2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது

மாருதி நிறுவனம் 2.5 கோடி கார்களை தயாரித்து ஒரு சாதனை மைல் கல்லைப் பதித்துள்ளது. 1983ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் அதிகமான கார்களை மாருதி நிறுவனம் தான் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இன்று அந்நிறுவனம் வெளியிட்ட எல்லா கார்களும் கிட்டத்தட்ட ஹிட்டாகி பெரும் விற்பனையைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் நேற்று தனது 2.5 கோடியாவது வாகனத்தைத் தயாரித்து மிக முக்கியமான மைல் கல்லை உருவாக்கியுள்ளது. இதை அந்நிறுவனம் கடந்த ஜனவரி 9ம் தேதி சாதித்துள்ளது.

2.5 கோடி இதயங்களை வென்ற மாருதி! டாடா, ஹூண்டாய் எல்லாம் பக்கத்துலகூட வர முடியாது

மாருதி நிறுவனம், சுஸூகி மோட்டார் கார்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 1983ம்ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. அப்பொழுது தனது முதல் காராக மாருதி 800 காரை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கார்கள் என்றாலே மிகப்பெரிய கார்கள், விலையுயர்ந்தவை என இருந்த காலகட்டத்தில் சிறிய ரக குறைந்த விலையில் மாருதி 800 வந்தது மக்களை ஆச்சரியப்படுத்தியது.

இந்த கார் இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. இந்திய மக்களிடம் கார் வாங்கும் திறனையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. அன்று துவங்கிய மாருதியின் வளர்ச்சி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில் இன்று அசைக்கவே முடியாத அளவிற்கு இந்நிறுவனம் வளர்ந்துவிட்டது.

மாருதி நிறுவனம் முதன் முறையாகக் கடந்த 2006ம் ஆண்டும் தனது புதிய மைல் கல்லாக 50 லட்சம் கார்களை தயாரித்தது. இது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் மாருதி நிறுவனம் தனது தயாரிப்புகளை விஸ்தரிப்பு செய்தது வேகன் ஆர், ஸ்விஃப்ட், ஆல்டோ என புதிய தயாரிப்புகளைக் களம் இறக்கியது. அத்தனையும் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

கடந்த 2010ம் ஆண்டு மாருதி தனது புதிய பரிமாணத்தைத் துவங்கியது. இந்தியாவிலேயே முதன் முறையாக சிஎன்ஜி கார்களை நேரடியாகத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரத் துவங்கியது. வெளிச்சந்தையில் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி கார்களாக மாடிஃபிகேஷன் செய்வது அதிகரித்த சூழ்நிலையில் மாருதி நிறுவனமே ஏன் அதைச் செய்யக்கூடாது என நினைத்தது. அதை வெற்றிகரமாகச் செய்து முடித்து மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்தும் போது மாருதி நிறுவனமே எதிர்பாராத வரவேற்பு சிஎன்ஜி ரக கார்களுக்கு கிடைத்தது.

2012ம் ஆண்டு அடுத்த முக்கிய மைல் கல்லை இந்நிறுவனம் எப்படி பிடித்தது. 1983ல் துவங்கி 2006ல் முதல் 50 லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளிலேயே அடுத்த 50 லட்சத்தைக் கடந்தது. அதாவது 1 கோடி விற்பனை என்ற மைல் கல்லை 2012ம் ஆண்டே எட்டி பிடித்தது. அப்பொழுது மாருதி நிறுவனத்தின் வளர்ச்சி யாரும் எதிர்பாராத விதமாக அபார வளர்ச்சியாக இருந்தது.

இந்த ஒரு கோடி விற்பனை இரட்டிப்பாக்க மாருதி நிறுவனத்திற்கு அதிக காலம் எல்லாம் பிடிக்கவில்லை. அடுத்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பானது. அதாவது 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மாருதி நிறுவனம் தனது 20 மில்லியன் அதாவது 2 கோடியாவது வாகனத்தைத் தயாரித்தது. அதிலிருந்து சரியாக 2.5 ஆண்டுகள் தான் அதற்குள் மாருதி நிறுவனம் இந்த ஜனவரி மாதமே தனது 2.5 கோடியாவது வாகனத்தைத் தயாரித்துவிட்டது. 2.5 ஆண்டுகளில் 50 லட்சம் வாகனங்களைத் தயாரித்துவிட்டது.

மாருதி நிறுவனம் தற்போது இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. தற்போது 17 மாடல் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்திற்குச் சிறிய ரக கார்கள்தான் பிரதானமாக இருக்கிறது. ஆனால் தற்போது மக்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டதால் அந்த ரக கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகிறது. தற்போது இந்நிறுவனத்திடம் கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, ஜிம்னி, ஃப்ராங்க்ஸ் ஆகிய கார்கள் எஸ்யூவி ரக கார்களாக உள்ளன.

உலக அளவில் இந்தியா கார்களுக்கான 3வது பெரிய மார்கெட்டாக இருக்கிறது. இதனால் பல நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அதனால் அவர்களுடன் போட்டியிடும் கட்டாயத்தில் மாருதி நிறுவனம் இருக்கிறது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமான கார்கள் விற்பனையாகிறது. தற்போது மாருதி இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தில் தான் இருக்கிறது.

இரண்டாவது இடத்தை பொருத்தவரை ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. அதைத் தொடர்ந்து டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளன. தற்போது அதிகரித்து வரும் இவி மார்கெட் டிரெண்ட் காரணமாகப் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து சந்தைக்குக் கொண்டு வரத் துவங்கிவிட்டன. இந்தியாவில் இந்த செக்மெண்டில் டாடா தான் நம்பர் இடத்தில் இருக்கிறது. இது போக மஹிந்திரா இந்த களத்தில் குதித்துள்ளது. மாருதி நிறுவனம் இதில் சற்று தாமதமாக தற்போது தான் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இவிஎக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Maruti hits 25 million domestic sales made a big milestone
Story first published: Tuesday, January 31, 2023, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X