இதுதான் டாடா, ஹூண்டாய்க்கு முதலிடத்தைப் பிடிக்க செம சான்ஸ்! தயாரிப்பில் தள்ளாடப்போகும் மாருதி!
மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிகமான கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் நம்பர் 1 நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் வளர்ச்சி அபாரமானது. இந்திய மக்களின் நம்பிக்கையைப் பெற்று இந்நிறுவனம் பெறும் வளர்ச்சியை எட்டி பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்துடன் போட்டிப் போட பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன.
ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள் 2ம் இடத்திற்குத் தான் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றனர். மாருதியின் தயாரிப்பை நெருங்கக் கூட முடிவில்லை. ஆனால் இந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் தனது முழு கொள்ளளவில் கார்களை தயாரிக்க முடியாது என அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் உதிரிப்பாக தட்டுப்பாடு தான். கடந்த நிதியாண்டிலும் மாருதி நிறுவனத்திற்கு இந்த பிரச்சனை இருந்தது. இருந்தாலும் ஒரு வழியாகச் சமாளித்து 19.22 லட்சம் கார்களை கடந்த நிதியாண்டில் உருவாக்கியுள்ளது. எப்படியாவது 20 லட்சம் வாகனங்களையாவது தயாரித்து விட வேண்டும் என நோக்கில் பயணித்தும் முடியாமல் போனது.
இதற்கு முக்கியமான காரணம் எலெக்ட்ரானிக் உதிரிப் பாகம் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் தான். சில மாதங்கள் தேவையை விட அதிகமாகக் கிடைக்கிறது. பல மாதங்களில் தேவையை விட மிகக் குறைவாகவே கிடைக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் தன்மையைக் கணிக்க முடியாததால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 2023-24ம் நிதியாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். கடந்த மார்ச் மாதம் மாருதி நிறுவனத்தின் ஒட்டு மொத்த தயாரிப்பு 1,54,148 வாகனங்களாகும். இது கடந்தாண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும் போது 6 சதவீதம் குறைவு தான்.
ஆனால் பயணிகள் வாகனங்களை மட்டும் கணக்கிட்டால் 1,50,820, வாகனங்கள் தயாராகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மார்ச் மாதம் 1,59,211 வாகனங்கள் தயாரித்துள்ளது. இப்படியாக மார்ச் மாதமே தயாரிப்பில் மாருதி நிறுவனம் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்குக் காரணம் உதிரிப்பாக தட்டுப்பாடு தான் எனக் கூறப்படுகிறது.

உதிரிப்பாக தட்டுப்பாட்டிற்கு முக்கியமான காரணம் உக்ரைன் தான். உலகிலேயே தென்கொரியா, சீனா ஆகிய நாடுகள் தான் செமி கண்டெக்டர் சிப்களை தயாரிக்கின்றனர். அதைத் தயாரிக்க நியான் கேஸ் தேவை, இந்த நியான் கேஸ் உக்ரைன் நாட்டில் அதிகமாக இரும்பு தயாரிக்கப்படும் போது உப பொருளாகக் கிடைக்கிறது.
இது தான் பெரும்பான்மையாக உலகிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை வைத்துத் தான். செமி கண்டெக்டர் சிப்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் போர் காலத்திற்குப் பிறகு இது கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் செமி கண்டெக்டர் சிப் தயாரிப்பு வெகுவாக குறைந்து சீரற்ற நிலையில் இருக்கிறது.
இதனால் ஆட்டோமொபைல் மட்டுமல்ல செல்போன் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியாகப் பாதிக்கப்பட்டதில் மாருதியும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இதிலிருந்து எப்படி ஆட்டோமொபைல் துறை மீண்டு வரப்போகிறது என்பது தெரியவில்லை. இதற்காகப் பலர் பல ஐடியாக்களை செய்தாலும் இதுவரை தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு யாரும் தயாரிப்பைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன?: இந்த விவகாரத்தில் செமி கண்டெக்டர்களை அதிகம் தயாரிக்க ஒரே வழி சீரான நியான் கேஸ் கிடைப்பது தான். ஆனால் அதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் செமி கண்டெக்டர்களை நியான் கேஸ் இல்லாமலேயே தயாரிக்கும் தொழிற்நுட்பத்தை கண்டறிய வேண்டும். இது ஒன்று தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications