சுமார் ரூ.25 லட்சத்தில் விலை கொண்ட புதிய மாருதி கார்!! அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு? ஷோரூமில் இருந்து வீடியோ!
மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) காரின் விலை குறைவான வேரியண்ட்டான ஸெட்டா பிளஸ் எப்படிப்பட்டதாக இருக்கும்? எந்தெந்த அம்சங்களுடன் இந்த வேரியண்ட்டை வாங்கலாம்? என்ற கேள்விகள் உங்களது மனதிற்குள் ஓடி கொண்டிருக்கலாம். அந்த கேள்விகளை எல்லாம் களையெடுக்கும் விதமாக இன்விக்டோ ஸெட்டா பிளஸ் வேரியண்ட் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபலமான டொயோட்டா இன்னோவா காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி நிறுவனம் எம்பிவி கார் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த ஜூலை மாத துவக்கத்தில் இன்விக்டோ என்ற பெயரில் தனது விலைமிக்க எம்பிவி காரை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது.

எந்த அளவிற்கு விலைமிக்கது என்றால், மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களிலேயே இன்விக்டோ விலைமிக்கது ஆகும். இந்த விலைமிக்க மாருதி சுஸுகி காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு இன்விக்டோ கார்கள் வர ஆரம்பித்துள்ளன.
எண்ட்ரீ-லெவல் இன்விக்டோ ஸெட்டா பிளஸ் காரின் வீடியோ ஷோரூம் ஒன்றின் வளாகத்தில் இருந்து வெளிவந்துள்ளது. மாருதி சுஸுகி இன்விக்டோ கார் மொத்தமாகவே வெறும் 2 வேரியண்ட்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸெட்டா பிளஸ் மற்றும் ஆல்பா என்பவை அவை ஆகும். இதில் டாப் வேரியண்ட்டான ஆல்பா 7 இருக்கைகளுடன் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஸெட்டா பிளஸ் வேரியண்ட் 7 அல்லது 8 இருக்கை தேர்வுகளில் கிடைக்கும்.

இதில் ஸெட்டா பிளஸ் 8-இருக்கை வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 7 இருக்கைகள் உடன் ஒப்பிடுகையில் 8 இருக்கைகள் உடன் ஸெட்டா பிளஸ் வேரியண்ட்டின் விலை சற்று அதிகம் என்பதை ஆரம்பத்திலேயே கூறிக்கொள்கிறோம். ஸெட்டா பிளஸ் 8-இருக்கை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.24.84 லட்சமாக உள்ளது.
கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில் காட்சித்தரும் இந்த குறிப்பிட்ட இன்விக்டோ ஸெட்டா பிளஸ் கார் நெக்ஸா நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளதாக வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் தெரிவிப்பதை கேட்க முடிகிறது. இந்த பெட்ரோல்-ஹைப்ரீட் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 188 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக இருப்பினும், விலைமிக்க கார் என்பதால் நெக்ஸா 3-பிளாக் டிஆர்எல்-கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் காரின் முன்பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங்குகள் இல்லை. இந்த காரில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 360-டிகிரி கேமராவும் இல்லை. ஆனால் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமரா உள்ளது.
உடல் நிறத்தில் கதவு கைப்பிடிகளை கொண்டிருக்கும் இந்த காரின் பின்பக்கத்தில் 3-பிளாக் எல்இடி டெயில்லைட்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவை பார்க்க முடிகிறது. அதேபோல் பின்பக்க கண்ணாடியை துடைப்பதற்கும் வைபர் உள்ளது. ஆனால் டிஃபாக்கர் இல்லை. வீடியோவில், காரின் உட்புற பகுதியும் காட்டப்பட்டுள்ளது. உட்பக்கத்தில், டேஸ்போர்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

ஆனால் மற்ற வேரியண்ட்களில் 9-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது. அதேபோல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அனலாக்கும் 7-இன்ச்சில் மட்டுமே டிஜிட்டல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்ட் என்பதால், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இல்லை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மாருதி சுஸுகியில் விலைமிக்க காரை வாங்க விரும்புவோர்க்கு இன்விக்டோ உண்மையில் நல்ல சாய்ஸ் ஆகும். இந்த காரின் குறைந்த விலை வேரியண்ட் எப்படி இருக்கும் என்பதை இந்த செய்தியில் பார்த்தோம். ஆனால் எங்களை கேட்டால், இன்விக்டோ போன்ற விலைமிக்க காரை வாங்க தயாராகிவிட்டீர்கள் என்றால், இன்னும் சில லட்சங்களை செலவு செய்து டாப் வேரியண்ட்டையே வாங்கலாமே...


Click it and Unblock the Notifications
