இந்த காரை இவ்வளவு பேர் வாங்குறாங்களா? டாடாவோட சூப்பரான காரையே பின்னாடி தள்ளிடுச்சே!
மாருதி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை டாடா நெக்ஸான் காரை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அறிமுகமான ஒரு சில மாதங்களிலேயே சிறப்பான வளர்ச்சியை இந்த கார் பெற்றுள்ளது.யாரும் எதிர்பாராத விதமான ஃபிரான்க்ஸ் கார் மிகப்பெரிய விற்பனையை பெற்று வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் தனது ஃபிரான்க்ஸ் காரை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிப்படுத்தியது. இந்த காரை மாருதி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஜனவரி மாதம் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்ட போது இந்த காருக்கான புக்கிங்கும் துவங்கப்பட்டது. அப்பொழுது ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை வரிசையாக புக்கிங் செய்தனர்.

தொடர்ந்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்த காரை புக் செய்த பலருக்கு காரின் டெலிவரி துவங்கியது. இதில் நல்ல விமர்சனம் காருக்கு கிடைத்ததால் பலர் இந்த காரை வாங்க ஆர்வமாக இருந்தனர். இதனால் ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரின் விற்பனை 5 சீட்டர் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள டாடா நெக்ஸான் மற்றும் டாடா பஞ்ச் ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளி ஹூண்டாய் கீரெட்டா மாருதி சுஸூகி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மூன்றாவதாக அதிக விற்பனையாகும் எஸ்யூவி காராக இந்த கார் மாறி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 13,220 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த மாருதி ஃபிரான்க்ஸ் காரை பொறுத்தவரை பலேனோ என்ற மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த இரு கார்களும் குறைந்த எடை கொண்ட ஹார்ட்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் சிறப்பான விற்பனை கடந்த மாதம் மாருதி நிறுவனம் ஆறு சதவீத வளர்ச்சியை பெற மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மாருதி ஃபிரான்க்ஸ் காரை பொறுத்தவரை ரூபாய் 7.46 லட்சம் முதல் ரூபாய் 13. 13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்தக் காரின் டிசைன் பெரும்பாலும் கிராண்ட் விட்டாரா காரை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு கே சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் 1.2 லிட்டர் நேஷனலி அஸ்பயர்டு இன்ஜினில் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் இந்த ஃபிரான்க்ஸ் காரை தனது பிரெஸ்ஸா காருக்கு கீழாக பொசிஷன் செய்து நெக்ஸா டீலர் ஷிப்புகள் மூலம் பிரீமியம் காராக விற்பனை செய்து வருகிறது. முன்னரே சொன்ன படி இந்த கார் பலேனோ காரை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இதன் உட்புறங்கள் பெரும்பாலும் பலேனோ காரில் இருப்பது போலவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்களும் பலேனோ காரை போலவே இருக்கிறது.
ஃபிரான்க்ஸ் காரை பொறுத்தவரை மாருதி நிறுவனத்திற்கு எஸ்யூவி செக்மெண்டில் நல்ல விற்பனை வளர்ச்சியை கொண்டு வந்துள்ளது. கடந்த ஜூலை மாத விற்பனையில் டாப்10 எஸ்யூவி கார் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா,ஃபிரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் இருக்கின்றன.ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை மாருதி எஸ்யூவி செக்மெண்டில் தொய்வுடன் இருப்பதாக இருந்த பேச்சு தற்போது மாறியுள்ளது.
டாட்டாவின் நெக்ஸான் காரை பொருத்தவரை அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி ரக காராக இருக்கிறது. ஆனால் நீண்ட காலமாக இந்த கார் அப்டேட் செய்யப்படாததால் இதன் விற்பனை மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. இந்நிலையில் நெக்ஸான் காரின் புதிய ஃபேஸ் லிப்ட் வெர்ஷனை டாடா நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் நீண்ட நாட்களாக எஸ்யூவி செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தவித்து வந்தது. மற்ற நிறுவனங்களில் கார்கள் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில் இந்த ஃபிரான்க்ஸ் கார் மூலம் இந்த நிறுவனம் மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications









