பேங்குல இருக்குற பணத்தை எல்லாம் எடுத்து வைங்க! செலவு பண்ணுற நேரம் வந்துடுச்சு!

இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் வரும் ஜூலை மாதம் மிக முக்கியமான மாதமாக அமைய உள்ளது. மூன்று முக்கியமான புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. மாருதி ஹூண்டாய் கியா ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு காரை அறிமுகப்படுத்தப் போகிறது. இதைப்பற்றித் தான் இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.

மாருதி இன்விக்டோ: மாருதி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடல் காராக இந்த இன்விக்டோ கார் அறிமுகமாக உள்ளது. இது ஒரு ப்ரீமியம் எம்பிவி ரக காராகும். டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. சுஸூகி-டொயோட்டோ இடையேயான சர்வதேச பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தின்படி இந்த கார் பகிரப்படுகிறது.

upcoming cars july 2023

இதற்கு முன்பு டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரேடர் ஆகிய கார்களை மாருதி நிறுவனத்துடன் பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களில் பகிர்ந்திருந்தது. தற்போது இன்னோவா ஹைகிராஸ் காரின் அடிப்படையில் மாருதி நிறுவனம் இன்விக்டோ காரை தயாரித்துள்ளது.

இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த கார் ஜூலை மாதம் 5ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தக் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஹைபிரிட் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ரூ 18.55 லட்சம் முதல் ரூ 30 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming cars july 2023

ஹூண்டாய் எக்ஸ்டர்: ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டெர் காரை ஜூலை மாதம் 10ம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தக் கார் இந்தியாவில் விற்பனையாகும் மற்ற ஹூண்டாய் கார்களின் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதில் 8 இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அட்வான்ஸ் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், சன்ரூப், அறுபது கனெக்டட் அம்சங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் மார்க்கெட்டில் உள்ள டாட்டா பஞ்ச், மாருதி சுஸூகி இக்னீஷ், மாருதி சுஸூகி ஃப்ரான்க்ஸ், ரெனால்ட் கைகர், சிட்ரோன் சி3, நிஸான் மேக்னெட் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார் இந்தியாவில் ரூ6 லட்சம் என்ற அடிப்படை விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

upcoming cars july 2023

கியா செல்டோஸ் ஃபேஸ்லிப்ட்: கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் வெளியிட்டு விட்டது. இந்த காரை தற்போது வரும் ஜூலை மாதம் 4ம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. இதில் முக்கிய மாற்றமாக இதன் முன் பக்க புரோஃபைல் வேறு மாதிரியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதன் ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெல்லைட் மற்றும் டேட் டைம் ரன்னிங் லைட் ஆகியன மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பின்பக்க எல்இடி டெய்ல் லைட் டிசைன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சமாக இதில் உள்ள டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பெரிய சைஸில் வழங்கப்பட உள்ளது. ஏசி வென்ட்கள் சிறிய அளவில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் ரூபாய் 10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மூன்று கார்கள் இரண்டு கார்கள் முற்றிலும் புதிய கார் கியா நிறுவனத்தின் கார் மட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று காருக்கும் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த கார்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய வாகனப் புரட்சியே ஏற்படும் என நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 20, 2023, 13:00 [IST]
English summary
Maruti invicto hyundai exter kia seltos facelift upcoming cars in july
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X