கடலை மிட்டாய் மாதிரி புக்காகும் மாருதி ஜிம்னி.. போறபோக்க பாத்த ரோடு ஃபுல்லா இந்த காருதான் இருக்கும்போலையே!

மாருதி சுஸுகி ஜிம்னி காரை இந்தியர்கள் வெறிக் கொண்டு புக் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போதே 23,500க்கும் அதிகமான புக்கிங்கை ஜிம்னி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

"எந்த காருக்கும் இப்படி ஒரு புக்கிங் வரவேற்பு கிடைத்திருக்காது" என கூறும் அளவிற்கு மாருதி சுஸுகியின் புதிய வரவான ஜிம்னி காருக்கு இந்தியாவில் புக்கிங் குவிந்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தொளிவாகக் கூற வேண்டுமானால் கூரையை பிய்துக் கொண்டு அக்காருக்கு புக்கிங் கொட்டோகொட்டென கொட்டிக் கொண்டிருக்கின்றது. இது நிறுவனமே எதிர்பார்த்திராத அமோக வரவேற்பு ஆகும்.

மாருதி ஜிம்னி

மாருதி சுஸுகி ஜிம்னிக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு மிக அதிகம். இந்த நிலையிலேயே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக ஜிம்னியை இந்திய சந்தையில் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. உலகளவில் இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டே அவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து இப்போதே மாருதி சுஸுகி, ஜிம்னியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கின்றது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய அன்றைய தினமே அக்காருக்கான புக்கிங்குகளும் தொடங்கிவிட்டன. இந்த பணிகள் தொடங்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

மாருதி ஜிம்னி

இந்த நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத அளவில் ஜிம்னிக்கு புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 23,500 க்கும் அதிகமான புக்கிங்குகளையே மாருதி ஜிம்னி பெற்றிருக்கின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஜிம்னிக்கு நிலவும் மிக சிறப்பான டிமாண்டை வெளிக்காட்டும் வகையிலேயே இந்த உயரிய புக்கிங் எண்கள் உள்ளன.

மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னிக்கான விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஒரு சில வாரங்களில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலைகூட அறிவிக்கப்படாத நிலையிலேயே 23 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கை ஜிம்னி குவித்திருக்கின்றது. அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாருதி ஜிம்னி

ஆகையால், ஜிம்னிக்கான காத்திருப்பு காலம் மஹிந்திரா தார் போல பலமடங்கு அதிகரித்துக் காணப்படலாம். இந்த காருக்கே போட்டி ஜிம்னி போட்டியாக களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஃபோர்ஸ் கூர்காவிற்கும் அது போட்டியாக உள்ளது. மாருதி சுஸுகி வரும் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஜிம்னியின் விலையையும், டெலிவரி பணிகளையும் தொடங்கப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே மாருதி சுஸுகி ஜிம்னியில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 134 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் ஜிம்னியில் வழங்கப்பட இருக்கின்றது.

மாருதி ஜிம்னி

பாதுகாப்பிற்காக இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர இன்னும் பல அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

இதேபோல் பிரீமியம் அம்சங்களும் ஜிம்னியில் அதிகமாக வழங்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், 9 அங்குல டச் ஸ்கிரீன் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய அம்சங்களும் ஜிம்னியில் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

இந்த காரின் விலை அறிவிக்கும் முன்னரே இந்தியர்கள் பொட்டிக் கடையில் கடலை மிட்டாய் வாங்குவதைபோல் புக் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதன் விலை அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த வரவேற்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நாங்கள் யூகிக்கின்றோம். ஆகையால், தாருக்கு இது மிக சிறந்த போட்டியாளனாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, March 23, 2023, 20:11 [IST]
English summary
Maruti jimny booking crosses 23500
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X