ஆஸ்திரேலியா மக்கள் விரும்பும் இந்திய கார்கள்! இங்க தயாரிச்சு அங்க அனுப்ப திட்டம்!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியிடம் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்தது மாருதி ஜிம்னி மற்றும் ப்ராங்க்ஸ் என்ற காம்பேக்ட் எஸ்யூவி கார் தான். இந்த காரை கடந்த ஜனவரியில் டில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இரண்டு கார்களுக்களுக்கும் ஏராளமான வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு கார்களும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே அதற்கான புக்கிங் துவங்கியது.

மக்கள் ரூ25 ஆயிரம் முன்பணம் செலுத்தி மாருதி ஜிம்னி காரையும், ரூ11 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஃப்ராங்க்ஸ் காரையும் புக்கிங் செய்யலாம் என மாருதி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வரை ஃபிராங்க்ஸ் காருக்கு 6500 புக்கிங்களும், ஜிம்னி 5 டோர் எஸ்யூவி காருக்கு 18 ஆயிரம் புக்கிங்களும் குவிந்துள்ளன தற்போது இந்த கார்கள் எப்பொழுது டெலிவரி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா மக்கள் விரும்பும் இந்திய கார்கள்! இங்க தயாரிச்சு அங்க அனுப்ப திட்டம்!

மாருதி நிறுவனம் தனது ஜிம்னி டோர் காரை கூர்கானில் உள்ள தனது ஆலையிலும், ஃப்ராங்க்ஸ் காரை குஜராத்தில் உள்ள தனது ஆலையிலும் தயாரித்து வருகிறது. தற்போது வெளியான தகவலின்படி இந்த இரண்டு கார்களையும் மாருதி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரை இந்தியாவில் தயாரித்து இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஏற்கனவே ஜிம்னி காரின் டோர் வெர்ஷன் இந்தியாவில் தயாராகி சர்வதேச அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. அதே காரை பெரிதாக்கி 3955 மிமீ நீளம், 1645 மிமீ அகலம், 1720 மிமீ உயரம் கொண்டது. இந்த கார் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 105 பிஎச்பி பவரையும் 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் சுஸூகுில் ஆல் கிரிப் 4X4 சிஸ்டம் மற்றும் லோ ரேஞ்ச் கியர் பாக்ஸில் வீல் டிரைவ் ஹை, 4 வீல் டிரைவ் ஹை, 4 வீல் டிரைவ் லோ ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

ஆஸ்திரேலியா மக்கள் விரும்பும் இந்திய கார்கள்! இங்க தயாரிச்சு அங்க அனுப்ப திட்டம்!

ஃப்ராங்க்ஸ் காரை பொருத்தவரை பலேனோ ஹேட்ச் பேக் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்த காரின் வெளிப்புறத்தோற்றம் பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாரா கார்களின் கலவை போல இருக்கிறது.

இந்த ஃப்ராங்க்ஸ் கார் 2 இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் 100 பிஎச்பி பவரையும் 148 என்எம்டா்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 5ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுவே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜினை பொருத்தவரை 89 பிஎச்பி பவரையும் 113 எனஜ்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Thursday, February 23, 2023, 18:30 [IST]
English summary
Maruti jimny and fronx suv to be exported to australia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+