களத்துல இறங்குது மாருதி... மஹிந்திராலாம் ஓரமா நில்லு... ஷோரூம்ல இப்பவே கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில், மாருதி சுஸுகி ஜிம்னி கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து வரும் மே மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை இந்த காரை கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Maruti Jimny

கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) ஷோரூம்களில், ஜிம்னி காரை காட்சிக்கு வைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. பெங்களூர், மும்பை, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், அகமதாபாத், சண்டிகர், லூதியானா, ராய்ப்பூர், புவனேஷ்வர் மற்றும் மொகாலி என மொத்தம் 9 நகரங்களில் உள்ள குறிப்பிட்ட நெக்ஸா ஷோரூம்களில், மாருதி சுஸுகி ஜிம்னி தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் கார் என்பதால், அதனை காண ஷோரூம்களில் பலர் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவும், ஏற்கனவே சுமார் 24 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்திருப்பதாலும், மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

Maruti Suzuki Jimny

மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர், K15B பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 105 ஹெச்பி பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுஸுகி நிறுவனத்தின் ஆல்க்ரிப் ப்ரோ 4 வீல் டிரைவ் சிஸ்டமும் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகிய வசதிகளும் (Features) மாருதி சுஸுகி ஜிம்னி காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் 10-13 லட்ச ரூபாய் என்ற விலையில் (Price) மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். இதை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவி காருடன் மாருதி சுஸுகி ஜிம்னி போட்டியிடும். புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கார் வெகு சமீபத்தில்தான் 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

மாருதி சுஸுகி ஜிம்னி காரின் வருகைக்கு பின்னர், மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு குவிந்து வரும் முன்பதிவுகள் அதை கிட்டத்தட்ட உறுதி செய்வது போல் இருக்கின்றன.

Article Published On: Thursday, March 30, 2023, 22:52 [IST]
English summary
Maruti jimny dealer display all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+