அறிவிக்கப்பட உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் இரு விதமான மோட்டார் தேர்வுகளை இந்த காரில் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கின்றன. இதுதவிர, 9 அங்குல ஸ்மார்ட்ப்ளே ப்ரோ பிளஸ் அம்சம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த திரை எச்டி தொழில்நுட்பத்துடன், ஃபிங்கர் பிரிண்ட் அக்சஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவின் ஃபீடை காணும் வசதியுடன் இருக்குமாம்.

இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் திரை, செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களும் ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இத்துடன், ஒட்டுமொத்தமாக எட்டு விதமான நிற தேர்வுகளிலும் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

ஒற்றை மற்றும் இரட்டை நிற தேர்வுகள்

ஆர்க்டிக் ஒயிட், கிராண்டியர் கிரே, எர்தன் பிரவுன், எர்தன் பிரவுன் - ப்ளூயிஸ் பிளாக், ஒபுலண்ட் ரெட், ஒபுலண்ட் ரெட் - ப்ளூயிஸ் பிளாக், ஸ்பிளெண்டிட் சில்வர் மற்றும் ஸ்பிளெண்டிட் சில்வர் - ப்ளூயிஸ் பிளாக் ஆகியவை அந்த நிற தேர்வுகள் ஆகும். சிங்கிள் டோன் மற்றும் டூயல் டோன் என இருவிதமான ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, January 20, 2023, 10:58 [IST]
English summary
Maruti fronx exported foreign markets
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+